மூளைக்கு பவர் கொடுக்கும் இளநீர்..! குழந்தைகள் குடித்தால் புத்திக்கூர்மை அதிகரிக்கும்

Coconut water | மூளைக்கு பவர் கொடுக்கும் இளநீர் மகத்துவம் குறித்து பெற்றோர்கள் அறிந்து கொள்ளுங்கள். குழந்தைகள் தினமும் குடித்தால் புத்திக்கூர்மை அதிகரிக்கும். 

Written by - S.Karthikeyan | Last Updated : Nov 15, 2024, 02:22 PM IST
  • தேங்காய் தண்ணீரில் இருக்கும் எலக்ட்ரோசைட்டுகள்
  • குழந்தைகளுக்கு புத்திக்கூர்மைக்கு அத்தியாவசியம்
  • யாரெல்லாம் குடிக்கக்கூடாது என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்
மூளைக்கு பவர் கொடுக்கும் இளநீர்..! குழந்தைகள் குடித்தால் புத்திக்கூர்மை அதிகரிக்கும் title=

Coconut water Benefits Tamil | குழந்தைகளை அறிவாளியாக வளர்க்க வேண்டும் என பெற்றோராகிய நீங்கள் விரும்பினால், நீங்கள் முதலில் கவனம் செலுத்த வேண்டியது அவர்களின் கல்வியில் அல்ல, உணவில் தான். ஊட்டச்சத்து மிக்க உணவு தான் ஒரு குழந்தையின் புத்திக்கூர்மையை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. குழந்தைகள் என்ன சாப்பிடுகிறார்கள்? என்ன சாப்பிட வேண்டும்? என்பதில் பெற்றோராகிய நீங்கள் அவசியம் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். அப்பாவி குழந்தைகள்கூட ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டால் ஐஸ்டீனாக மாறுவார்கள் என ஊட்டச்சத்து நிபுணர்கள் சொல்கிறார்கள். அதாவது, எப்போதும் தெளிவுடன், என்ன செய்ய வேண்டும் என்பதில் அந்த குழந்தைகள் கவனம் செலுத்துவார்கள். 

குழந்தைகள் குடிக்க வேண்டிய ஜூஸ்

அந்தவகையில் குழந்தைகளின் மூளை சக்தியை அதிகரிக்கும் ஒரு ஆரோக்கியமான உணவை பற்றி இங்கே தெரிந்து கொள்வோம். உங்கள் குழந்தைகளின் மூளை சக்தியை அதிகரிக்க விரும்பினால், முதலில் அவர்களுக்கு எந்தவிதமான நொறுக்குத் தீனிகளையும் கொடுப்பதைத் தவிர்க்கவும். அதேநேரத்தில், தேங்காய் தண்ணீர் உடன் சிறிதளவு உப்பு மற்றும் தேன் கலந்து கொடுக்கலாம். இந்த பானம் குழந்தைகளின் மூளைக்கு அற்புதமானது. 

மேலும் படிக்க | இரத்த சர்க்கரை நோய் குறித்த சில கட்டுக்கதைகள்.... அவசியம் தெரிஞ்சுக்கோங்க

தேங்காய் தண்ணீரில் இருக்கும் ஊட்டச்சத்துகள்

தேங்காய் நீரில் எலக்ட்ரோலைட்டுகள் நல்ல அளவில் காணப்படுகின்றன, இது உடலுக்கு சிறந்த நீரேற்றத்தை வழங்குகிறது, இது அறிவாற்றல் செயல்பாடுகளுக்கு அவசியம். மேலும், இளநீரில் நல்ல அளவு பொட்டாசியம் உள்ளது, இது மூளைக்கு தேவையான கனிமமாகும். இது நினைவாற்றலை அதிகரிக்க உதவுகிறது. இவை அனைத்தையும் தவிர, தேங்காய் நீர் மற்றும் தேனில் இயற்கையான சர்க்கரை உள்ளது, இது படிப்படியாக உடலுக்கு தேவையான ஆற்றலை வெளியிடுகிறது. இதன் காரணமாகவும் குழந்தை எளிதில் சோர்வடைய மாட்டார்கள். அவர்களால் படிப்பில் அதிக கவனம் செலுத்த முடியும். 

பெற்றோர் கவனத்தில் கொள்ள வேண்டியது

இப்போதெல்லாம் வயதானவர்களுக்கு வந்த நாட்பட்ட வாழ்க்கை முறை நோய்கள் கூட குழந்தைகளுக்கும் வரத் தொடங்கிவிட்டது. அதற்கு காரணம் சந்தைகளில் விற்பனையாகும் சிப்ஸ் உள்ளிட்ட நொறுக்குத் தீனிகள் தான். அவை குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. இதனை அறியாமல் பெற்றோர் பெருமைக்கு வாங்கிக் கொடுத்து பின்விளைவுகள் தெரிய ஆரம்பிக்கும்போது வருத்தபடுகிறார்கள். அதனால் எப்போதும் ஆரோக்கியமான உணவுகளை குழந்தைகள் சாப்பிடுவதை உறுதி செய்வது உங்களின் கடமை.

தேங்காய் தண்ணீர் யாரெல்லாம் குடிக்கக்கூடாது?

தேங்காய் தண்ணீர் குடிப்பதிலும் கவனம் தேவை. இது ஆரோக்கியமான பானம் என்றாலும் ஒவ்வாமை பிரச்சனை இருப்பவர்கள் தேங்காய் தண்ணீர் குடிக்கக்கூடாது. அரிப்பு, படை இருப்பவர்கள் குடிக்க வேண்டாம். ஏதேனும் உடல் நோய் பாதிப்புகளுக்கு மருந்து எடுத்துக் கொண்டிருதால் தேங்காய் தண்ணீர் குடிக்க வேண்டாம். இதில் அதிகளவு பொட்டாசியம் இருப்பதால், அவை மருத்துகளுடன் சேர்ந்து பக்கவிளைவுகளை உண்டாக்கும். இரப்பை குடல் பிரச்சனைகளும் இதனால் உருவாகும். வாயு, வீக்கம் உள்ளவர்கள் இதில் கவனம், வெறும் வயிற்றில் தேங்காய் தண்ணீர் குடிப்பதை தவிர்க்கவும், கூடுதல் சந்தேகங்களுக்கு மருத்துவரின் ஆலோசனை பெற்றுக் கொள்ளுங்கள்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | நீரிழிவு நோயாளியா நீங்கள்? மறந்தும் கூட இந்த பழங்களை சாப்பிட வேண்டாம்... ஜாக்கிரதை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News