Hair care Tips: முடி உதிர்வதை நிறுத்த, இந்த ஒரு விஷயத்தை இன்றே விட்டு விடுங்கள், அதிகமாக உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, கூந்தல் ஆரோக்கியத்திற்கும் ஆபத்தானது
முடி உதிர்தல் என்பது இன்றைய காலகட்டத்தில் ஒரு பொதுவான பிரச்சனையாகிவிட்டது. பிஸியான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்களால் இந்தப் பிரச்சனை வருகிறது.
இளம் வயதிலேயே முடி உதிர்வது (Hair Problems) டென்ஷனை உண்டாக்கும், ஆனால் ஒரு முக்கிய விஷயத்தை கவனித்தால் முடி உதிர்வைத் தடுக்கலாம். அதிகமாக பயன்படுத்தினால் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, அழகுக்கும் குந்தகம் ஏற்படுத்தும் உப்பு, இருமுனை கொண்ட கத்தி போல் கூர்மையானது.
மேலும் படிக்க | வெளுத்த நரைமுடியை கருமையாக்க சுலபமான குறிப்புகள்
எல்லா வயதினரும் முடி உதிர்தலால் சிரமப்படுகிறார்கள்
பொதுவாக முடி உதிர்தல் பிரச்சனை 40 அல்லது 50 வயதுக்கு பிறகுதான் வரும், ஆனால் தற்போதைய காலகட்டத்தில் முடி உதிர்வதற்கு வயது சம்பந்தமில்லை.
உணவுப் பழக்கத்தில் நாம் செய்யும் சிறிய தவறுகளா, முடி உதிரும் பிரச்சனை அதிகரிக்கிறது.
முடி உதிர்தலின் ஒரு பிரச்சனை ஆண்ட்ரோஜெனெடிக் அலோபீசியா (androgenetic alopecia) என்று அழைக்கப்படுகிறது, இந்த பிரச்சனை, ஆண் - பெண் பாகுபாடு பார்ப்பதில்லை.
அதிக உப்பு முடிக்கு கேடு
நிபுணர்களின் கூற்றுப்படி, உங்கள் அன்றாட உணவில் அதிக உப்பைப் பயன்படுத்தினால், அது முடிக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்துகிறது. பிரிட்டனின் ட்ரைகாலஜிஸ்ட் கெவின் மூர் GQ க்கு அளித்த பேட்டியில், 'அதிக உப்பு சாப்பிடுவது சோடியம் உருவாவதற்கு வழிவகுக்கிறது, இது மயிர்க்கால்களைச் சுற்றி குவியத் தொடங்குகிறது, இது இரத்த ஓட்டத்தை பாதிக்கிறது. இதன் காரணமாக அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் முடியின் வேர்களுக்கு செல்ல முடிவதில்லை.
மேலும் படிக்க | எப்போதும் சோர்வாக உணர்கிறீர்களா; சோர்வை விரட்ட சில டிப்ஸ்
முடி வலுவாக என்ன சாப்பிட வேண்டும்?
வலுவான முடிக்கு வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்ற ஊட்டச்சத்துக்களை உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம்.
வைட்டமின் பி5 மற்றும் இரும்புச்சத்து போதுமான அளவில் உணவில் இருந்தால், முடி கொட்டுவதில்லை. உச்சந்தலையும் ஆரோக்கியமாக இருக்கும்.
உணவில் புரதச் சத்து போதுமான அளவில் இருந்தால், அது முடியின் பிரகாசத்தை அதிகரிக்கிறது. முடியின் பிரச்சனை மரபணு ரீதியாகவும் இருக்கலாம், இது தவிர சுற்றுச்சூழல் மாசுபாடும் முடி கொட்டுவதற்கு காரணமாகவுள்ளது.
மேலும் படிக்க | தலைக்கு குளிக்கும்போது முடி அதிகம் கொட்டுகிறதா? இப்படி செய்து பாருங்கள்
உப்பின் தீமைகள்
தசைகள் மற்றும் நரம்புகளின் சரியான செயல்பாட்டிற்கு உடலில் உப்பு தேவைப்படுகிறது, ஆனால் தேவைக்கு அதிகமாக உப்பை உட்கொண்டால் அது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது.
இது பக்கவாதம் மற்றும் மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கிறது. நிபுணர்களின் கூற்றுப்படி, ஒரு நபர் ஒரு நாளைக்கு 6 கிராம் உப்புக்கு மேல் சாப்பிடக்கூடாது. ஆனால், உப்பை மிகவும் குறைத்து சாப்பிடுவதும் ஆரோக்கியத்தை சீர்குலைத்துவிடும்.
மேலும் படிக்க | ஆரோக்கியமான தலைமுடிக்கு தேவையான சத்துக்கள்
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது உணவுக்கு மட்டுமல்ல, உப்புக்கும் பொருந்தும் மொழி. உப்பிட்டவரை உயிர் உள்ள அளவும் நினைக்கலாம் என்று சொல்வதைப் போல, அதிக உப்பை உணவில் போட்டவரையும் யாரும் உயிருள்ள வரையில் மறக்க மாட்டார்கள்.
நம் சமையலறையில் இருக்கும் உப்பும் சர்க்கரையையும் நம் உயிரையும் காக்கும், உயிராபத்தையும் ஏற்படுத்தும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | வலி நிவாரணி மருந்துகளில் இவ்வளவு பிரச்சனையா? இதுக்கு வலியே தேவலாம்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR