Sani Peyarchi Palangal: 2025 ஆம் ஆண்டு நடக்கவுள்ள பெரிய கிரகங்களின் பெயர்ச்சிகளால் அதிகப்படியான நன்மைகளை அடையவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Guru Peyarchi Palangal: ஜோதிட கணக்கீடுகளின் படி, கிரகப் பெயர்ச்சிகளுக்கு அதிகப்படியான முக்கியத்துவம் உள்ளது. கிரக பெயர்ச்சிகளின் தாக்கம் அனைத்து ராசிகளையும் பாதிக்கும். இதனால் சில ராசிகளுக்கு சுப விளைவுகளும் சில ராசிகளுக்கு பிரச்சனைகளும் ஏற்படக்கூடும். 2025 ஆம் ஆண்டு சனி பகவான், குரு பகவான், ராகு, கேது போன்ற முக்கிய கிரகங்கள் தங்கள் நிலைகளை மாற்ற உள்ளன. இந்த கிரக பெயர்ச்சிகளின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிகளிலும் இதனால் அதிகப்படியான நன்மைகள் ஏற்படும். இவர்கள் வாழ்வில் இந்த ஆண்டு ஒரு பொர்க்காலமாய் ஜொலிக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
2025 மார்ச் 29 ஆம் தேதி சனி பகவான் கும்ப ராசியில் இருக்கும் மீன ராசிக்கு பெயர்ச்சியாக உள்ளார். சனி பெயர்ச்சி இந்த ஆண்டின் மிக முக்கிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.
மே 14 ஆம் தேதி குரு பகவான் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். சுப கிரகமான குரு பெயர்ச்சியும் இந்த ஆண்டின் மிக முக்கியமான ஜோதிட நிகழ்வுகளில் ஒன்றாக பார்க்கப்படுகின்றது.
மே 18 ஆம் தேதி ராகு கும்ப ராசியிலும், கேது சிம்ம ராசியிலும் பெயர்ச்சி அடைகிறார்கள். நிழல் கிரகங்களான ராகு மற்றும் கேதுவின் பெயர்ச்சிகளும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக கருதப்படுகின்றன.
சனி பெயர்ச்சி, குரு பெயர்ச்சி, ராகு, கேது பெயர்ச்சிகளின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிக நற்பலன்கள் கிடைக்கும். இவர்கள் அனைத்து பணிகளிலும் வெற்றி வாகை சூடுவார்கள். அந்த அதிர்ஷ்ட ராசிகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு 2025 ஆம் ஆண்டு லாபகரமானதாக இருக்கும். குழந்தைகளால் நன்மை உண்டாகும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் நபர்கள் வெற்றி பெறுவார்கள். சனி பெயர்ச்சியின் தாக்கத்தால் அலுவலகப் பணிகளில் மிகப்பெரிய வெற்றியை அடைவீர்கள். வேலை தேடிக் கொண்டிருக்கும் மேஷ ராசிக்காரர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். திருமணத்திற்காக காத்திருக்கும் மேஷ ராசிக்காரர்களுக்கு திருமணம் நிச்சயமாகும். பண வரவு அதிகமாகும்.
மிதுனம்: மிதுன ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிர்பாராத இடங்களில் இருந்து பணவரவு இருக்கும். அலுவலகப் பணிகளில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. வணிகர்களுக்கு நல்ல லாபம் இருக்கும். குரு பெயர்ச்சியின் தாக்கத்தால் மாணவர்களுக்கு இது நல்ல நேரமாக இருக்கும்.
கடகம்: சனி பகவான், குரு பகவான், ராகு, கேது ஆகிய கிரகங்களின் பெயர்ச்சிகள் கடக ராசிக்காரர்களுக்கு அதிக நன்மைகளை அளிக்கும். மேலதிகாரிகளின் அதிகபட்ச பாராட்டை பெறுவீர்கள். இதனால் பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும்.
சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி மற்றும் ராகு, கேது பெயர்ச்ச்சிகளின் தாக்கத்தால் இந்த ஆண்டு லாபகரமானதாக இருக்கும். நல்ல செய்திகள் கிடைக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். பணியிடத்தில் மதிப்பும் மரியாதையும் பெறுவீர்கள். மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். சிக்கல்கள் தீரும். பண வரவு அதிகமாகும். அறிவு மற்றும் ஆற்றலை பெருக்கிக் கொள்வீர்கள்.
கும்பம்: சனி பெயர்ச்சி, குரு பெயர்ச்சி, ராகு மற்றும் கேதுவின் பெயர்ச்சி கும்ப ராசிக்காரர்களுக்கு அற்புதமான நற்பலன்களை அளிக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பண வரவு அதிகமாகும். வியாபாரம் விருத்தி அடைய வாய்ப்பு உள்ளது. கணவன் மனைவியிடையே பரஸ்பர அன்பும் புரிதலும் அதிகரிக்கும். தடைபடிருந்த பணிகள் நடந்து முடியும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் இருக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.