கசப்பான வெள்ளரிக்காய்க்கான கிச்சன் ஹேக்ஸ்: கோடையில் வெள்ளரிக்காய் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இந்த சீசனில் சாலட் வடிவில் வெள்ளரியை அனைவரும் சாப்பிட விரும்புகிறார்கள். வெள்ளரிக்காயில் அதிக நீர்சத்து உள்ளது. ஆகையால் கோடையில் நீரிழப்பு ஏற்படுவதைத் தவிர்க்க வெள்ளரி நுகர்வு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
வெள்ளரிக்காய் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்
பல வகையான வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் எலக்ட்ரோலைட்டுகள் வெள்ளரியில் காணப்படுகின்றன. அதை சாப்பிடுவது எடை குறைக்க உதவுகிறது. கொலஸ்ட்ராலைக் குறைக்க வெள்ளரிக்காய் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. வெள்ளரி விதைகள் மற்றும் அதன் தோலில் சிலிக்கான், குளோரோபில் போன்ற இரசாயனங்கள் உள்ளன. இது செரிமானத்தை எளிதாக்குகிறது. எனினும், சில வெள்ளரிக்காய் வகைகள் கசப்பாக இருக்கும். இந்த வெள்ளரிக்காயை உட்கொள்வதற்கு முன்னால், இதன் கசப்பை அகற்றுவது அவசியமாகும். இல்லையெனில் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம்.
சில எளிய வழிகளின் மூலம் வெள்ளரிக்காயின் கசப்பை நீக்க முடியும். அவற்றை பற்றி இங்கு காணலாம்
மேலும் படிக்க | உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்க இதுதான் முக்கிய காரணம்
முதல் வழி
வெள்ளரிக்காயில் இருந்து கசப்பை அகற்ற எளிதான வழி, அதன் மேலிருந்து சிறு பகுதியை வெட்டுவதாகும். வெட்டிய பிறகு, வெள்ளரிக்காயில் உப்பைத் தடவி, வெட்டிய துண்டைக் கொண்டு வட்டமாகத் தேய்த்தால், உடனே நுரை உருவாகத் தொடங்கும். அதே போல் வெள்ளரிக்காயின் மறுமுனையையும் வெட்டி, உப்பு சேர்த்துத் தேய்க்கவும். இப்படி செய்வதன் மூலம் வெள்ளரியில் உள்ள கசப்பு போய்விடும்.
இரண்டாவது வழி
இதில், முதலில் வெள்ளரிக்காயின் நுனியை வெட்டி, பின்னர் வெள்ளரிக்காயின் தோலை நீக்க வேண்டும். பின், இதை வெட்டுவதற்கு முன், ஒரு முட்கரண்டி (ஃபோர்க்) எடுத்து, அதன் உதவியுடன் வெள்ளரிக்காயில் துளையிட வேண்டும். இது வெள்ளரிக்காயின் கசப்பை நீக்குகிறது.
மூன்றாவது வழி
வெள்ளரிக்காய் வெட்டும் போது, முதலில் கத்தியின் உதவியுடன் வெள்ளரிக்காயை நடுவில் இருந்து வெட்டி, பின்னர், முன் மற்றும் பின் பகுதிகளை வெட்டி அவற்றை அகற்றவும். இந்த வழியில் வெள்ளரிக்காய் ஒருபோதும் கசப்பாக இருக்காது. வெள்ளரிக்காயை நேரடியாக நடுவில் இருந்து நறுக்கினால், கசப்பு முற்றிலுமாக நீங்கிவிடும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | பெற்றோர்கள் கவனத்திற்கு: 'மையோபியா' நோயால் பாதிப்படையும் பள்ளி குழந்தைகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR