Vitamin D: வைட்டமின் டி அதிகமானால் ஏற்படும் ஹைப்பர்வைட்டமினோசிஸ் அபாயங்கள்

Avoid over consumptionVitamin D: ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும், அதிகமான ஊட்டச்சத்து உட்கொள்ளல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 12, 2022, 05:52 PM IST
  • ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும் அதிகமான ஊட்டச்சத்து ஆரோக்கியத்திற்கு தீங்கு
Vitamin D: வைட்டமின் டி அதிகமானால் ஏற்படும் ஹைப்பர்வைட்டமினோசிஸ் அபாயங்கள் title=

அளவுக்கு அதிக ஊட்டச்சத்து உடலுக்கு கேடு: வைட்டமின் டி உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும், இந்த ஊட்டச்சத்து அதிகமானால், ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். வைட்டமின் டி நச்சுத்தன்மையால் ஏற்படும் பிரச்சனைகளை தெரிந்துக் கொள்ளுங்கள்.  

வைட்டமின் டி நச்சுத்தன்மை 
உடலில் அதிகப்படியான வைட்டமின் டி பிரச்சனையை ஏற்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியுமா? வைட்டமின் டி உங்கள் உடலுக்குத் தேவையான ஒரு முக்கியமான ஊட்டச்சத்து என்றாலும், அளவுக்கு அதிகமானால் பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.

அதிக அளவு வைட்டமின் டி எலும்பு, திசுக்கள் மற்றும் பிற உறுப்பு பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த நிலை வைட்டமின் டி நச்சுத்தன்மை அல்லது ஹைப்பர்வைட்டமினோசிஸ் டி என குறிப்பிடப்படுகிறது.

இது ஒரு அரிதான ஆனால் தீவிரமான நிலை, இது பல உடல்நலப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். உங்கள் வைட்டமின் டி அளவுகள் அதிகமாக இருந்தால், உடனடியாக அதை குறைத்துக் கொள்ளவும்.

மேலும் படிக்க | அளவுக்கு மிஞ்சினால் வைட்டமின் பி கேன்சரை உருவாக்கும்: ஆண்களுக்கான எச்சரிக்கை

உயர் கால்சியம் அளவுகள்
வைட்டமின் D இன் மிக முக்கியமான பாத்திரங்களில் ஒன்று, நீங்கள் உட்கொள்ளும் உணவில் இருந்து உங்கள் உடல் கால்சியத்தை உறிஞ்சுவதற்கு உதவுகிறது. இருப்பினும், அதிகப்படியான வைட்டமின் டி உங்கள் இரத்தத்தில் கால்சியம் அளவை அதிகரிக்கச் செய்யலாம்.

உடலில் கால்சியம் அதிகமாவது ஆபத்தான விளைவுகளுக்கு வழிவகுக்கும். உடலில் கால்சியம் அளவு அதிகமாக இருப்பது மருத்துவத்தில் ஹைபர்கால்சீமியா என்று அழைக்கப்படுகிறது. வாந்தி, குமட்டல், மலச்சிக்கல், வயிற்று வலி, சோர்வு, தலைச்சுற்றல், பசியின்மை, அடிக்கடி சிறுநீர் கழித்தல், சிறுநீரகக் கற்கள், உயர் இரத்த அழுத்தம், மற்றும் நீர்ப்போக்கு ஆகியவை நோயின் பொதுவான அறிகுறிகளில் சில.

மனநல பிரச்சனைகள்
அதிக அளவு வைட்டமின் டி கால்சியம் அளவை உயர்த்தலாம், இது உங்கள் மன நிலை மற்றும் மனநல பிரச்சனைகளை மாற்றும். ஹைபர்கால்சீமியா குழப்பம், மனச்சோர்வு மற்றும் மனநோய் போன்ற மனநலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்றும் சில ஆய்வுகள் கூறுகின்றன.

வயிற்றுப் பிரச்சனைகள்
அதிகப்படியான வைட்டமின் டி, மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, பசியின்மை போன்ற இரைப்பை குடல் நோய்களையும் ஏற்படுத்தும். வைட்டமின் டி சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக் கொண்ட பிறகு உங்களுக்கு வயிற்று வலி அல்லது மலச்சிக்கல் ஏற்பட்டால், உடனடியாக உங்கள் மருத்துவரை அணுகவும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | யார் யாருக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும்? வழிகாட்டு நெறிமுறை வெளியீடு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News