ஆபீஸ் டென்ஷன் அதிகமா இருக்கா... இந்த டிப்ஸ்களை கடைபிடிங்க...

இன்றைய வேகமான வாழ்க்கையில், வேலை அழுத்தம் மற்றும் மன அழுத்தம் ஆகியவை பொதுவான பிரச்சனையாக மாறி விட்டன. ஆனால் இந்த அலுவலகத்தில் ஏற்படும் மன அழுத்தம் சில நேரங்களில் கடுமையான மன நல பிரச்சனைக்கும வழிவகுக்கும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 10, 2024, 10:34 AM IST
  • மன ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்வது மிகவும் முக்கியம்.
  • எல்லா வேலைகளையும் ஒரே நேரத்தில் செய்வது சாத்தியமில்லை.
  • சக ஊழியர்களுடன் ஆரோக்கியமான நட்பு உறவுகளை பராமரிக்கவும்.
ஆபீஸ் டென்ஷன் அதிகமா இருக்கா... இந்த டிப்ஸ்களை கடைபிடிங்க... title=

இன்றைய துரித கதியிலான வாழ்க்கையில், வேலை அழுத்தம் மற்றும் மன அழுத்தம் ஆகியவை பொதுவான பிரச்சனையாக மாறி விட்டன. அலுவலகத்தில் ஏற்படும் மன அழுத்தம் சில நேரங்களில் கடுமையான மன நல பிரச்சனைக்கும வழிவகுக்கும். நமது செயல் திறன் குறைந்து, குறிக்கோளையும் இலக்கையும்ம் எட்டுவது கடினமாகிவிடும்.

நீண்ட நாட்களுக்கு நீடிக்கும் வேலை அழுத்தம், இலக்குகளை சரியான நேரத்தில் முடிக்க போராடுவது மற்றும் அலுவலகத்தில் போட்டி சூழலில் வேலை செய்வது ஆகியவை மன ஆரோக்கியத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் மன ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்வது மிகவும் முக்கியம். இங்கே கொடுக்கப்பட்டுள்ள சில வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் அலுவலக வேலை பளுவினால் ஏற்படும் டென்ஷனை குறைத்து, இலக்குகளை எளிதாக அடையலம். உங்கள் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.

1. வேலையை திட்டமிடுங்கள்

நீங்கள் செய்ய வேண்டிய வேலையை முன்னுரிமையின் அடிப்படையில் திட்டமிடுங்கள். எல்லா வேலைகளையும் ஒரே நேரத்தில் செய்வது சாத்தியமில்லை. எனவே, ஒரு நேரத்தில் ஒரு பணியில் கவனம் செலுத்துங்கள். இதனால் பணிச்சுமை குறைவதுடன் மன அழுத்தமும் குறையும். நேரத்தை நிர்வகிப்பதன் மூலம், உங்கள் வேலையைச் சிறப்பாகச் செய்து, தேவையற்ற அழுத்தத்தைத் தவிர்க்கலாம்.

2. வேலையில் சக ஊழியர்களுடன் நல்ல உறவை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்

அலுவலகத்தில் பரஸ்பர ஒத்துழைப்பு மற்றும் சக ஊழியர்களுடன் நல்லுறவு ஆகியவை மன ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவியாக இருக்கும். உங்கள் சக ஊழியர்களுடன் ஆரோக்கியமான நட்பு, சிறந்த தொடர்பு மற்றும் உறவுகளை பராமரிக்கவும். இது அலுவலகத்தில் சூழ்நிலை மனதிற்கு உகந்ததாக மாறும் நிலையை உருவாக்கும். இதனால், மன அழுத்தம் குறையும்.

3. பணிக்கு இடையில் பிரேக் எடுக்கவும்

கடுமையாக உழைப்பதற்கு மத்தியில் சிறிது நேர பிரேக் எடுப்பது முக்கியம். பிரெக் எடுக்காமல் தொடர்ந்து வேலை செய்வது உங்கள் உடலுக்கு மட்டுமல்ல, உங்கள் மன ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும். சில மணிநேரங்களுக்கு ஒருமுறை சிறிய அளவில் பிரேக் எடுப்பது மன அழுத்தத்தைக் குறைத்து மனதிற்கு ஓய்வு அளிக்கிறது. 5-10 நிமிட இடைவெளி எடுத்து நடைப்பயிற்சி மேற்கொள்ளவும் அல்லது ஆழமாக சுவாசிக்கவும். இது உங்கள் மனதிற்கு நிம்மதியை தரும்.

மேலும் படிக்க | அதிகாலை 3 - 5 மணிக்குள் முழிப்பு வருகிறதா? இந்த பிரச்சனைகள் இருக்கலாம்!

4. தியான பயிற்சி

தியானம் மற்றும் யோகா ஆகியவை மனதிற்கு அமைதியை அளிக்க மிகவும் ஆக்கபூர்வமாக செயல்பட உதவும். மன பதற்றத்தை கட்டுப்படுத்தும் சிறந்த வழியாக கருதப்படுகிறது. அலுவலகத்தில் மதிய உணவு நேரத்தில் 5-10 நிமிடங்கள் தியானம் செய்வது உங்கள் மனதை அமைதிப்படுத்தும் மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்கும்.

5. உங்களை மனதில் நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள்

உங்களுடன் நேர்மறையாகப் பேசுவதும், தன்னம்பிக்கையைப் பேணுவதும் மன ஆரோக்கியத்திற்கு முக்கியம். உங்கள் சாதனைகளைப் பாராட்டுங்கள் மற்றும் உங்கள் இலக்குகளைப் பற்றி நம்பிக்கையுடன் இருங்கள். இது மன வலிமையை வழங்குவதோடு, வேலையில் ஊக்கத்தையும் பராமரிக்கும்.

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | பயம் காட்டும் சுகர் லெவலை பக்குவமாய் குறைக்கும் பச்சை இலைகள்: சாப்பிட்டு பாருங்க

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News