சில நாட்களுக்கு முன்பு, ரஷ்ய அரசாங்கம் தனது குடிமக்களுக்கு ஸ்பூட்னிக் வி (Sputnik V) தடுப்பூசி கொடுக்கப்பட்டவர்களுக்கு, மது அருந்த வேண்டாம் என்று எச்சரித்தது. தடுப்பூசி போட்ட பிறகு மதுவைத் தவிர்க்குமாறு அரசாங்கம் ஏன் எச்சரிக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.
கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் முதல் தடுப்பூசி உலகில் பயன்படுத்தபட்டு, மனிதர்களுக்கு போடப்பட்டு வருகின்றன. பிரிட்டன், கனடா போன்ற சில நாடுகள் பொது பயன்பாட்டை கூட அனுமதித்துள்ளன. இந்தியாவிலும் விரைவில் தடுப்பூசி பயன்பாடு தொடங்கி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், தடுப்பூசி எடுத்துக் கொண்ட பிறகு சில அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அப்பொழுது தான் தடுப்பூசி வேலை செய்யும். தடுப்பூசி போட்ட இரண்டு மாதங்களுக்கு மக்கள் மதுவைத் தவிர்க்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
ஒரு பேட்டியில், ரஷ்ய (Russia) துணை பிரதமர் டட்டியானா கோலிகோவ் (Tatiana Golikova) , தடுப்பூசி போடப்பட்ட ரஷ்ய குடிமக்கள் அடுத்த 42 நாட்களுக்கு சிறப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்று கூறினார். அவர்கள் நெரிசலான பகுதிக்கு செல்வதை தவிக்க வேண்டும். மாஸ்குகளை அணிய வேண்டும், சானிடைசர் பயன்படுத்த வேண்டும், குறிப்பாக ஆல்கஹால் அதாவது மது கூடவே கூடாது என்றார்.
ALSO READ | இந்தியாவின் முதல் mRNA தடுப்பூசி பரிசோதனைக்கு DCGI அனுமதி
மது அருந்துவதால் ஏற்படும் தீங்கு என்ன?
கொரோனா (Corona) தடுப்பூசி எடுத்துக் கொண்ட பிறகு இரண்டு மாதங்களுக்கு ஆல்கஹால், அதாவது மது அருந்துவதை தவிர்க்க வேண்டும் என்று ரஷ்யாவில் நுகர்வோர் பாதுகாப்பை மேற்பார்வையிடும் நுகர்வோர் பாதுகாப்பு கண்காணிப்பு அமைப்பின் தலைவர் அனா போபோவா கூறுகிறார். ஏனெனில் ஆல்கஹால் உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடியது நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை (Immunity) பாதிக்கிறது. வலிமையான உடலுக்காக ஆல்கஹாலை தவிர்க்க இருக்குமாறு மக்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.
இந்திய நிபுணர்களின் கருத்து என்ன?
ஒரு அறிக்கையில், ஸ்ரீ பாலாஜி ஆக்ஷன் மெடிக்கல் இன்ஸ்டிட்யூட்டின், நுண்ணுயிரியல் பிரிவில் பணிபுரியும் டாக்டர் ஜோதி முக்தா, தடுப்பூசி பயனுள்ளதாக இருக்க வேண்டும், செயல்க் திறனுடன் இருக்க வேண்டும் என்ற நோக்கில் ரஷ்யா இந்த கட்டுப்பாட்டை விதித்துள்ளது என்று கூறினார்.
ALSO READ | மனிதனால் விண்ணில் பறக்க முடியும் ஆனால் முடியாது: என்ன கொடுமை சார் இது