தொப்பை கொழுப்பால் கவலையா? எடை குறைக்க எளிய வழி இரவு உணவு!

Low-Calorie Dinner For Weight Loss: உடல் எடை குறைய வேண்டுமானால், இரவு உணவில் கவனம் செலுத்த வேண்டும்... இரவு உணவே, நமது உடல் எடை, தொப்பை, தொந்தி, ஊளைச்சதை, தொடையில் சதை அதிகமாவது என பல பிரச்சனைகளுக்கு காரணமாகிறது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Dec 3, 2023, 05:43 PM IST
  • தொப்பை கொழுப்பைக் குறைக்க பெஸ்ட் ஆப்ஷன்
  • குறைந்த கலோரி கொண்ட டின்னர்
  • உடல் எடையை குறைக்கும் இரவு உணவு
தொப்பை கொழுப்பால் கவலையா? எடை குறைக்க எளிய வழி இரவு உணவு! title=

தொப்பை மற்றும் இடுப்பில் படிந்திருக்கும் ஊளைச்சதையை குறைத்தாலே உடல் கச்சிதமாக அழகாக மாறிவிடும் என்று ஏங்குபவர்கள், உடல் எடையைக் குறைக்க பிரம்ம பிரயத்தனம் செய்கின்றனர். உடல் எடையை குறைக்க உணவுமுறை மிகவும் முக்கியமானது என்பதால், பலரும் உடல் எடை குறைக்க பல்வேறு முயற்சிகளை செய்கின்றனர். உண்மையில் உடல் எடை குறைய வேண்டுமானால், இரவு உணவில் கவனம் செலுத்த வேண்டும்.

ஏனென்றால், இரவு உணவுக்குப் பிறகு, மறுநாள் காலை வரை நீண்ட நேரம் உணவு உண்ணாமல் இருந்தபிறகு, உண்ணும் உணவானது உடலுக்கு ஊக்கத்தை கொடுக்கும். அதேபோல, இரவு முழுவதும் உடல் சீராக இயங்கவும் தேவையான ஊட்டச்சத்துக்கள் கொண்ட உணவாக இருக்க வேண்டிய இரவு உணவு, மிகவும் லேசானதாகவும் அதாவது அதிக கலோரிகள் இல்லாததாகவும் இருக்க வேண்டும்.

இரவு உணவே, நமது உடல் எடை, தொப்பை, தொந்தி, ஊளைச்சதை, தொடையில் சதை அதிகமாவது என பல பிரச்சனைகளுக்கு காரணமாகிறது.  எனவே இரவு உணவில் எதுபோன்ற உணவுகள் இருக்க வேண்டும்? இதைத் தெரிந்துக் கொள்வோம்.

மேலும் படிக்க | எடை குறைப்பது ரொம்ப ஈசி: பச்சை பயறை இப்படி சாப்பிடுங்க போதும்

காய்கறி சாலட்

காய்கறிகள், அதிலும் குறிப்பாக, ப்ரோக்கோலி, காலிஃபிளவர் மற்றும் முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகளில் நார்ச்சத்து அதிகம் உள்ளது, இந்த காய்கறிகளில் சாலட் செய்து உண்பது, இரவு முழுவதும் தேவையான ஊட்டச்சத்துக்களை கொடுப்பதோடு, விரைவில் பசி எடுப்பாமல் வயிற்றை நிரப்புகிறது. 

 

புரதம், நார்ச்சத்து மற்றும் குறைந்த கலோரி உள்ளடக்கம் கொண்ட காய்கறிகளின் கலவையானது, எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு சிறந்த உணவு ஆகும்.

உருளைக்கிழங்கு & வேர் காய்கறிகள்
உருளைக்கிழங்கு மற்றும் பிற வேர் காய்கறிகள் எடை இழப்பு மற்றும் ஆரோக்கியத்திற்கு அற்புதமானவை. வேகவைத்த வெள்ளை உருளைக்கிழங்கில் உள்ள அதிக அளவு எதிர்ப்புத் திறன் கொண்ட மாவுச்சத்து உடலுக்கு தேவையானது. இது விலங்கு ஆய்வுகளில் எடை இழப்புக்கு நம்பகமான ஆதாரமாக கண்டறியப்பட்டுள்ளது.

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த வேர் காய்கறிகளில் சர்க்கரை வள்ளிக்கிழங்கு முக்கியமானதாகும். நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த, சர்க்கரை வள்ளிக்கிழங்கு இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கு சர்க்கரைவள்ளிக்கிழங்கு ஊட்டச்சத்து மிகுந்த டின்னருக்கான ஏற்ற உணவாக இருக்கும்.

மேலும் படிக்க | ’இந்த’ பிரச்சனை இருந்தால், கண்டிப்பாக மது அருந்தக்கூடாது! தவறினால் மரண ஆபத்து அதிகம்

பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகள்

பருப்பு, கருப்பு பீன்ஸ் மற்றும் சிறுநீரக பீன்ஸ் போன்ற பீன்ஸ் மற்றும் பிற பருப்பு வகைகள் எடை இழப்புக்கு பயனுள்ளதாக இருக்கும். அதிக புரதம் மற்றும் நார்ச்சத்து கொண்ட அருமையான உணவாக இருக்கும்.  

diet plan

சூப்கள்

மணம், சுவை, குளிர்ச்சிஆகியவற்றிற்கு இடையில், மற்ற உணவுகளை விட சூப் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றது. இரவு உணவு எது சாப்பிட்டாலும், அதற்கு முன், சூப்பைச் சேர்த்துக்கொள்வது, திருப்தியானதாக இருகும். இரவு உணவை ஒட்டுமொத்தமாக குறைவாக சாப்பிடவும் எடை இழப்பை ஊக்குவிக்கவும் காய்கறி சூப் உதவும்.

(பொறுப்புத் துறப்பு: எங்கள் கட்டுரை தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | ரொம்ப பிஸியா... உடற்பயிற்சி - டயட் இல்லாமலும் உடல் பருமனை குறைக்கலாம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News