உயரத்தை அதிகரிக்க வேண்டுமா; இதோ நான்கு எளிய வழிகள்..!!

உயரம் அதிகரிக்க உதவும் நான்கு எளிய யோகாசனங்களைப் பற்றிய தகவல்களை  அறிந்து கொள்ளுங்கள்.  

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 21, 2021, 12:39 PM IST
உயரத்தை அதிகரிக்க வேண்டுமா; இதோ நான்கு எளிய வழிகள்..!! title=

யோகா என்பது எல்லாவிதமான உடல் மற்றும் மன பிரச்சனைகளையும் தீர்க்கும் ஒரு விஷயம்.  அதனால் உயரம் குறைவாக உள்ளதே என கவலை வேண்டாம். உங்கள் உயரத்தை எளிதாக அதிகரிக்கலாம். குழந்தைகள் ஆனாலும் சரி பெரியவர்கள் ஆனாலும்சரி, வழக்கமான யோகா பயிற்சி மூலம் உயரத்தை அதிகரிக்க முடியும்.

மனித உடல் அதன் மரபணுக்களுக்கு ஏற்ப வளர்ச்சியைப் பெறுகிறது. உயரத்தை அதிரிக்க பெரும்பாலான மக்கள் மருந்துகள் மற்றும் பூஸ்டர்கள் போன்றவற்றை எடுத்துக் கொள்கிறார்கள். அதனால், பெரிய அளவில் பலன் இல்லாததோடு, பக்க விளைவுகளும் ஏற்படலாம்.  அதை தவிர்த்து எளிய யோகாசனங்கள் மூலம் இயற்கையான முறையில் உயரத்தை அதிகரிக்க முடியும். உயரத்தை அதிகரிக்கும் யோகாசனங்கள் பற்றி கீழே உள்ள செய்தியில் தெரிந்து கொள்வோம்...

1. சிரசாசனம் 

தரைவிரிப்பில் குனிந்து தலையை ஊன்றி கைகளை கோர்த்து வைத்துக் கொண்டு சுவாசத்தை உள்ளே இழுத்துக் கொண்டு இரு கால்களையும் வயிற்றுடன் சேர்த்து மடக்கி வானோக்கி உயர்த்தவும். 

பக்கங்களில் சாய்ந்து விடாமல் கவனமுடன் இருக்க வேண்டும். ஆரம்ப காலங்களில் சுவற்றின் மீது சாய்ந்து சுவரை ஆதாரமாக வைத்து கொண்டு செய்யலாம்.

இப்போது தலை கம்பளத்திலும் உடல், கால்கள் வானோக்கியும் இருக்கும். இந்நிலை தான் சிரசாசனம் எனப்படும். 

அதே நிலையில் சுவாசத்தை இயல்பாய் உள்ளிழுத்து வெளியிட வேண்டும். பின்னர் மெதுவாக இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டும்.  20 விநாடிகள் இந்த நிலையில் இருங்கள்.

2. விருக்ஷாசனம்

முதலில், நீங்கள் தரையில் ஒரு காலினால் நிற்க வேண்டும்.

கைகளை பக்கவாட்டில் வைத்து, இடது காலை ஊன்றி நின்று, வலது காலை முழங்காலை மடக்கி நேராக நிற்கவும். 

இந்த நிலையில் சமநிலையை பராமரிக்கவும்.

இப்போது இரு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்தி  உள்ளங்கைகளை ஒன்றாக இணைக்கவும்.

சிறிது நேரம் இந்த நிலையில் இருங்கள். மெதுவாக சுவாசத்தை உள்ளே இழுத்து விடவும்.

இப்போது அதே செயல்முறையை  வடது காலில் நின்று கொண்டு செய்யவும்

3. தாடாசனம்

முதலில், உங்கள் இரண்டு குதிகால் மற்றும் கால்விரல்கள் இரண்டிற்கும் இடையே சிறிது இடைவெளி இருக்குமாறு நேராக நிற்கவும்.

இப்போது இரண்டு கைகளையும் இடுப்புக் கோட்டிற்கு மேலே நகர்த்தி உள்ளங்கைகள் மற்றும் விரல்களை இணைக்கவும்.

இதன் போது உங்கள் கண்கள் மேல் நோக்கிய பார்வை கொண்டிருக்க வேண்டும் கழுத்தில் நேராக இருக்க வேண்டும்.

இப்போது பாதங்களை தூக்கி குதிகால்களை மேல்நோக்கி உயர்த்தி, முழு உடலின் எடையையும் கால்விரல்களில் கொடுக்கவும்.

அப்போது ​​வயிற்றை உள்ளே இழுத்துக் கொண்டு, சமநிலைப்படுத்திக் கொண்டு சிறிது நேரம் இந்த நிலையில் இருக்கவும்.

4. சக்ராசனம்

முதலில் மல்லாந்து படுத்துக் கொள்ள வேண்டும். படுத்த நிலையிலேயே இடுப்பு வயிற்றுப்பகுதியை மேலே தூக்கி உயர்த்த வேண்டும். உயர்த்தும் போது கைகளை பின்புறமாக கொண்டு சென்று உள்ளங்கை தரை மீது படும்படி வைக்க வேண்டும். பின்னர், இயல்பாக ஐந்து மூச்சுக்கள் விட்ட பிறகு மெதுவாக மீண்டும் முன்னர் இருந்த நிலைக்கு வரவும்.
உடலை தரையில் இருந்து தூக்கும் போது, ​​உங்கள் கைகளையும் கால்களையும் நேராக வைத்திருக்க வேண்டும்.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே பரிந்துரைகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டது. ஆசனத்தின் சரியான நிலையைப் பற்றி அறிய நீங்கள் யோகா குருவைத் தொடர்பு கொள்ளலாம்.

Trending News