அளவுக்கு அதிகமா சாப்பிட்டா அமுர்தமும் நஞ்சாகும் என்பது பழமொழி உண்டு. அதுபோல மதுவை அளவாக அருந்தினால் ஆபத்து இல்லை. ஆனால் அளவுக்கு அதிகமாக பருகினால் ஆபத்து ஏற்படும்.
இப்போது எல்லாம் மது அருந்துவது மற்றும் புகை பிடித்தல் என்பது ஒரு ஃபேஷனாகிவிட்டது. இன்றைய காலத்தில் பொழுதைப் போக்குவதற்குகாக மது அருத்துவோர் கூட ஏராளம் பேர் இருக்கிறார்கள்.
மதுவினால் முகத்தில் பருக்கள் வருமா? அதைப்பற்றி இங்கு காண்போம்:
டெஸ்டோஸ்டிரோன், ஈஸ்ட்ரோஜென் என இரண்டு ஹார்மோன் தான் நம் முகத்தில் ஏற்படும் முகப்பருவிற்கு காரணமாம். மது அருந்திய பிறகு நம் ஹார்மோன்களில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுகின்ற. இந்த ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வுகளால் முகப்பரு ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
தொடர்ந்து மது அருந்துவதால் நோயெதிர்ப்பு சக்தி குறைந்து முகப்பருக்களை உண்டாக்கும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராட முடியாத நிலை நம் உடலில் ஏற்படுகிறது. மதுவினால் நமது உடலில் சர்கரையின் அளவு அதிகமாகிறது மேலும் சைடு டிஷ்ஷாக எண்ணெயில் பொரித்த மற்றும் வறுத்த உணவுகளை சாப்பிடுவதால் முகப்பருக்கள் ஏற்படும்.
மேலும் மது அருந்துவதால் நம் இதயம், கல்லிரல் பாதிக்கப்படுகிறது. இதன்முலம் ஹார்மோன்களின் சீரான நிலையில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டு முகப்பரு ஏற்படுகிறது.
கவலையினால் மது அருந்துவோருக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. இதன்முலம் ஹார்மோன்களின் சீரான நிலையில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டு முகப்பரு ஏற்படுகிறது. முடிந்த வரை கவலை, டென்ஷன், மனவருத்ததின் போது மதுவை தவிர்க்கவும்.
மேற்குறிப்பிட்ட அனைத்தையும் படித்து "மது"வை அளவாக அருந்தினால் ஆபத்து இல்லை.