Health Alert: இரவில் சாப்பிடக் கூடாத ‘சில’ பழங்கள்!

பழங்கள் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும் என்பதில் மாற்று கருத்து ஏதும் இல்லை. ஆனால் இரவில் சில பழங்களை உட்கொள்வது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 25, 2022, 12:00 PM IST
  • பழங்களை அதன் தன்மைக்கு ஏற்ப சரியான நேரத்தில் உட்கொள்ள வேண்டும்.
  • இரவில் எந்தெந்த பழங்களை சாப்பிடக்கூடாது என்பதை அறிந்து கொள்ளலாம்.
  • இல்லையெனில் அது உங்களுக்கு தீங்கு விளைவிக்கும்.
Health Alert: இரவில் சாப்பிடக் கூடாத ‘சில’ பழங்கள்! title=

இரவில் சாப்பிடக் கூடாத பழங்கள்: அனைவரின் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும், பழங்களை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, அனைவரும் சாப்பிட வேண்டும் எந்தில் மாற்று கருத்து ஏதும் இல்லை. ஆனால் பழங்களை அதன் தன்மைக்கு ஏற்ப சரியான நேரத்தில் உட்கொள்ள வேண்டும், இல்லையெனில் அது உங்களுக்கு தீங்கு விளைவிக்கும். குறிப்பாக இரவில் சில பழங்களை உட்கொள்வது உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். அதுமட்டுமின்றி இரவில் பழங்களை சாப்பிடுவதால் பல நோய்களுக்கு ஆளாக நேரிடும். எனவே முடிந்த வரை இரவில் பழங்களை சாப்பிடுவதை தவிர்க்கவும்.இரவில் எந்தெந்த பழங்களை சாப்பிடக்கூடாது என்பதை அறிந்து கொள்ளலாம்.

இரவில் தவிர்க்க வேண்டிய சில பழங்கள்:

ஆப்பிள்

மருத்துவர்கள் ஆப்பிள் சாப்பிட வேண்டும் என ஆலோசனை கூறுவதை நாம் பல முறை கேட்டிருப்போம். தினமும் ஆப்பிளை உட்கொள்வது நம் உடலை பல நோய்களிலிருந்து பாதுகாக்கிறது. ஆனால் ஆப்பிளை இரவில் சாப்பிடக்கூடாது. இரவில் ஆப்பிள் சாப்பிட்டால் உடல் நல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஆப்பிளில் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும் நார்ச்சத்து உள்ளது. ஆனால் இரவில் ஆப்பிள் சாப்பிடுவது செரிமான அமைப்புக்கு நல்லதல்ல. அதிகப்படியான நார்ச்சத்து காரணமாக, சாப்பிட்ட பிறகு தூங்கும் போது, வாயு அல்லது அமிலத்தன்மை போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.

வாழைப்பழம்

இரவில் வாழைப்பழம் சாப்பிடுவது பலன் தராது. பலர் உடற்பயிற்சி செய்த பிறகு மாலையில் வாழைப்பழத்தை சாப்பிடுகிறார்கள். ஷேக்காக இருந்தாலும் சரி, ஃப்ரூட் சாலட்டாக இருந்தாலும் சரி, இரவில் வாழைப்பழம் சாப்பிடக் கூடாது. நீங்கள் இரவில் வாழைப்பழங்களை உட்கொண்டால், அது உங்கள் உடல் வெப்பநிலையை அதிகரிக்கும், அதனால் தூக்கம் வருவதில் சிக்கல் இருக்கலாம். அதனால் இரவில் வாழைப்பழத்தை சாப்பிடவே கூடாது.

மேலும் படிக்க | Health Alert: நாம் வாங்கும் முட்டை புரதம் நிறைந்தது தானா; கண்டறிவது எப்படி..!!

சப்போட்டா

இரவில் சப்போட்டா சாப்பிட வேண்டாம். சப்போட்டாவில் சர்க்கரையின் அளவு அதிகம். எனவே சப்போட்டா சாப்பிட்டால், அது உங்கள் உடலின் சர்க்கரை அளவையும், ஆற்றல் அளவை அதிகரிக்கிறது. இதன் காரணமாக தூங்குவதில் சிக்கல் ஏற்படலாம். எனவே, இரவில் சப்போட்டா சாப்பிட வேண்டாம்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | பழச்சாறுடன் மாத்திரைகள் எடுத்துக் கொள்வது மிகவும் ஆபத்து; எச்சரிக்கும் நிபுணர்கள்!

மேலும் படிக்க | Sperm Booster: விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் ‘சூப்பர்’ உணவுகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News