உங்கள் குழந்தையின் உயரம் அதிகரிக்க... பலனளிக்கும் ‘5’ டிபஸ்..!

Tips to Increase the Height of Your Children: உங்கள் குழந்தைகளின் உயரம் அதிகரிக்கவில்லை என்றால், கவலை வேண்டாம். உங்கள் குழந்தைகளின் உயரத்தை அதிகரிக்க 5 இயற்கை வழிகளை அறிந்து கொள்ளலாம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 29, 2023, 03:32 PM IST
  • குழந்தையின் உயரம் அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் என்பது பல பெற்றோர்களுக்கு தெரிவதில்லை.
  • சப்ளிமெண்ட் மாத்திரைகள் கொடுப்பதைத் தவிர்க்கவும்.
  • உடற்பயிற்சிகளும் உங்கள் குழந்தையின் உயரத்தை சில அங்குலங்கள் அதிகரிக்க உதவும்.
உங்கள் குழந்தையின் உயரம் அதிகரிக்க... பலனளிக்கும் ‘5’ டிபஸ்..! title=

நல்ல உயரமும் உடல் வளர்ச்சியும் உங்கள் ஆளுமையின் முக்கிய அங்கமாகும். நல்ல உயரம் இருக்க வேண்டும் என்பது தான் எல்லோருக்கும் விருப்பமானதாக இருக்கும். ஆனால், இன்று வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கம் காரணமாக உயரம் பலருக்கு குறைவாக உள்ளது. இதனால் பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் உயரம் மற்றும் உடல் வளர்ச்சி குறித்து மிகவும் கவலைப்படும் நிலை உள்ளது. பெற்றோர்களாகிய நாம் நம் குழந்தைகளுக்கு அவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு சிறந்ததைச் செய்ய வேண்டும்.  உங்கள் குழந்தையின் உயரத்திற்கு வரும்போது, ​​அதற்காக என்ன செய்ய வேண்டும் என்பது பல பெற்றோர்களுக்கு தெரிவதில்லை. சுற்றுசூழல், உணவு மற்றும் உடற்பயிற்சி போன்ற பல காரணிகள் உங்கள் குழந்தையின் உயரத்தை பாதிக்கிறது. ஆனால் உங்கள் குழந்தையின் உயரத்தை நிர்ணயிப்பதில் 60 முதல் 80 சதவிகிதம்  மரபணுக்களை சார்ந்து உள்ளது. இருப்பினும், சிறு வயதிலிருந்தே சரியான ஊட்டச்சத்து மற்றும் உணவை வழங்குவது, சில உடற்பயிற்சிகளும் உங்கள் குழந்தையின் உயரத்தை சில அங்குலங்கள் அதிகரிக்க உதவும். இந்தக் கட்டுரையில், உங்கள் குழந்தையின் உடல் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும் அத்தகைய 5 குறிப்புகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

1. குழந்தைகளுக்கு சத்தான உணவைக் கொடுங்கள்

பெரியவர்களாக இருந்தாலும் சரி, குழந்தைகளாக இருந்தாலும் சரி, அனைவருக்கும் சமச்சீர் மற்றும் சத்தான உணவு என்பது அடிப்படைத் தேவை. அனைத்து ஊட்டச்சத்துக்களும் நிறைந்த ஒரு நாளைக்கு 3 வேளை உணவு மற்றும் 2 சிற்றுண்டிகள் உங்கள் மூளை (Brain Health) மற்றும் உடல் வளர்ச்சிக்கு உதவுகின்றன. உங்கள் குழந்தைக்கு சரியான ஊட்டச்சத்தை வழங்க அவரது உணவில் வெவ்வேறு உணவுகளைச் சேர்க்க முயற்சிக்கவும். புதிய பழங்கள், முழு தானியங்கள், பால் மற்றும் புரத மூலங்களை அவர்களின் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இனிப்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவை தவிர்க்கவும். 

2. சப்ளிமெண்ட் மாத்திரைகள் கொடுப்பதைத் தவிர்க்கவும்

குழந்தைகள் போதுமான ஊட்டச்சத்துக்கல் கிடைக்கவில்லை என்ற சந்தேகத்தில், சில பெற்றோர்கள் அவர்களுக்கு உண்மையில் தேவையில்லாத கூடுதல் பொருட்களை வழங்குகிறார்கள். சப்ளிமெண்ட்ஸ் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு அல்லது வளர்ச்சியில் சிக்கல்கள் இருந்தால் மட்டுமே, அதுவும் ஒரு மருத்துவரை அணுகிய பின்னரே கொடுக்கப்பட வேண்டும். அவர்களுக்கு உணவின் மூலம் ஊட்டச்சத்துக்களை வழங்குவதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்.

3. உடற்பயிற்சியும் உதவியாக இருக்கும்

உங்கள் பிள்ளைகளுக்கு சிறுவயதிலிருந்தே தினமும் உடற்பயிற்சி செய்யக் கற்றுக்கொடுப்பது உங்கள் குழந்தையின் உயரத்தை அதிகரிக்க நீங்கள் செய்யக்கூடிய சிறந்த விஷயங்களில் ஒன்றாகும். உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருப்பது உடல் உயரத்தை அதிகரிப்பது உட்பட பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. குழந்தைகள் கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும் என்று எதிர்பார்ப்பது சரியல்ல. ஆனால் நீட்சி பயிற்சிகள், யோகா மற்றும் தியானம் ஆகியவை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் ஆரோக்கியமாக இருக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உடற்பயிற்சி செய்வது முதுகுத்தண்டை நீட்டுகிறது மற்றும் உங்கள் குழந்தையின் தோரணையை மேம்படுத்துகிறது. 

மேலும் படிக்க | இதயம் உங்களுடையதாக இருந்தாலும், இவை உங்களுக்கு தெரியாது! நீண்ட ஆயுள் வாழ டிப்ஸ்

4. தொங்கும் வகையிலான பயிற்சிகள்

குழந்தைகளின் உயரத்தை அதிகரிக்க தொங்கும் பயிற்சிகள் எப்போதும் சிறந்த வழியாக கருதப்படுகிறது. தொங்கும் முதுகெலும்பு நீளமாகிறது, இது அவர்களின் உயரத்தை அதிகரிக்கிறது. தொங்கும் பயிற்சியில் தொடர்ந்து ஈடுபடுவது காலப்போக்கில் உயரத்தை அதிகரிக்கும். இது தவிர, தசைகளை வலுப்படுத்தவும் இது உதவும்.

5. இரவில் நல்ல ஆழ்ந்த தூக்கம் முக்கியம்

பெரும்பாலானோர் வாழ்க்கையில் சிறப்பான இரவு தூக்கத்தின் முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிடுகிறார்கள், இது உடல் நலப் பிரச்சினைகளின் அபாயத்தை அதிகரிக்கிறது. 7-8 மணிநேர தூக்கம் அனைவருக்கும் அவசியம். குழந்தைகள் அதிக சுறுசுறுப்பாக இருப்பதால் பெரியவர்களை விட அதிக தூக்கம் தேவை. உங்கள் பிள்ளைகள் சரியான நேரத்திற்கு இரவு உறங்கச் செல்வதையும், இரவு முழுவதும் நிம்மதியாக உறங்குவதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அவர்கள் தூங்குவதில் சிக்கல் இருந்தால், உங்கள் மருத்துவரை அணுகவும்.

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | தொப்பை கொழுப்பு கரைய, எடை குறைய.. இந்த 5 பழக்கங்கள் அவசியம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News