நண்பர்களுடன் அல்லது குடும்பத்தினருடன் வெளியூர் அல்லது வெளிநாடு செல்ல வேண்டும் என்று நெடு நாட்களாக திட்டம் போட்டிருப்போம். அனைத்து ஏற்பாடுகளையும் சரியாக செய்து வைத்து, இறுதியில் பயணத்தை ஆரம்பிக்கும் போது, உடம்பு வலிப்பது போல இருக்கும்-தும்மல் வரும், காய்ச்சல் வருவது போல இருக்கும். பயணங்களின் போது காய்ச்சல் வருவது மிகவும் கொடுமையான விஷயமாக இருக்கும். இந்த சூழ்நிலையை சமாளிப்பது எப்படி? இங்கு பார்ப்போம்.
ஆராய்ச்சி செய்யுங்கள்:
உங்களுக்கு பயணத்தின் போது வீட்டை விட்டு கிளம்புவதற்கு முன்பே காய்ச்சல் வந்து விட்டால் நீங்கள் பயணம் செய்யும் இடத்தில் மருத்துவ உதவிகள் இருக்கிறதா என்பதை பார்த்துக்கொள்ளுங்கள். இது, உங்களுக்கு மட்டுமன்றி, உங்களுடன் இருப்பவர்களுக்கும் உதவும்.
மருந்துச்சீட்டு:
உங்களுக்கு நாள்பட்ட நோய் பாதிப்புகள் இருக்கிறது என்றாலோ, அல்லது அடிக்கடி அடிக்கடி மருந்து எடுத்துக்கொள்ளும் தேவை இருந்தாலோ மருந்துகளுடன் சேர்த்து மருந்து சீட்டையும் எடுத்து செல்ல வேண்டும். இதனால், உங்களுக்கு மருந்து தேவைப்படும் சமயத்தில் வாங்கி கொள்ளலாம்.
வைரல் காய்ச்சல்:
நீங்கள் செல்லும் இடத்தில் ஏதேனும் நோய் பரவல் இருக்கிறதா என்பதை முன்கூட்டியே தெரிந்து கொள்ளுங்கள். நோய் பரவல் இருந்தாலும் இல்லை என்றாலும் பாதுகாப்பு முன்னெடுப்புகளை எடுத்துக்கொள்வது நல்லது. எங்கு சென்றாலும், தேவையில்லாமல் எதையும் தொடுவதை தவிர்க்கவும். மாஸ்க் அணிந்து கொள்வதும் நல்லது.
நீர்ச்சத்து:
பயணம் மேற்கொள்கையில் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்வது நல்லது. மயக்கம், தலை சுற்றல் போன்ற பாதிப்புகள் ஏற்படுத்துவதை தவிர்க்கலாம். அடிக்கடி தண்ணீர் குடித்து, பழச்சாறு குடித்து உடலை நீர்ச்சத்துடன் வைத்திருக்க வேண்டும்.
முதலுதவி பெட்டி:
பயணங்களின் போது அடிப்படலாம், அடி படாமலும் பாேகலாம். ஆகவே, முதலுதவி பெட்டியை கூடவே வைத்திருப்பது நல்லது. அதில் பேண்ட் எய்ட், காய்ச்சல் மாத்திரை, பஞ்சு உள்ளிட்டவை இருக்க வேண்டும். இதனால், உங்களுக்கு அடிப்பட்டாலும் உடனடியாக சரி செய்து கொள்ள முடியும்.
குமட்டல் வாந்தி..
பலருக்கு, பயண சமயங்களில் தலை சுற்றல், குமட்டல் வாந்தி வருவது போன்ற உணர்வு ஆகியவை ஏற்படலாம். எனவே, அப்படி பயணம் ஒத்துக்கொள்ளாமல் போகிறவர்கள், அவர்களுடன் எலுமிச்சை பழம் வைத்துக்கொள்வது நல்லது. அத்துடன் சேர்த்து ஒரு கவரையும் வைத்துக்கொள்ள வேண்டும். அடைத்தது பாேல இருக்கும் வாகனங்களில் பயணம் செய்வதை தவிர்க்கவும். காற்றோட்டமாக இருக்க ஜன்னல் கதவுகளை திறந்து வைத்துக்கொள்ள வேண்டும். பயணங்களின் போது அதிகம் சாப்பிடுவதையும் தவிர்க்கலாம்.
மருத்துவரவை அணுகவும்..
நீங்கள் தனிப்பட்ட மருத்துவரை அணுகுவீர்கள் என்றால், அவர்களுடைய தொலை பேசி எண்ணை எப்போதும் வைத்திருக்கவும். அவசர நேரத்தில் அவர்களை அணுக உதவியாக இருக்கும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ