சிறுநீர் கழிக்கும் போதோ அல்லது கழித்தப் பின்போ, ஒருவித எரிச்சல் ஏற்படும். அது சிறுநீர் பாதையில் தொற்றுநோய் ஏற்பட்டதற்கான அறிகுறியாக இருக்கலாம். சிறுநீர் தொற்று பிரச்சனை ஆண் பெண் என இரு பாலருக்கும் ஏற்படுகிறது.
பொதுவாக வெளிவேலைக்கு செல்பவர்கள் கழிவறைக்கு அடிக்கடி செல்ல கூச்சப்பட்டுக் கொண்டு சிறுநீர், மலம் என உடல் கழிவுகளை அடக்கி வைக்கின்றனர். இதுவும் சிறுநீர் கழிக்கும்போதும், அதற்கு பிறகும் எரிச்சல் ஏற்பட காரணமாக இருக்கலாம்.
சிறுநீர் பாதையில் தொற்று ஏற்படுவதைத் தவிர, சிறுநீர் கழித்தப் பின் ஏற்படும் எரிச்சலுக்கு பல காரணங்கள் இருக்கின்றன. உடலில் நீர் வறட்சி, சிறுநீரக கற்கள், கல்லீரல் பிரச்சனை, அல்சர், பெண்கள் கருவுற்ற காலத்திலும், பிரசவத்திற்கு பின்னரும் நரம்புகளில் பாதிப்பு ஏற்படுவது, ஆண்களில் விந்து அல்லது விரைகளில் தொற்றுநோய் ஏற்படுவது, பால்வினை நோய், புரோஸ்டேட் பெரிதாய் இருப்பது, நீரிழிவு, ஊட்டச்சத்துக் குறைவு என பல காரணங்களால் சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் ஏற்படும்.
உடலில் நீர்ச்சத்து குறைவாக இருந்தால், சிறுநீரானது அடர்ந்த மஞ்சள் நிறத்தில் வரும், அப்போது எரிச்சலும் அதிகமாக இருக்கும். எனவே அடிக்கடி தண்ணீர் குடிப்பதை பழக்கமாக கொள்ள வேண்டும். இப்படி செய்துக் கொண்டிருக்கும்போதும், சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் ஏற்பட்டால், அது சிறுநீர் பாதையில் தொற்றுநோய் ஏற்பட்டுள்ளது என்று உறுதியாக சொல்லலாம்.
சிறுநீர் பிரச்சனைகள் ஏற்பட்டால் க்ரான்பெர்ரி (cranberry) ஜூஸை சாப்பிடுவது நல்ல பலனைக் கொடுக்கும். பெரும்பாலான சிறுநீர் பாதை தொற்றுநோய்கள் மற்றும் சிறுநீர் பாதையினால் ஏற்படும் எரிச்சலை, க்ரான்பெர்ரி ஜூஸ் சரிசெய்யும். எலுமிச்சை சாற்றையும் அருந்தலாம், சிட்ரஸ் பழ ஜூஸ்கள், பாக்டீரியாவை அழிக்கவல்லது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
நெல்லிக்காய் சாற்றை குடிப்பதாலும், சிறுநீர் பாதையில் ஏற்படும் எரிச்சல் குணமாகும். இளநீர் மற்றும் தேங்காயில் உள்ள நீர் உடலில் ஏற்படும் நீர்வறட்சியை தடுக்க வல்லது. சோர்வாக இருக்கும்போதும் உடல் வறட்சியாக இருக்கும்போதும் அடிக்கடி இளநீர் குடித்து வரவேண்டும்.
சிறுநீர் பிரச்சனை இருக்கும்போது, சுக்குமல்லி காப்பியும் நல்ல பலன் தரும். வலியுடன் சிறுநீர் வெளியேறுவதை குணமாக்க வல்லது சுக்குமல்லி காபி. சிறுநீரகத்தில் கற்கள் இருந்தாலும் எரிச்சலுடன் கூடிய சிறுநீர் வெளியேறும். பீர் குடித்தால், சிறுநீரகத்தில் உள்ள கற்கள் கரைந்துவிடும். ஆனால் காலையில் பீர் குடித்தால் உடலில் வறட்சி ஏற்படுவதோடு, சிறுநீர் தொற்றை அதிகரித்துவிடும்... அது உடலில் வறட்சியை ஏற்படுத்திவிடும். பகலில் இளநீருக்கு மாற்று வேறு எதுவுமே இல்லை...