என்றும் இளமை எதிலும் புதுமை என்பவரா நீங்கள்? இளநீர் இருந்தால் எதுவும் சாத்தியமே

தனது இளமைக்கு காரணம் இளநீர் என்று சொல்கிறார் நடிகை சாரா அலி கான். தினமும் காலையில் இளநீருடன் தனது நாளை தொடங்குவதால் சுறுசுறுப்பாக இருப்பதாக சொல்கிறார். 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Apr 23, 2022, 01:51 PM IST
  • இளநீரின் மகத்துவம்
  • இளமைக்கு இளநீர்
  • முதுமையை தவிர்க்க உதவும் இளமையான நீர்
என்றும் இளமை எதிலும் புதுமை என்பவரா நீங்கள்?  இளநீர் இருந்தால் எதுவும் சாத்தியமே title=

Coconut Water: தனது இளமைக்கு காரணம் இளநீர் என்று சொல்கிறார் நடிகை சாரா அலி கான். தினமும் காலையில் இளநீருடன் தனது நாளை தொடங்குவதால் சுறுசுறுப்பாக இருப்பதாக சொல்கிறார். 

இளநீரில் உள்ள ஏராளமான சத்துக்களை குடிக்கும் தனக்கு அதனால் ஏற்படும் நன்மைகளை பற்றி சொல்லும் நடிகை (Sara Ali Khan Diet Secrets), அதை அனைவருக்கும் பரிந்துரைப்பதாக சொல்கிறார்.
 
சாரா அலி கானும் இளநீரும்

சாரா அலி கான் தனது உடற்தகுதியைக் பராமரிக்க இளநீரே சிறந்த வழி என்கிறார். இந்த ஆரோக்கியமான பானம் ஆரோக்கியத்திற்கும் அழகிற்கும் பல வழிகளிலும் நன்மை பயக்கும்.

இயற்கையாக கிடைக்கும் இளநீர், எல்லா வயதினருக்கும் ஏற்றது, பொதுவாக எந்த நோய் பாதிப்பு இருந்தாலும் இளநீர் குடிப்பதில் தவறில்லை என்றும் நம்பப்படுகிறது. 

அதனால்தான், உணவியல் நிபுணர்கள் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் இளநீரை அடிக்கடி குடிக்கவேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள்.

health

இளநீரின் ஆரோக்கிய நன்மைகள்:

நீர்சத்து (Hydration)
இளநீர் உடலை உடனடியாக ஹைட்ரேட் செய்து ஆற்றலைத் தருகிறது. எலக்ட்ரோலைட்ஸ்களான பொட்டாசியம் (Potassium), கார்போஹைடிரேட், சோடியம் மக்னீசியம் என பல சத்துக்கள் இளநீரில் உள்ளது. எனவே இது உடலில் உள்ள நீரின் அளவை குறையாமல் பார்த்துக்கொள்ளும். குறைந்த கலோரிகளைக் கொண்ட இளநீரில் பல்வேறு கனிமங்கள் நிறைந்துள்ளதால், கோடையில் இளநீரை பருகுவது உடலில் நீரிழப்பு ஏற்படுவதைத் தவிர்க்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இதய ஆரோக்கியம்
இளநீர் குடிப்பதால் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் குறையும். மேலும் இதில் உள்ள அதிக அளவு பொட்டாசியம் இரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்துகிறது.

மேலும் படிக்க | இயற்கை குளிர்பானம் இளநீரின் பயன்கள் -ஒரு பார்வை!

சிறுநீரக கற்கள்
இளநீரில் மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளது. எனவே இது ஒரு சக்திவாய்ந்த டையூரிடிக் பானம் (Diuretic drink) என்று அறியப்படுகிறது. இளநீரை தொடர்ந்து குடித்துவந்தால், சிறுநீரக கற்கள் படிப்படியாக வெளியேறத் தொடங்கும், இயற்கையான முறையில் சிறுநீரகக் கற்களுக்கு தீர்வு தருவது இளநீர் என்பது குறிப்பிடத்தக்கது.

கர்ப்பிணிகளுக்கு ஆரோக்கியமான பானம்
இயற்கையான இளநீர் பாக்டீரியா இல்லாதது. அதனால்தான், கர்ப்ப காலத்தில் இளநீர் நல்லது என்று கருதப்படுகிறது. இதனுடன், கர்ப்ப காலத்தில் ஏற்படும் உடல் மாற்றங்கள் அமிலத்தன்மை, நெஞ்செரிச்சல் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளுக்கு நிவாரணம் அளிக்கும் அருமருந்தாய் செயல்படுகிறது இளநீர்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை ஏற்றுக்கொள்வதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | ஜவ்வரிசியால் கிடைக்கும் ஏகப்பட்ட நன்மைகள்: கண்டிப்பா அடிக்கடி சாப்பிடுங்க 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News