Diabetes Control: சர்க்கரை நோயை கட்டுப்படுத்த சுலபமான வழிகள்

அபாயகரமான நீரிழிவு நோயை கட்டுப்படுத்த வீட்டிலேயே செய்யக்கூடிய ஆயுர்வேத தீர்வுகள் பல உள்ளன. இவை எந்தவித பக்கவிளைவும் இல்லாமல் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்கும்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 26, 2021, 05:41 PM IST
  • சர்க்கரை நோயை கட்டுப்படுத்த கைவைத்தியம்
  • நீரிழிவை ஓடச் செய்யும் சமையலறை மருந்துகள்
  • உணவே மருந்து என்பதை உரக்கச் சொல்லுங்கள்
Diabetes Control: சர்க்கரை நோயை கட்டுப்படுத்த சுலபமான வழிகள் title=

புதுடெல்லி: நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று சொல்வார்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில் நீரிழிவு நோய் பெரும்பாலனவர்களுக்கு மிகப்பெரிய தொல்லையாய் மாறிவிட்டது. அபாயகரமான நீரிழிவு நோயை கட்டுப்படுத்த வீட்டிலேயே செய்யக்கூடிய ஆயுர்வேத தீர்வுகள் பல உள்ளன. இவை எந்தவித பக்கவிளைவும் இல்லாமல் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்கும்.

அதிலும் இந்தியாவில் வசிக்கும் ஆறில் ஒருவருக்கு நீரிழிவு பாதிப்பு உள்ளது. இந்த நோய் பல துணை நோய்களையும் அழையா விருந்தாளியாக கொண்டுவந்து ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பதுதான் இந்த நோயை பார்த்து அனைவரும் அதிக அச்சம் கொள்வதற்கான காரணம்.

நீரிழிவு நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு  கொரோனா தொற்று போன்ற வைரஸ் தாக்கம் அதிக பாதிப்பை ஏற்படுத்தும். இதை கட்டுப்படுத்த சுலபமான ஆயுர்வேத தீர்வுகள் உள்ளன.  

Also Read | ஆரோக்கியமான வாழ்வுக்கு அஸ்திவாரம் போடும் தினை மலட்டு தன்மையை நீக்கும்

துளசியும் வேப்பிலையும் நீரிழிவை நெருங்கவிடாது. 10 வேப்பங்கொழுந்து இலைகளையும், 10 துளசி இலைகளை அரைத்து அதன் சாற்றை குடித்து  வந்தால் இன்சுலின் சுரப்பு அதிகரிக்கும். நீரிழிவு கட்டுக்குள் வரும்.

பாகற்காய் சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற காய் என்பது தெரியும். நீரிழிவு நோய்க்கும் பாகற்காய் கசக்குமாம்… சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், உடலை சுத்திகரிக்கவும் பாகற்காய் சாறு சிறந்தது. 

கடுக்காய், தன்றிக்காய், நெல்லிக்காய் ஆகிய மூன்றையும் கலந்து செய்யப்படும் அருமருந்து திரிபலா. தினமும் 1 தேக்கரண்டி அளவு திரிபலா பொடியை வெது வெதுப்பான நீரில் கலந்து குடித்து வந்தால் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வரும். 

Also Read | Easy Weight Loss: உடல் எடையை குறைக்க உடற்பயிற்சி தேவையில்லை தெரியுமா?

20 கிராம் அளவு ஆலமரப்பட்டையை 4 கப்  நீரில் கொதிக்கவிடவேண்டும். அது 1 கப் அளவு சுண்டியபிறகு வடிகட்டி குடித்து வந்தால் உடலில் சர்க்கரையின் அளவு குறையும். அதேபோல், 3 தேக்கரண்டி லவங்கப் பொடியை 1 லிட்டர்  நீரில் கொதிக்க விட்டு வடிகட்டிக் குடித்து வந்தால்  சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும்.  

நெல்லிக்காய் அனைவருக்கும் அருமருந்தான காய். தினமும் 20 மில்லி லிட்டர் நெல்லிச்சாற்றை குடித்து வந்தால் நீரிழிவு நோய் கட்டுக்குள் இருக்கும். வெந்தயத்தை முதல் நாள் இரவு ஊற வைத்துவிட்டு, அடுத்த நாள் அதை  அரைத்து வடிகட்டி குடித்தால் சர்க்கரை நோய் அண்டாது.  . 

மஞ்சளில் உள்ள குர்குமின், இன்சுலின் சுரப்புச் செல்கள் சேதமடைவதைக் கட்டுப்படுத்தி, உடலில் இன்சுலின் சுரப்பை அதிகரிக்கும். 

உணவே மருந்து என்பதை உரக்கச் சொல்லுங்கள், மருந்தையே உணவாக்காமல், வீட்டிலுள்ள மளிகைப் பொருட்களைக் கொண்டே நோய் பரமரிப்பை செய்வது தான் என்றென்றும் நல்லது.

Also Read | Benefits of Neem: நோய் எதிர்ப்பு சக்தியின் பிறப்பிடம் வேப்பிலையின் இனிக்கும் ஆரோக்கியம் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News