வெந்தயம் இருக்கும்போது வயகரா எதுக்கு? முளை கட்டி பயன்படுத்தினால் பலன் தரும் அற்புத மசாலா!

Fenugreek And Men Health : ஹார்மோன்களை மேம்படுத்தும் ஒரு அற்புதமான ஊட்டச்சத்து சக்தியாக செயல்படும் வெந்தயத்தை முளை கட்டி பயன்படுத்தினால் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழலாம்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 5, 2024, 05:53 PM IST
  • ஆண்களுக்கு ‘சக்தியை' அதிகரிக்க உதவும் வெந்தயம்
  • ஹார்மோன்களை மேம்படுத்தும் வெந்தயம்
  • முளை கட்டிய வெந்தயத்தின் நன்மைகள்
வெந்தயம் இருக்கும்போது வயகரா எதுக்கு? முளை கட்டி பயன்படுத்தினால் பலன் தரும் அற்புத மசாலா! title=

வெந்தயம் மிகச் சிறந்த மசாலாப் பொருட்களில் ஒன்று, உணவாக மட்டுமல்லாமல் மருந்தாகவும் நினைக்கக்கூடிய அளவுக்கு பல அற்புதமான நோய் தீர்க்கும் பண்புகளை கொண்டுள்ளது வெந்தயம். நோய் தீர்க்கும் மருந்தாக மட்டுமல்ல, உடலின் நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும் வெந்தயம், உடலின் ஹார்மோன்களையும் ஊக்குவிக்கிறது.

பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் ஹார்மோன்களை மேம்படுத்தும் ஒரு அற்புதமான ஊட்டச்சத்து சக்தியாக செயல்படுகிறது வெந்தயம். அதிலும் வெந்தயத்தை முளை கட்டி பயன்படுத்தினால் ஆரோக்கியமாக நீண்ட காலம் வாழலாம்.

ஆண்களுக்கு ‘சக்தியை' அதிகரிக்க உதவும் வெந்தயம்

இந்திய உணவுப் பொருட்களில் முக்கிய மசாலாவான வெந்தயம் மற்றும் வெந்தயக்கீரை, மருத்துவ குணங்கள் நிறைந்தவை. புரதம், நார்ச்சத்து, இரும்புச்சத்து, கால்சியம், மெக்னீசியம், வைட்டமின் சி, வைட்டமின் பி6 போன்ற சத்துக்களின் பொக்கிஷமான இது ஆண்கள் மற்றும் பெண்களின் மலட்டுத்தன்மை பிரச்சனைகளை நீக்குவதற்கும் உதவியாக இருக்கும் 

பாலியல் ஆற்றலை அதிகரிக்கும்
வெந்தயத்தில் டியோஸ்ஜெனின் என்ற தனிமம் நிறைந்துள்ளது. இது ஒரு இயற்கையான ஸ்டீராய்டு ஆகும், பாலியல் ஹார்மோன்களை உற்பத்தி செய்ய உதவுகிறது. டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் ஆண்களின் பாலியல் சக்தி மற்றும் கருவுறுதல் ஆகியவற்றிற்கு அவசியம். 

மேலும் படிக்க | வழுக்கை விழுவதை தவிர்க்க வேண்டுமா? ‘இதை’ செய்து பாருங்கள்!

அதேபோல, ஃபுரோஸ்டானோலிக் சபோனின்கள் எனப்படும் சேர்மங்கள் கொண்ட வெந்தயம், பாலியல் விருப்பத்தை அதிகரிக்கிறது. வயதாகும்போது,  டெஸ்டோஸ்டிரோன் அளவுகள் இயல்பாகவே குறையும்.

45 வயதுக்கு மேற்பட்ட ஆண்களில் 39 சதவிதத்தினருக்கு டெஸ்டோஸ்டிரோன் குறைபாடு இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே  இயற்கையாகவே டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்க வெந்தயத்தை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

பாலியல் செயல்திறன்

ஊற வைத்த வெந்தயத்தை தினசரி காலையில் வெறும் வயிற்றில் உண்டுவந்தால், ஆண்களுக்கு பாலியல் உறவில் நாட்டம் ஏற்படும், அதோடு, பாலியல் செயல்திறனும் அதிகரிக்கிறது.

விந்தணுக்களின் தரம்

வெந்தய விதைகளும் விந்தணுக்களின் தரத்தை மேம்படுத்த உதவுகிறது. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் விந்தணுக்களை சேதமடையாமல் பாதுகாக்க உதவுகிறது. இது விந்தணுக்களின் இயக்கம் மற்றும் உயிர்வாழும் திறனை அதிகரிக்கிறது. 

மேலும் படிக்க | நாட்டிலேயே குறைந்த விலையில் ’சரக்கு’ கிடைக்கும் மாநிலம் எது? தெரிஞ்சா ஆச்சரியம் தான்!
 
மலட்டுத்தன்மையை நீக்குகிறது
வெந்தயம், ஆண்களின் கருவுறுதலை மேம்படுத்த உதவுகிறது. தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஆண்களுக்கு ஏற்படும் குழந்தையின்மை பிரச்சனையை குறைக்கலாம். ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் கொண்ட வெந்தயம், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது. 

பாலியல் செயல்பாடு, ஆற்றல் நிலைகள், அறிவாற்றல் செயல்பாடு, எலும்பு ஆரோக்கியம், மனநிலை என பல்வேறு விஷயங்களில் வெந்தயம் ஆக்கப்பூர்வமான பலன்களைக் கொடுக்கிறது. 
 
செரிமானத்தை மேம்படுத்தும் வெந்தயம்
நார்ச்சத்து நிறைந்துள்ள வெந்தயம் செரிமான அமைப்பை மேம்படுத்துகிறது. உணவு செரிமானம், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளில் இருந்தும் நிவாரணம் அளிக்கும் இயற்கையான மசாலா வெந்தயம்.

வெந்தயத்தை கீரையாகவோ, உணவில் மசாலாவாக சேர்த்தோ அல்லது ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றிலோ சாப்பிடலாம். எப்படி சாப்பிட்டாலும், அருமையான பலன்களைக் கொடுக்கிறது வெந்தயம்.

மேலும் படிக்க | Diabetes: சர்க்கரை நோயாளிகளுக்கு அற்புதமான தீர்வு சொல்லும் ‘மஞ்சள்’ பழங்கள்! நீரிழிவைக் கட்டுப்படுத்த சுலப வழி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News