இதயம் சீராக இருக்க... இந்த 5 பழக்கவழக்கங்களை தினமும் பின்பற்றுங்க! - பிரச்னை அண்டாது

Healthy Morning Routine: தினமும் காலையில் இந்த 5 விஷயங்களை பின்பற்றினால், உங்களின் இதயம் ஆரோக்கியமாக இருக்கும். இதுகுறித்து விரிவாக இங்கு காணலாம். 

Written by - Sudharsan G | Last Updated : Jun 12, 2024, 05:52 PM IST
  • இதயம் ஆரோக்கியமாக இருக்க சீரான வாழ்க்கை முறை அவசியமாகும்.
  • தினமும் இந்த பழக்கவழக்கத்தை கடைபிடித்தால் மட்டுமே ஆரோக்கியமாக இருக்க முடியும்.
  • உடற்பயிற்சி முதல் உணவு பழக்கம் வரை அனைத்தும் முக்கியம்.
இதயம் சீராக இருக்க... இந்த 5 பழக்கவழக்கங்களை தினமும் பின்பற்றுங்க! - பிரச்னை அண்டாது title=

Healthy Morning Routine: இந்த வாழ்வில் பலரும் பொருட் செல்வங்களை நோக்கி ஓடுவதாலும், அதன் மீதே தங்களின் முழு கவனத்தையும் வைத்திருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் போதுமான கவனத்தை கொடுக்க மறந்துவிடுகிறோம். இளமை காலத்தில் உடலை பொருட்டாக கருதாமல் குறைவாக தூங்குவதும், அதிகமாக துரித உணவுகளை சாப்பிடுவது, உடற்பயிற்சிகளை தவிர்ப்பது, அதிகாலை முதல் மதியம் வரை தூங்குவது என சீரற்ற வாழ்க்கை முறையை பின்பற்றுவதால் உடல்நல பாதிப்புகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளன. 

உடல் ஆரோகத்தியத்தை சீராக வைத்திருக்க அன்றாடமும் சீரான வாழ்க்கை முறையை மேற்கொள்ள வேண்டும். உணவு பழக்க வழக்கம் தொடங்கி உடற்பயிற்சி வரை அனைத்தையும் தினமும் மேற்கொள்வதன் மூலம் உடல்நலனை நன்றாக வைத்திருக்க இயலும். 

இந்த 5 பழக்கங்கள் முக்கியம்

அந்த வகையில், உங்களின் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க தினமும் காலையில் இந்த பழக்கவழக்கங்களை கடைபிடிக்க வேண்டும். இதன்மூலம், உங்களின் இதயநோய் வருவதற்கான ஆபத்து மிக குறைவாகும். அதுகுறித்து விரிவாக இதில் காணலாம். குறிப்பாக, இந்த ஐந்து பழக்கவழக்கங்களையும் ஒருநாள் விடாமல் தினமும் செய்ய வேண்டும். இவை உங்களின் அன்றாட பழக்கவழக்கமாக மாறினால் மட்டுமே இது உங்களுக்கு பயனளிக்கும் என்பதை மனதில் கொள்ளவும். 

மேலும் படிக்க | காலையில் டீயுடன் பிஸ்கட் சாப்பிடுபவரா நீங்கள்? இந்த ஆபத்துகள் வரலாம்!

- தினமும் காலையில் எழுந்த உடன் பெரிய டம்ளரில் தண்ணீர் குடித்து உங்களின் நாளை தொடங்குங்கள். நீங்கள் நீர்ச்சத்துடன் இருப்பதால் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். இதனால் இதயமும் ஆரோக்கியமாக செயல்படும். மேலும், காலையில் பெரீஸ், கீரைகள், சியா விதைகள் ஆகியவற்றாலான ஸ்மூதிகள் அல்லது கிரீன் டீயை காலையில் அருந்துவதும் நன்மை பயக்கும். இதில் ஆண்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமிண்கள் இருப்பதால் எனர்ஜியும் அதிகமாக கிடைக்கும். 

- தினமும் காலையில் எழுந்தவுடன் சிறிய உடற்பயிற்சிகளை மேற்கொள்ளவும். இது உங்களின் தசை, உங்கள் இயக்கத்தை சீராக்கவும் உதவும். இதனால் இதயத்திற்கு மிகவு் நல்லதாகும். அதாவது, புஷ்அப், ஸ்குவாட்ஸ் போன்ற உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

- அதேபோல் தினமும் காலையில் 10-15 நிமிடங்களுக்கு மூச்சுப் பயிற்சி மற்றும் தியானம் மேற்கொள்வதும் உங்களின் மனதையும், உடலையும் அமைதியாக வைத்திருக்கும். இதன்மூலம், மன அழுத்தம் குறையும். இது உங்களின் இதயத்திற்கு நன்மை பயக்கும். அதுமட்டுமின்றி ரத்த அழுத்தம் குறையும், மன கவலை குறையும். அதாவது இவை அனைத்தும் இதய நோய் வருவதற்கான காரணமாகும். இதை தடுப்பதன் மூலம் இதயமும் பாதுகாக்கப்படும்.

- அதேபோல், உடற்பயிற்சிகளை குறிப்பிடும்போது நடைபயிற்சி, ஓட்டப்பயிற்சி, சைக்கிளிங், நீச்சல் பயிற்சி ஆகியவை மேற்கொள்ள வேண்டும். இது இதயத்தின் தசைகளை வலுவாக்கும், ரத்த ஓட்டம் சீராக இருக்கும், ரத்த அழுத்தம் குறையும்.

- காலையில் ஃபைபர், ஆரோக்கியமான கொலஸ்ட்ரால் அடங்கிய உணவுகளை சாப்பிடவும். பெரீஸ் கலந்த ஓட்ஸ், காய்கறிகள் அடங்கிய ஆம்லெட், அவகாடோ டோஸ்ட் ஆகியவற்றை சாப்பிடலாம். அனைத்து ஊட்டச்சத்துக்களையும் சமமான அளவில் உண்ண வேண்டும். ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவை சாப்பிடுவது உங்களின் ரத்த சர்க்கரை அளவை குறைக்கும். ஆரோக்கியமான கொல்ஸ்ட்ரால் அளவால் நீங்கள் நாள் முழுவதும் எனர்ஜியாக இருக்கலாம்.

மேலும் படிக்க | வேகவைத்து சாப்பிட வேண்டிய உணவுகள்... வேற லெவலில் கிடைக்கும் ஊட்டச்சத்துக்கள்
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News