Insomnia: தூக்கமின்மை பிரச்சனையா... ‘இந்த’ உணவுகளுக்கு NO சொல்லுங்க!

இன்றைய கால கட்டத்தில் தூக்கமின்மை என்பது பெரும்பாலானோர் சந்திக்கும் பிரச்சனை. தூக்கம் சரியாக இல்லை என்றால் அடுத்த நாள் காலை எழுந்தால் மிக சோர்வாகவும், வேலைகளில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படும். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 3, 2023, 04:48 PM IST
  • உடல் ஆரோக்கியத்திற்கு, குறைந்தது 7 முதல் 8 மணிநேரம் தூங்க வேஎண்டும்.
  • தூக்கமின்மைக்கு உணவைத் தவிர முக்கியமான சில காரணங்கள் இருக்கின்றன.
  • மூளை தனது வேலையை தொடர்ந்து மேற்கொள்ளும். இரவில் மேலும் சுறுசுறுப்பாக இயங்கும்.
Insomnia: தூக்கமின்மை பிரச்சனையா... ‘இந்த’ உணவுகளுக்கு NO சொல்லுங்க! title=

நம்மில் பலருக்கு இரவு நேரங்களில் என்னதான் புரண்டு புரண்டு படுத்தாலும் தூக்கம் வராமல் படாத பாடு படுவோம்.  தூக்கம் சரியாக இல்லை என்றால் அடுத்த நாள் காலை எழுந்தால் மிக சோர்வாகவும், வேலைகளில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படும். சிறந்த உடல் ஆரோக்கியத்திற்கு, குறைந்தது 7 முதல் 8 மணிநேரம் தூங்க வேஎண்டும் என பரிந்துரைக்கப்படுகிறது. தூக்கமின்மை அல்லது குறைவான தூக்கத்தினால் உங்கள் உடல்நலம் பாதிக்கப்படும் என்றும் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.  

1. பூண்டு

பூண்டு ஒரு மசாலாப் பொருளாகப் பயன்படுகிறது, அது நம் உணவின் சுவையை அதிகரிக்கப் பயன்படுகிறது. பூண்டு ஒரு வலுவான வாசனையைக் கொண்டுள்ளது, அதில் பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் போன்ற முக்கியமான ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன. இதனால் நமது உடலின் எலும்புகள் வலுவடைகின்றன. ஆனால் இரவில் இதை சாப்பிடுவது உங்கள் தூக்கத்தை கெடுக்கும். ஏனெனில் இதில் உள்ள ரசாயனங்கள் உங்களை மனதில் எண்ண ஓட்டங்களை தூண்டக் கூடியது.

மேலும் படிக்க | இரவில் தூக்கம் வராமல் கஷ்டப்படறீங்களா... சில எளிய தீர்வுகள்!

2. சாக்லேட்

 வயது வித்தியாசம் ஏதும் இல்லாமல் சாக்லேட் சாப்பிட விரும்புகிறார்கள். ஏனெனில் அதன் சுவை மிகவும் கவர்ச்சியானது. ஆனால், இந்த இனிப்பினால் ஆரோக்கியத்திற்கு பல தீமைகள் உள்ளன. இரவில் தூங்கும் முன் சாப்பிட்டால், அது நிம்மதியான தூக்கத்தை கெடுக்கும். ஆனால், டார்க் சாக்லேட் சிறந்த தூக்கத்தை கொடுக்கும் உணவுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இதில் செரோடோனின் உள்ளதால், அது உங்கள் மனம் மற்றும் நரம்புகளை அமைதிப்படுத்தி நன்றாக தூக்கத்தை கொடுக்கும்.

3. சிப்ஸ்

இரவில் பசியை போக்க பல சிப்ஸ் பாக்கெட்டுகளை அடிக்கடி சாப்பிட்டு வருகிறோம், இதை எல்லாம் செய்யாதீர்கள். ஏனெனில் அவை நம் ஆரோக்கியத்திற்கு பெரும் தீங்கு விளைவிக்கும். இரவில் சிப்ஸ் சாப்பிடுவதால் அதன் செரிமானத்தில் பிரச்சனைகள் ஏற்பட்டு பிறகு வயிற்றில் கோளாறு ஏற்பட்டு தூக்கம் முற்றிலும் கெடும்.

4. மொலைல் கணிணி அதிகம் பயன்படுத்துதல்

மேலும் தூக்கமின்மைக்கு உணவைத் தவிர முக்கியமான சில காரணங்கள் இருக்கின்றன. இரவு தூங்க செல்லும் நேரம் வரை மொபைல் ஃபோன் பயன்படுத்துவதும் முக்கிய காரணம். நாம் தொடர்ந்து அப்படி செய்யும் போது மூளை தனது வேலையை இரவில் மேலும் சுறுசுறுப்பாக நினைக்கும். மேலும் விழித்திரையில் பாதிப்பு ஏற்படும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | நீரிழிவு முதல் யூரிக் அமிலம் வரை... பார்லி நீர் செய்யும் மாயங்கள்! தயாரிப்பது எப்படி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News