Osteoporosis: முதுமையில் மூட்டு வலி அண்டாமல் இருக்க... நீங்கள் செய்ய வேண்டியவை!

Preventing Osteoporosis: நோய்களின் வேட்டைக்காரடாக முதுமை மாறாமல், வாழ்க்கை வாழவும், மூட்டு வலி வராமல் தடுக்கவும், என்னென்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 5, 2024, 11:46 PM IST
  • மூட்டுக்கள் என்றால் உச்சி முதல் பாதம் வரை பல்வேறு இடங்களில் மூட்டுகள் உண்டு.
  • கால் மூட்டுகளில் ஏற்படும் வலி தான் பெரும்பாலானோரின் பிரச்சனையாக இருக்கும்.
  • உடல் பருமன் மூட்டு வலி ஏற்பட ஒரு காரணமாக இருக்கிறது.
Osteoporosis: முதுமையில் மூட்டு வலி அண்டாமல் இருக்க... நீங்கள் செய்ய வேண்டியவை! title=

Tips to Prevent osteoporosis & Joint Pain: முதுமை நோய்களின் வேட்டை காடு என்பார்கள். வயது ஏற ஏற உடலில் உள்ள பாகங்கள் ஒவ்வொன்றாக பலவீனமடைய தொடங்கி, ஒவ்வொரு பிரச்சினையாக ஏற்பட ஆரம்பிக்கும். அதில் முதியவர்கள் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனை மூட்டு வலி. இந்நிலையில் மூட்டு வலி வராமல் இருப்பதற்கு என்னென்ன செய்யலாம் என்பதை அறிந்து கொள்ளலாம்.

இயல்பு வாழ்க்கையை பாதிக்கும் மூட்டு வலி

மூட்டு வலி என்பது நமது இயல்பு வாழ்க்கையை பாதிக்கும். மூட்டுக்கள் என்றால் உச்சி முதல் பாதம் வரை பல்வேறு இடங்களில் மூட்டுகள் உண்டு. ஆனால் கால் மூட்டுகளில் ஏற்படும் வலி தான் பெரும்பாலானோரின் பிரச்சனையாக இருக்கும். எனக்கு தேவையான கால்சியம் சத்து கிடைக்காத போது எலும்புகள் பலவீனம் ஆகிவிடுகிறது. வயது ஏற ஏற உடல் சத்துக்களில் கிரகித்துக் கொள்ளும் தன்மையையும் ஒரு அளவுக்கு இழந்து விடுகிறது. இதனால்தான் மூட்டு வலி ஏற்படுகிறது. கால்சியம் சத்து மட்டுமின்றி விட்டமின் டி குறைபாடும் மூட்டு வலி ஏற்பட காரணமாகும். ஏனென்றால் விட்டமின் டி இருந்தால் தான் கால்சியம் சத்து உடலால் கிரகித்துக் கொள்ளப்படும்.

மூட்டு வலியும் உடல் பருமனும்

உடல் பருமன் மூட்டு வலி ஏற்பட ஒரு காரணமாக இருக்கிறது. ஏனென்றால் உடல் எடை அதிகரிக்கும் போது அந்த எடையை தாங்க முடியாமல் மூட்டுகளில் அழுத்தம் ஏற்படுவதால் வலி உண்டாகிறது. இதனால் பலவீனம் அடைகிறது. சத்து குறைபாடும் உடல் எடையும் சேரும்போது, ஆஸ்திரேலியா ப்ரோசிஸ் என்னும் நோய் வருவதற்கான வாய்ப்புகள் பெரிதும் அதிகரிக்கிறது. ஆஸ்டியோபோரோசிஸ் என்பது எலும்பு முறிதல் நோயாகும்.

மேலும் படிக்க | டீக்கடைக்கு போனா இனி இதை வாங்கி குடியுங்கள்... உடலுக்கு மிகவும் நல்லதாம்!

பெண்களுக்கு ஏற்படும் மூட்டு வலி பிரச்சனை

ஆண்களுடன் ஒப்பிடும்போது பெண்களுக்கு, கால்சியம் சத்து மிக வேகமாக குறைய தொடங்குகிறது. பெண்கள் 45 அல்லது 50 வயது எட்டும் போது, மாதவிடாய் சுழற்சி நிற்க தொடங்கும். மனோபாஸ் என்று கூறப்படும் இந்த நிலையில், பெண்களுக்கு கால்சியம் குறைபாடு அதிகம் ஏற்பட்டு மூட்டு வலியுடன் கூடவே, இடுப்பு வலி கழுத்து வலி என பல விதமான பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை உள்ளது. இதனை தடுக்க பெண்கள், கால்சியம் மற்றும் விட்டமின் டி சத்து உடலில் போதுமான அளவு இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அதற்கு மாத்திரையை நாடுவதை விட, உணவுப் பழக்கங்கள் மூலம் சரி செய்து கொள்வது சிறந்தது. இதற்கு கேழ்வரகு என்னும் ராகி, கருப்பட்டி, கொண்டைக்கடலை, பாசிப்பயறு போன்றவற்றை 30 வயது முதலே சாப்பிட தொடங்க வேண்டும்.

மூட்டு வலிக்கான இயற்கை வைத்தியங்கள்

மாத்திரைகள் எடுத்துக் கொள்வதை தவிர்த்து விட்டு, வைத்தியங்கள் மூலமே சரி செய்ய முயலுவது சிறந்தது. வலி மாத்திரைகளை அதிகம் எடுத்துக் கொண்டால், வலிக்கு தற்காலிக நிவாரணம் தான் கிடைக்கும் என்பது மட்டும் இன்றி, இதற்கான பக்க விளைவுகளும் இது ஏராளம். மூட்டு வலி தீர அழற்சி எதிர்ப்பு பண்புகள் கொண்ட இஞ்சி, சீரகம், சோம்பு, மிளகு ஆகியவை சேர்த்து கொதிக்க வைத்த நீரை, காலையில் வழக்கமாக கொள்வது சிறந்தது. அதோடு உணவில் ராகி, பால் பொருட்கள், பாதாம், தயிர் போன்றவற்றை சேர்த்துக் கொள்ளலாம். கால்சியம் மாத்திரைகளை சாப்பிடுவதை விட, கால்சியம் சத்து நிறைந்த உணவுகள் கை கொடுக்கும்.

மூட்டு வலிக்கு மருந்தாகும் வைட்டமின் டி

வைட்டமின் டி சத்து சூரிய ஒளியில் அதிக அளவு இருக்கிறது என்பது நம் அனைவருக்குமே தெரியும். வைட்டமின் டி யை சூரிய ஒளியில் இருந்து அதிகபட்சம் பெற வேண்டுமானால் காலை 5 மணிக்குள் அல்லது மாலை வாக்கில், உடலின் பல பாகங்களில் வெயில் படும்படி இருப்பது பலன் தரும்.

மேலும் படிக்க | வெந்தயம் இருக்கும்போது வயகரா எதுக்கு? முளை கட்டி பயன்படுத்தினால் பலன் தரும் அற்புத மசாலா!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News