தூக்கம் ஒரு மனிதனுக்கு இன்றியமையாத ஒன்று. அதனை எப்படி தூங்குகிறோம் என்பதுதான் முக்கியம். பலர் மெத்தையில் படுப்பதையே சுகம் என்றும் அதில்தான் நன்மை என்றும் நினைத்துக்கொண்டு தரையில் படுப்பதை தவிர்த்துவருகின்றனர். ஆனால் தரையில் படுப்பதால் உடல்நலத்திற்கு அதிகளவிலான நன்மைகள் கிடைக்கின்றன.
மெத்தையில் தூங்குவதால் வரும் பிரச்னைகள்:
மெத்தையில் படுத்து தூங்கும்போது பெரும்பாலும் உடலை நிமிர்த்தி வைத்திருக்க வாய்ப்பில்லை. மெத்தையின் மென்மைக்கு ஏற்ப உடலை வளைத்து சௌகரியமாக தூங்கலாம்.
ஆனால் அது முதுகெலும்பு தோரணையை சீராக வைத்துக்கொள்வதற்கு உதவாது.
தரையில் தூங்குவதால் வரும் நன்மைகள்:
முதுகெலும்பு நேராக வைத்திருப்பதற்கு உதவும்.ஏனெனில் தரையில் படுக்கும்போது பெரும்பாலும் கால்களை நேராக நீட்டி முதுகு தண்டுவடம் நேர் நிலையில் இருக்கும்படிதான் தூக்க நிலை அமையும். வளைந்து படுத்தாலும் முதுகெலும்புக்கு அதிக அழுத்தம் கொடுக்கப்படாது.
மேலும் படிக்க | மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கும் இந்த உணவுகள் வேண்டாமே...
தரையில் படுக்கும்போது கிடைக்கும் மேம்பட்ட தோரணை முதுகெலும்பின் இயற்கையான வளைவுக்கு துணை நிற்கும். முதுகெலும்பின் அழுத்தத்தைக் குறைக்க சிலர் தங்களது முதுகின் கீழ் மெல்லிய தலையணையை வைக்க வேண்டியிருக்கும்.
அதேசமயம், முதுகு வலியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மெத்தையில் படுப்பது உடலுக்கு மென்மையாக இருப்பதுபோல் தோன்றும். ஆனால் உடல் எடைக்கு ஏற்ப அழுத்தம் உண்டாகும். அதனால் முதுகுவலிதான் அதிகரிக்கக்கூடும். சமதளமான மேற்பரப்பில் தூங்குவதன் மூலம் வலியில் இருந்து சிறிது நிவாரணம் பெறலாம்.
மேலும் படிக்க | பார்லியில் உள்ளன எக்கச்சக்க ஆரோக்கிய நன்மைகள்: முழு விவரம் இதோ
தரையில் தூங்குவது குளிர்ச்சியான தூக்க சூழலை அளிக்கும். தரை குளிர்ச்சியாக இருக்கும் போது, உடல் வெப்பம் விரைவில் தணிந்துவிடும். கோடையில் படுக்கை அறை சூழல் குளிர்ச்சியாக அமைந்திருக்க வேண்டும். அதற்கேற்ப ஏ.சி. பயன்படுத்தாதவர்களுக்கு தரையில் தூங்குவது சிறந்த பலனை கொடுக்கும்.
தரையில் தூங்குவது நல்லதுதான் என்றாலும், வயதானவர்கள், மூட்டுவலி உள்ளவர்கள், தரையில் இருந்து எழுந்து நிற்பதில் சிக்கல் உள்ளவர்கள், ஒவ்வாமை பாதிப்பு கொண்டவர்கள் தரையில் தூங்குவதை தவிர்த்துவிடுவது நல்லது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR