புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ள நிலையில், நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 614 பேர் கோவிட் 19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் ஒன்றரை வருடன் அதாவது 2022 மே 21-க்கு பின்னர் ஒருநாள் பாதிப்பு இந்த அளவுக்கு அதிகரித்துள்ளது கவலைகளை அதிகரித்துள்ளது. அதிலும், கேரளாவில் ஒரே நாளில் 3 பேர் கோவிட் நோய்க்கு பலியாகி உயிரிழந்திருப்பது கவலையை அதிகரித்துள்ளது.
உருமாறிய ஜேஎன் 1 வகை கொரோனா தொற்று (Covid JN.1 Variant) பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், ஒரே நாளில் 292 பேருக்கு ஜேஎன் 1 வகை கொரோனா தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது என்றால், தலைநகர் டெல்லியில் நால்வருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
கோவிட் நோய் துரித பரவல் குறித்து உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
NEW: #COVID19 variant of interest JN.1
Due to its rapidly increasing spread, WHO is classifying the variant JN.1 as a separate variant of interest (VOI) from the parent lineage BA.2.86. It was previously classified as VOI as part of BA.2.86 sublineages.
Based on the available… pic.twitter.com/lvyd3sq1f7
— World Health Organization (WHO) (@WHO) December 19, 2023
கோவிட்19 ஆர்வத்தின் மாறுபாடு JN.1 (COVID19 variant of interest JN.1)
வேகமாக அதிகரித்து வரும் பரவல் காரணமாக, WHO ஆனது JN.1 என்ற மாறுபாட்டை, அதன் மூல வைரஸான BA.2.86 இலிருந்து ஒரு தனி விருப்பமான விருப்பமாக (VOI, variant of interest) வகைப்படுத்துகிறது. இது முன்பு BA.2.86 துணைப் பிரிவுகளின் ஒரு பகுதியாக VOI என வகைப்படுத்தப்பட்டது.
மேலும் படிக்க - 2023ல் உலகை அச்சுறுத்திய 4 நோய்த்தொற்றுகள்! 2024 ஆம் ஆண்டிலும் கவனம் தேவை
JN.1 ஆல் ஏற்படும் ஆபத்து தற்போது குறைவாக இருந்தபோதிலும், குளிர்காலம் தொடங்குவதால், JN.1 பல நாடுகளில் சுவாச நோய்த்தொற்றுகளை அதிகரிக்கக்கூடும் என்று உலக சுகாதார மையம் கணித்துள்ளது.
தற்போதைய தடுப்பூசிகள் JN.1 மற்றும் SARS-CoV-2 இன் பிற மாறுபாடுகள், கோவிட்-19 நோயை உண்டாக்கும் வைரஸிலிருந்து கடுமையான நோய் மற்றும் இறப்பு ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கும் என்று உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. மேலும், கொரோனா தொடர்பான ஆதாரங்களை WHO தொடர்ந்து கண்காணித்து வருகிறது. JN.1 வைரஸ் பாதிப்பு தொடர்பான இடர் மதிப்பீட்டை தேவைக்கேற்ப புதுப்பிக்கும் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
புதிய உருமாறிய ஜேஎன் 1 வகை கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், இது குறித்து உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், அனைத்து உலக நாடுகள் இதை கண்காணிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளன.
புதிய வகை கொரோனா வைரஸ் ஏற்படுத்தும் பாதிப்பு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுத்தாது என்றும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த புதிய வகை வைரஸினால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு பொதுவாக சுவாச பிரச்சினை இருக்கின்றது. பாதிப்பு ஏற்பட்ட 4 அல்லது 5 நாட்களில் அறிகுறி வெளியே தெரியும்.
மேலும் படிக்க | அச்சுறுத்தும் புதியவகை கொரோனா: கேரளாவில் 3 பேர் பலி, தமிழகத்தில் பாதிப்பு 64 ஆக உயர்வு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ