கொலஸ்ட்ரால் என்றாலே பலருக்கும் உள்ளுக்குள் பயம் வரும், ஆனால் பொதுவாக கொலஸ்ட்ரால் பாதிப்பை ஏற்படுத்தாது. கெட்ட கொலஸ்ட்ரால் மட்டுமே தான் பாதிப்பை ஏற்படுத்தும் தவிர நல்ல கொலஸ்ட்ரால் உங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது, இது உங்களது சருமத்தை பளபளப்பாக வைத்துக்கொள்ளும். கெட்ட கொலஸ்ட்ரால் இதய ஆரோக்கியத்திற்கு அதிகளவிலான பாதிப்பை ஏற்படுத்தும் அதுவே நல்ல கொலஸ்ட்ரால் இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும். அதனால் நல்ல கொலஸ்டராலின் அளவை சீரான அளவில் உடலில் வைத்திருக்க வேண்டியது அவசியம். எல்டிஎல் எனப்படும் கெட்ட கொலஸ்ட்ராலானது இதய நோய்களின் ஆபத்தை அதிகரித்து மாரடைப்பை ஏற்படுத்துகிறது. ஆனால் ஹெச்டிஎல் எனப்படும் நல்ல கொலஸ்ட்ரால் கொழுப்பை உறிஞ்சி கல்லீரலுக்கு கொண்டு செல்கிறது, அதனை கல்லீரல் உடலில் இருந்து வெளியேற்றுகிறது. உடலில் அதிக அளவு ஹெச்டிஎல் கொலஸ்ட்ரால் இதய நோய்களுக்கான ஆபத்தை குறைக்கிறது. இயற்கையான முறையில் உடலில் நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க பின்வரும் வழிகளை பின்பற்ற வேண்டும்.
மேலும் படிக்க | Uric Acid அதிகமா இருக்கா? இந்த வழியில் ஒரே மாதத்தில் கட்டுப்படுத்தலாம்
1) நியாசின் (வைட்டமின்-பி3) என்பது ஹெச்டிஎல் அளவை அதிகரிக்க பயன்படும் ஒரு முக்கியமான மருந்து, இந்த நியாசின் சில உணவு வகைகளில் நிரம்பியுள்ளது, இதனை சாப்பிடுவதன் மூலம் நல்ல கொழுப்பின் அளவு அதிகரிக்கும். நேஷனல் லைப்ரரி ஆஃப் மெடிசினில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, நியாசின் எல்டிஎல் கொழுப்பின் அளவு குறைப்பதன் மூலமும், ஹெச்டிஎல் கொழுப்பின் அளவை அதிகரிப்பதன் மூலமும் இதய நோய் அபாயத்தைக் குறைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. விலங்குகளின் கல்லீரல், டுனா மற்றும் சால்மன், காளான்கள், உருளைக்கிழங்கு போன்ற உணவு வகைகளில் நியாசின் சத்து உள்ளது.
2) பொதுவாக சுறுசுறுப்பான வாழ்க்கை முறை அனைத்து வியாதிகளையும் சரிசெய்யும், சுறுசுறுப்பான உடல் செயல்பாடு இருந்தால் இதய ஆரோக்கியம் மேம்படும். கடந்த 2016ம் நடத்தப்பட்ட ஆய்வில், கடுமையான உடல் பயிற்சிகள் செய்தால் ஹெச்டிஎல் கொழுப்பின் அளவு அதிகரிக்கும் என்றும் எல்டிஎல் கொழுப்பின் அளவு குறையும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே தினசரி 20-30 நிமிட நடைப்பயணத்துடன் தொடங்குங்கள், பின்னர் படிப்படியாக ஜாகிங் மற்றும் பிற தீவிர கார்டியோ பயிற்சிகள் வரை செய்ய ஆரம்பிக்கலாம்.
3) பாதாம், பிஸ்தா, வேர்க்கடலை , முந்திரி, போன்ற நட்ஸ் வகைகள் சாப்பிடுவதன் மூலம் இதயத்திற்கு ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் மற்றும் நார்ச்சத்து கிடைக்கிறது, நார்ச்சத்து நம் உடலில் உள்ள கொலஸ்ட்ராலை உறிஞ்சுவதைத் தடுக்க உதவுகிறது. 2018 ஆம் ஆண்டின் ஆய்வின்படி, முந்திரி பருப்புகள் சிஸ்டாலிக் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் மற்றும் உடல் எடை, கிளைசீமியா அல்லது பிற கொழுப்பு மாறிகள் ஆகியவற்றில் தீங்கு விளைவிக்காமல் ஹெச்டிஎல் கொழுப்பின் அளவை அதிகரிக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
4) அதிக எடை அல்லது உடல் பருமனாக இருந்தால் தானாகவே இதய நோய்கள் அதிகளவில் ஏற்படும் வாய்ப்புள்ளது. உடல் கொழுப்பை 3 சதவிகிதம் குறைப்பது ஹெச்டிஎல் அளவுகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்புக்கு வழிவகுக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க | இலவங்கப்பட்டையின் இதமான நன்மைகள்: குளிர்காலத்தில் உங்கள் கவசமாய் உதவும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ