கல்லீரல் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்கும் உலர்திராட்சை...

உங்கள் ஆரோக்கியத்தை சரியாக வைத்திருக்க பல விஷயங்களை கவனித்துக்கொள்வது முக்கியம். முக்கியமாக இந்த முழு அடைப்பு காலத்தில் உங்கள் கல்லீரலை பாதுகாப்பது மிக முக்கியமான விஷயம், இந்நிலையில் உங்கள் கல்லீரலை பாதுகாக்க உதவும் உலர்திராட்சை குறித்து இந்த பதிவில் நாம் தொகுத்துள்ளோம்.

Last Updated : May 1, 2020, 01:57 PM IST
கல்லீரல் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்கும் உலர்திராட்சை... title=

உங்கள் ஆரோக்கியத்தை சரியாக வைத்திருக்க பல விஷயங்களை கவனித்துக்கொள்வது முக்கியம். முக்கியமாக இந்த முழு அடைப்பு காலத்தில் உங்கள் கல்லீரலை பாதுகாப்பது மிக முக்கியமான விஷயம், இந்நிலையில் உங்கள் கல்லீரலை பாதுகாக்க உதவும் உலர்திராட்சை குறித்து இந்த பதிவில் நாம் தொகுத்துள்ளோம்.

உலர்திராட்சை சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடைக்கின்றன. குறிப்பாக கல்லீரலுக்கு மிக அதிக நன்மை பயக்கிறது. கல்லீரல் நம் உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது, மேலும் இது நம் உடலின் கெட்ட பொருளை முற்றிலுமாக நீக்கி நமது செரிமான சக்தியை மேம்படுத்துகிறது.
 
கல்லீரல் பாதிப்புக்கான அறிகுறிகள் விரைவில் காணப்படவில்லை என்றாலும், ஒவ்வொரு நாளும் திராட்சை உட்கொண்டால், கல்லீரல் நன்றாகவே இருக்கும், அது ஒருபோதும் எந்தத் தீங்கும் ஏற்படாது என கூறப்படுகிறது. 

அடிவயிற்றில் வீக்கம், உடலில் வெள்ளை புள்ளிகள், மஞ்சள் கண்கள், வாயில் துற்நாற்றம், கண்னை சுற்றி வரும் கருவலையம் ஆகியவை கல்லீரல் செயலிழப்புக்கான முக்கிய அறிகுறிகளாகும். இது மக்களிடையே விரைவாகக் காணப்படுவதில்லை. ஆனால் இந்த பிரச்சனைக்கு சரியான நேரத்தில் சிகிச்சையளிக்கப்படாவிட்டால், அது நமக்கு மிகவும் ஆபத்தானதாக அமையும் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. 

ஆல்கஹால் குடிப்பது மற்றும் அதிகப்படியான கொழுப்பை உட்கொள்வது கல்லீரல் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்நேரத்தில் உலர்திராட்சை கல்லீரலுக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது.

தினமும் அதன் தண்ணீரை உட்கொள்வதன் மூலம், கல்லீரல் மற்றும் வயிறு தொடர்பான கடுமையான பிரச்சினைகளை நீக்க முடியும். 

இந்த செயல்முறைக்கு நீங்கள் உலர்திராட்சையை ஒரு தொட்டியில் இட்டு கொதிக்க வைத்து ஒரு இரவு முழுவதும் மூடி வைக்க விட வேண்டும். பின்னர் இந்த தண்ணீரை ஒரு நாளைக்கு இரண்டு முறை குடிக்க வேண்டும். காலை உணவுடன் திராட்சை சேர்த்துக்கொள்ளுதல் நல்லது, இதைச் செய்வதன் மூலம், உங்கள் கல்லீரல் சிறப்பாக இருக்கும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

Trending News