நீரிழிவு நோயை வெல்லணுமா? இந்த டயட் ஃபார்முலாவை பின்பற்றினால் போதும்... ஜெயிச்சிடலாம்!!

Diabetes Control Tips: சர்க்கரை நோயாளிகளுக்கான டயட் ஃபார்முலாவை இங்கே காணலாம். பல மருத்துவர்கள், சுகாதார நிபுணர்கள் மற்றும் உணவியல் நிபுணர்களிடம் கலந்தாலோசித்து இந்த டயட் உருவாக்கப்பட்டுள்ளது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 14, 2023, 09:52 AM IST
  • நம் நாட்டில் மக்கள் அதிக கார்போஹைட்ரேட்டுகளை உட்கொள்கிறார்கள்.
  • நீரிழிவு நோயைத் தோற்கடிக்க, கார்போஹைட்ரேட் உட்கொள்ளலைக் கட்டுப்படுத்தி புரத உட்கொள்ளலை அதிகரிக்க வேண்டும்.
  • சரிவிகித உணவை உட்கொண்டால் சர்க்கரை நோயை நிச்சயம் வெல்ல முடியும்.
நீரிழிவு நோயை வெல்லணுமா? இந்த டயட் ஃபார்முலாவை பின்பற்றினால் போதும்... ஜெயிச்சிடலாம்!! title=

Diabetes Control Tips: இன்றைய உலகில் நீரிழிவு நோய் ஒரு பெரிய சவாலாக உள்ளது. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, இன்றளவில் 42.2 கோடி பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். இந்தியாவில் சுமார் 8 கோடி பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், வரும் காலத்தில் இந்தியா நீரிழிவு நோயின் உலகத் தலைநகராக மாறும் என நிபுணர்கள் கருதுகின்றனர். நீரிழிவு நோயில், கணையம் குறைவான இன்சுலின் ஹார்மோனை உற்பத்தி செய்கிறது. இது குளுக்கோஸை உறிஞ்சும் இன்சுலின் ஆகும். ஆனால் இன்சுலின் பற்றாக்குறையால் இந்த குளுக்கோஸ் இரத்தத்தில் அதிகரிக்கத் தொடங்குகிறது. அதன் உண்மையான காரணத்தை அறிய முடியாவிட்டாலும், மோசமான வாழ்க்கை முறையே இதற்குக் காரணம் என வெகுவாக நம்பப்படுகின்றது. எனவே, சரியான வாழ்க்கை முறை, எளிய உணவுமுறை மற்றும் உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டால் சர்க்கரை நோயை நிச்சயம் கட்டுக்குள் வைக்கலாம். 

சர்க்கரை நோயாளிகளுக்கான டயட் ஃபார்முலாவை இங்கே காணலாம். பல மருத்துவர்கள், சுகாதார நிபுணர்கள் மற்றும் உணவியல் நிபுணர்களிடம் கலந்தாலோசித்து இந்த டயட் உருவாக்கப்பட்டுள்ளது. இதை பின்பற்றினால் கண்டிப்பாக இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க முடியும். 

1. சமச்சீர் உணவு (Balanced Diet)

சரிவிகித உணவை உட்கொண்டால் சர்க்கரை நோயை (Diabetes) நிச்சயம் வெல்ல முடியும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். இதற்கு தினமும் நார்ச்சத்து நிறைந்த உணவை உணவில் அதிமம் சேர்த்துக்கொள்ள வேண்டும். நார்ச்சத்து அதிகம் சாப்பிட்டால், சர்க்கரை நோயிலிருந்து விரைவில் விடுபடலாம். இதற்கு ஃப்ரெஷ் பழங்கள், பச்சை காய்கறிகள், முழு தானியங்கள், பருப்பு வகைகள், பீன்ஸ், பட்டாணி போன்வற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஜவ்வரிசி, தினை, சோளம் போன்ற தானியங்களின் மாவில் செய்யப்பட்ட ரொட்டியை உட்கொள்ளலாம். இவை அனைத்தும் சர்க்கரையை மிக விரைவாக உறிஞ்சும்.

2. புரத உட்கொள்ளலை அதிகரிக்கவும் (Protein Intake)

நம் நாட்டில் மக்கள் அதிக கார்போஹைட்ரேட்டுகளை உட்கொள்கிறார்கள். ஆனால் நீரிழிவு நோயைத் தோற்கடிக்க, கார்போஹைட்ரேட் உட்கொள்ளலைக் கட்டுப்படுத்தி புரத உட்கொள்ளலை அதிகரிக்க வேண்டும். இதற்கு கோழி, மீன் மற்றும் டோஃபு போன்ற மெலிந்த இறைச்சியின் உட்கொள்ளலை அதிகரிக்க வேண்டும். பால் பொருட்களையும் குறைந்த அளவில் உட்கொள்ளுங்கள்.

மேலும் படிக்க | கீல்வாதம், யூரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்த சுலபமான வழி! ஃபாலோ பண்ணா ஆரோக்கியம் உறுதி

3. ஆரோக்கியமான கொழுப்பு (Healthy Fat)

வெண்ணெய், சீஸ், எண்ணெய் போன்றவை ஆரோக்கியமற்ற கொழுப்புகள் ஆகும். இவை அனைத்தும் நீரிழிவு நோயாளிகளுக்கு தீங்கு விளைவிக்கும். நீரிழிவு நோயாளிகள் ஆரோக்கியமான கொழுப்புகளை உட்கொள்ள வேண்டும். இதற்கு அவகேடோ, பாதாம், வால்நட், ஆலிவ் எண்ணெய், கடுகு எண்ணெய் போன்றவை சிறந்த தேர்வுகளாக இருக்கும்.

4. இந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த, இனிப்புப் பொருட்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், பிஸ்கட்கள், எண்ணெயில் பொறித்த உணவுகள், சர்க்கரை பானங்கள், குளிர் பானங்கள், இனிப்பு பானங்கள், துரித உணவுகள், ஜங்க் ஃபுட் போன்றவற்றை உட்கொள்ள வேண்டாம். இதனுடன் மது, சிகரெட் போன்றவற்றிலிருந்து விலகி இருப்பது நல்லது.

5. உடற்பயிற்சி (Exercise)

நீரிழிவு நோயாளிகளுக்கு உணவுடன், உடற்பயிற்சியும் மிகவும் முக்கியமானது. இதற்கு ஜிம்மிற்குத்தான் செல்ல வேண்டும் என்ற அவசியமில்லை, வீட்டிலேயே இதை செய்யலாம். ஆனால் விறுவிறுப்பான உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும். தினசரி நடை, ஓட்டம், நீச்சல், சைக்கிள் ஓட்டுதல் போன்றவை நன்மை பயக்கும். தினமும் 45 நிமிடங்கள் முதல் 1 மணி நேரம் ஓட்டம் மற்றும் நடைபயிற்சி செய்யுங்கள். நீங்கள் ஜிம்மிற்கு செல்ல விரும்பினால், கார்டியோவில் அதிக கவனம் செலுத்துங்கள். இதனுடன் யோகா, தியானம் போன்றவற்றைச் செய்து மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்தலாம். இவை மட்டுமல்லாமல், போதுமான தூக்கமும் மிக அவசியமாகும். 

இந்த டயட் ஃபார்முலாக்கள் மற்றும் உடற்பயிற்சிகளை நீங்கள் கடைப்பிடித்தால், நீங்கள் நிச்சயமாக நீரிழிவு நோயை வெல்ல முடியும்.

மேலும் படிக்க | உடல் பருமன் பாடாய் படுத்துதா? இந்த டிப்ஸ் மூலம் சில நாட்களில் எடையை குறைக்கலாம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News