Diet Mistakes: நீங்கள் என்ன உணவில் எடுத்துக்கொள்கிறீர்கள் என்பது உங்கள் ஆரோக்கியத்தை நேரடியாக பாதிக்கிறது. உணவு தொடர்பான சில சிறிய தவறுகள் கூட உங்கள் ஆரோக்கியத்திற்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தலாம்.
துரதிர்ஷ்டவசமான விஷயம் என்னவென்றால், நாம் நம்மை அறியாமலே, செய்யும் தவறுகள், ஆரோக்கியத்தின் மீது மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது. அவற்றை இன்று சரி செய்யாவிட்டால், எதிர்காலத்தில் அதன் மோசமான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். எனவே மக்கள் பொதுவாக செய்யும் தவறுகள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
கடுமையான டயட் கண்டிப்பாக கூடாது
சிலர் கடுமையான டயட்டைப் பின்பற்றுகிறார்கள். இப்படிச் செய்து உடல் எடையைக் குறைத்தாலும் மகிழ்ச்சியான மனநிலையில் இருக்க முடியாது, சந்தோஷம் மறைந்து விடும் என உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
கொழுப்பு உணவுகளில் இருந்து விலகி இருங்கள்
பொரித்த உணவுகள் யாருக்குத் தான் பிடிக்காது. அவை சுவையில் சிறந்தவை என்றாலும் உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. இது அனைவருக்கும் தெரியும் என்றாலும், அதனை தவிர்க்க மனம் பலருக்கு வருவதில்லை. இது இரத்த சர்க்கரை, உடல் பருமன் மற்றும் அதிக கொலஸ்ட்ரால் போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். எனவே முழுமையாக தவிர்க்க முடியாவிட்டாலும், அளவோடு சாப்பிடலாம்.
மேலும் படிக்க | Health Alert! கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்க காரணமாகும் ‘5’ பழக்கங்கள்
நேரத்திற்கு சாப்பிடுங்கள்
பெரும்பாலான மக்களுக்கு பசி எடுத்த உடன் கிடைத்தை சாப்பிடும் வழக்கம் உள்ளது. அதுவும் இந்த நேரத்தில் இதனை சாப்பிட வேண்டும், என்ற பழக்கம் ஏதும் இல்லாமல் இருக்கும். சாப்பிட டைம் டேபிள் ஏதும் இவர்களிடன் இருக்காது. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் பல நோய்களால் பாதிக்கப்படலாம். நேரத்திற்கு சாப்பிட முயற்சி செய்யுங்கள்.
இனிப்புகளை அளவோடு சாப்பிடுங்கள்
பலர் சர்க்கரையை முற்றிலுமாக கைவிடுகிறார்கள், ஆனால் அவ்வாறு செய்வதும் முற்றிலும் தவறானது. இப்படிச் செய்வதால், இனிப்பு சாப்பிடும் ஆசை உங்களுக்குள் உடனடியாக எழும். எனவே இனிப்புகளை சீரான அளவில் சாப்பிடுங்கள்.
பிரெஷ்ஷான உண்ணுங்கள், நோய்கள் விலகும்
பிரெஷ்ஷான உனவுகளை சாப்பிட முயற்சி செய்யுங்கள். இதில் பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களும் அடங்கும். இதனுடன், புதிதாக சமைத்த உணவை சாப்பிடுங்கள். மேலும், அதிகப்படியான உடற்பயிற்சி உங்களுக்கு தீங்கு விளைவிக்கும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | இதய துடிப்பை சீராக்கும் ‘பொட்டாஷியம்’; இந்த அறிகுறிகளை அலட்சியம் செய்யாதீர்கள்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR