கண்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள இனிமே இதையெல்லாம் சாப்பிடுங்க!

கண்களின் பாதுகாப்பை மேம்படுத்த நெய், நெல்லிக்காய் , உலர் திராட்சை, கல் உப்பு மற்றும் திரிபலா போன்றவற்றை உண்ண வேண்டும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 11, 2022, 02:55 PM IST
  • திரிபலா பொடியை நெய் மற்றும் தேன் கலந்து இரவில் சாப்பிடுவது கண் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
  • நெல்லிக்காய் இயற்கையாகவே கண்கள் பாதுகாப்பில் உதவுகிறது.
கண்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள இனிமே இதையெல்லாம் சாப்பிடுங்க! title=

மனிதனுக்கு ஐம்புலன்கள் முக்கியமானது, அதில் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது கண்கள் தான்.  கண்களை கவனமுடன் பாத்துக்கொள்வது அவசியமானதாகும்.  தற்போது பலரும் ஸ்மார்ட்போன், கணினி போன்றவற்றில் தான் அதிக நேரம் செலவிடுகின்றனர், அதிலும் இந்த தொற்று காலத்தில் அனைவரது வேலையும் கணினி திரையை நோக்கியே நகர்ந்துள்ளது.   இவற்றிலிருந்து வரும் கதிர்வீச்சை அதிக நேரம் பார்ப்பதால் கண்கள் பாதிப்பிற்கு உள்ளாகின்றன.  கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த கண்களுக்கான பயிற்சிகள் மேற்கொள்ளுதல், அடிக்கடி பரிசோதனை செய்துகொள்ளுதல் போன்றவற்றை பலரும் செய்கின்றனர்.  ஆனால் இவற்றை விட உணவில் சில பொருட்களை சேர்த்துக்கொள்வதால் கண்களின் ஆரோக்கியம் மேம்படும்.

Ways to maintain good eyesight | Health News | Zee News

மேலும் படிக்க | தினமும் ஒரு கிவி பழம்: உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் ஏராளம்

உணவின் மூலம் கண்களின் ஆரோக்கியத்தை எவ்வாறு பாதுகாக்கலாம் என்பதை பற்றி பார்ப்போம்.  கண்களின் பாதுகாப்பில் முக்கியமான உணவாக கருதப்படுவது  நெய், நெல்லிக்காய் , திராட்சை, கல் உப்பு மற்றும் திரிபலா போன்றவை.  இவற்றை தினமும் உணவில் சேர்த்துக்கொண்டால் ஏரளமான பலனை பெற முடியும்.  மேலும் இவற்றை எந்த வகையில் எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பது குறித்து இங்கே காணலாம்.

1) திரிபலா பொடியை நெய் மற்றும் தேன் கலந்து இரவில் சாப்பிடுவது கண் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

2) நெல்லிக்காயில் அதிக அளவு வைட்டமின் C நிறைந்துள்ளது, ஆரஞ்சு பழத்தை விட கிட்டத்தட்ட 20 மடங்கு நெல்லிக்காயில் அதிக சத்து உள்ளது.  வைட்டமின் C விழித்திரை செல்களை பராமரிப்பதிலும், ஆரோக்கியமான நுண்குழாய்களை மேம்படுத்துவதிலும் உதவுகிறது.

3) நெல்லிக்காய் இயற்கையாகவே கண்கள் பாதுகாப்பில் உதவுகிறது.  சர்க்கரை நோயால் ரெட்டினாவில் ஏற்படும் குறைப்பாடுகளை சரிசெய்ய இது முக்கிய பங்காற்றுகிறது. 

This is how our eyes sense moonlight, daylight | Health News | Zee News

4) கண் பார்வைக்கு ஏற்றது கல் உப்பு மட்டுமே, கண் பார்வையை மேம்படுத்த தினமும் உணவில் கல் உப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

 5) உலர் திராட்சையில் உள்ள பாலிஃபீனாலிக் பைட்டோநியூட்ரியண்ட்கள் (polyphenolic phytonutrients) கண் பார்வையில் ஏற்படும் தீங்கை நீக்கவும் மற்றும் கண் தசைகள் சிதைவடைவதை தடுக்கவும் உதவுகிறது.  இது பார்வை மற்றும் கண்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது

6) சுத்தமான தேனை தினமும் உட்கொள்வது கண் பார்வை ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

7) உங்கள் ஜீரண சக்திக்கு ஏற்ப நெய்யை சாப்பிடுவது கண்களுக்கு நல்லது.  ஆயுர்வேதத்தில் நெய்யை பயன்படுத்தி அதிக மருந்து பொருட்கள் தயாரிக்கப்படுகிறது, அதிலும் குறிப்பாக நெய் கண் பார்வையை மேம்படுத்துகிறது.

8)  அதே சமயம் திரிபலா பொடியை அதிகளவில் பயன்படுத்தக்கூடாது.

மேலும் படிக்க | Fatty Liver: கல்லீரலில் சேர்ந்துள்ள கொழுப்பை நீக்கும் ‘4’ எளிய வழிகள்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News