குளிர்காலத்தில் பேரிச்சம்பழம் நன்மைகள்: இயற்கையாகவே இனிப்பு சுவை கொண்ட பேரீச்சம் பழத்தின் சுவை வித்தியாசமானது. பிற பழங்களை விட பேரிச்சம்பழத்தில் அதிக கலோரிகள் உள்ளன. இது நாள் முழுவதும் நமக்கு ஆற்றலை வழங்குகிறது.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பேரிச்சம்பழம் மிகவும் பிடித்தமான பேரிச்சம்பழத்தில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. பொட்டாசியத்தின் சிறந்த மூலமாக உள்ளது பேரீட்சை.
கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம், புரதம், மாங்கனீசு, மெக்னீசியம், பாஸ்பரஸ், தாமிரம் மற்றும் கந்தகம் ஆகியவை பேரீச்சம்பழத்தில் இருப்பதால், உடலை பல நோய்களில் இருந்து இது காக்கிறது. இப்படி பல ஊட்டச்சத்துக்கள் நிரம்பிய பேரிச்சம்பழம் சுவையான மற்றும் சத்தான பழமாகும்.
இரத்த அழுத்தத்தை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் பேரிச்சம்பழம், அதிக நார்ச்சத்து கொண்டது. அதிலும் குளிர்காலத்தில் பேரீச்சம்பழம் சாப்பிடுவதால் நன்மைகள் இரட்டிப்பாகும். குளிர்காலத்தில் பாலுடன் உலர் பேரிச்சம்பழத்தை சேர்த்து உண்பது ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
குளிர்காலத்தில் பேரீச்சம்பழத்தை பாலுடன் சேர்த்து (Benefits of Dry Dates with Milk) உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். வாருங்கள், இதன் ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
நோய் எதிர்ப்பு சக்தி வலுவடைகிறது
குளிர்காலத்தில் பேரீச்சம்பழத்தை பாலுடன் சேர்த்து சாப்பிடுவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். பால் மற்றும் பேரீச்சம்பழங்களில் நிறைந்துள்ள வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. குளிர்காலத்தில் சளி, இருமல் தொல்லை இருந்தால் பேரீச்சம்பழத்தை பாலில் கொதிக்க வைத்து குடிக்கலாம்.
மேலும் படிக்க | Year Ender: சமூக ஊடகங்களில் உடல்நலம் & உடற்பயிற்சி பற்றிய வித்தியாசமான தேடல்கள்
செரிமான அமைப்பு ஆரோக்கியமாக இருக்கும்
குளிர்காலத்தில் பேரீச்சம்பழத்தை பாலுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் செரிமான பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். பேரீச்சம்பழத்தில் நார்ச்சத்து உள்ளது, இது செரிமான அமைப்பை வலுப்படுத்த உதவுகிறது, வயிற்று பிரச்சனைகளை நீக்குகிறது. இதனை உட்கொள்வதன் மூலம் வாயு, மலச்சிக்கல், அமிலத்தன்மை போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும்
குளிர்காலத்தில் பேரீச்சம்பழத்தை பாலுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயிலிருந்து விடுபடலாம். பேரீச்சம்பழத்தில் இருக்கும் நார்ச்சத்து இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இது நீரிழிவு நோயாளிக்கு ஏற்படும் அதீத பசியைத் தடுக்கவும் உதவுகிறது.
கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும்
குளிர்காலத்தில் பாலுடன் பேரீச்சம்பழம் சாப்பிடுவது இதய ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். இதனை உட்கொள்வதால் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு குறைவதுடன் இரத்த அழுத்தத்தமும் கட்டுக்குள் இருக்கும். மாரடைப்பு போன்ற இதய நோய்களின் அபாயம் குறைகிறது.
மேலும் படிக்க | சிறுநீரக ஆரோக்கியத்தில் சிறிதும் அலட்சியம் வேண்டாம்: இவைதான் அறிகுறிகள்
எலும்புகளை வலுப்படுத்தும்
குளிர்காலத்தில் பேரீச்சம்பழத்தை பாலுடன் சேர்த்து சாப்பிட்டால் எலும்புகள் மற்றும் மூட்டுகள் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். பால் மற்றும் பேரீச்சம்பழங்களில் கால்சியம் நிறைந்துள்ளது, இது எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது. இவை இரண்டையும் சேர்த்து சாப்பிட்டால் மூட்டு வலி மற்றும் வீக்கத்தில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
குளிர்காலத்தில் பேரீச்சம்பழத்தை பாலுடன் சேர்த்து சாப்பிடுவது எப்படி?
ஒரு பாத்திரத்தில் ஒரு கிளாஸ் பாலை ஊற்றி சூடாக்கவும். பிறகு 2-3 உலர் பேரீச்சம்பழங்களை அதில் போடவும். இப்போது பாலில் நன்கு கொதிக்கவைத்துக் கொள்ளவும். தினமும் இரவில் தூங்கும் முன் இந்த பாலை உட்கொண்டால், குளிர்காலம் ஆரோக்கியமாக கழியும்.
(பொறுப்புத் துறப்பு- இந்த கட்டுரை இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. இதை ஒரு சுகாதார நிபுணரின் கருத்தாக கருத வேண்டாம். உடல் நலம் தொடர்பான எந்த பிரச்சனைகளுக்கும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | குளிர் காலத்தில் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் சூப்பர் டிப்ஸ்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ