இன்று சனி வக்ர நிவர்த்தி: இந்த ராசிகளுக்கு ஒளிமயமான எதிர்காலம், சனி அருளால் ராஜயோகம்.... முழு ராசிபலன் இதோ

Sani Peyarchi Palangal: இன்று சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் அதிகப்படியான நன்மைகளை அடையவுள்ள ராசிகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

Sani Vakra Nivarthi Palangal: அனைத்து கிரகங்களிலும் மிக மெதுவாக நகரும் கிரகமான சனி பகவான் மிக முக்கியமான கிரகமாக உள்ளார். சனி பகவான் நவம்பர் 15 ஆம் தேதி வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். 139 நாட்கள் வக்ர நிலையில் இருந்த அவர் இன்று வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் மெலோங்கும். சில ராசிகள் சோதனைகளை சந்திக்க வேண்டி வரலாம். மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகளிலும் சனி வக்ர நிவர்த்தியால் ஏற்படவுள்ள தாக்கங்களை பற்றி இங்கே காணலாம்.

1 /13

மேஷம்: சனி வக்ர நிவர்த்தி மேஷ ராசிக்காரர்களுக்கு லாபகரமானதாக இருக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். அதிக ஆர்வத்துடன் இருப்பதை தவிர்க்கவும். வியாபாரம் விரிவடைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. நல்ல வேலை கிடைக்கும். பண வரவு அதிகமாகும். படிப்பில் நாட்டம் அதிகரிக்கும்.  

2 /13

ரிஷபம்: சனி வக்ர நிவர்த்தியின் தாக்கத்தால் ரிஷப ராசிக்காரர்களுக்கு மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆனால் உரையாடலில் அமைதியாக இருங்கள். வியாபாரத்தில் உயர்வு இருக்கும். அதிக உழைப்பு இருக்கும். லாப வாய்ப்புகள் அமையும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.  

3 /13

மிதுனம்: சனி வக்ர நிவர்த்தியால் மிதுன ராசிக்காரர்கள் பல துறைகளில் நன்மையடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று முதல் இவர்களது அதிர்ஷ்டம் பிரகாசிக்கக்கூடும். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்குப் பொற்காலம் வரப்போகிறது. நல்ல லாபம் கிடைக்கும்.

4 /13

கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு சனி வக்ர நிவர்த்தி சுப பலன்களை அள்ளிக்கொடுக்கும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பெற்றோரின் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. தொழிலில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பணியிடத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது.

5 /13

சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு சனி வக்ர நிவர்த்தி நல்ல பலன்களை அளிக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். நினைத்த காரியம் வெற்றிகரமாக நடந்து முடியும்.

6 /13

கன்னி: கன்னி ராசிக்கு சனி வக்ர நிவர்த்தியின் தாக்கத்தால் அதிக உழைப்பு இருக்கும். பேச்சில் இனிமை இருக்கும். படிப்பில் ஆர்வம் உண்டாகும். கல்வி மற்றும் ஆராய்ச்சிப் பணிகளில் வெற்றி பெறுவீர்கள். பழைய நண்பரை சந்திக்கலாம். வருமானம் அதிகரிக்கும். வியாபாரத்தில் அதிக லாபம் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும்.

7 /13

துலாம்: சனி பெயர்ச்சியின் தாக்கத்தால் துலா ராசிக்காரர்களுக்கு மனம் மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்வில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். உங்கள் உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைத்திருங்கள். குடும்ப ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். இந்த காலத்தில் சுப விளைவுகள் ஏற்படும். 

8 /13

விருச்சிகம்: சனி வக்ர நிவர்த்தியின் தாக்கத்தால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு வியாபாரத்தில் மாற்றத்திற்கான வாய்ப்புகள் உருவாகலாம். மனம் மகிழ்ச்சியாக இருக்கும். குடும்பத்தில் ஆன்மீக காரியங்களும் சுப காரியங்களும் நடைபெறலாம். வியாபாரத்தில் உயர்வு இருக்கும். மேலும் கடின உழைப்பும் இருக்கும்.  

9 /13

தனுசு: தனுசு ராசிக்காரர்களுக்கு சனி வக்ர நிவர்த்தி அனுகூலமான பலன்களை அள்ளித் தரும். உங்கள் உடல்நலம் குறித்து விழிப்புடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் இணக்கமாக இருக்கவும். உத்தியோகத்தில் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் கூடும். உங்கள் பணி அனைவராலும் பாராட்டப்படும்.

10 /13

மகரம்: சனி பெயர்ச்சி காலத்தில் மகர ராசிக்காரர்களுக்கு நம்பிக்கை அதிகரிக்கும். குடும்பத்தினருடன் சில மனஸ்தாபங்கள் ஏற்படக்கூடும். வியாபாரம் லாபகரமாக இருக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

11 /13

கும்பம்: கும்ப ராசிக்காரர்களுக்கு சனி வக்ர நிவர்த்தி சுபமானதாக இருக்கும். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். கல்விப் பணிகளில் வெற்றி கிடைக்கும். கலை அல்லது இசை மீதான ஆர்வம் அதிகரிக்கும். வருமானம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

12 /13

மீனம்: சனி வக்ர நிவர்த்தியின் தாக்கத்தால் மீனாசிக்காரர்களின் நம்பிக்கை அதிகரிக்கும். ஆனால் உங்கள் மனம் கலங்கவும் வாய்ப்புள்ளது. கல்விப் பணிகளில் வெற்றி பெறுவீர்கள். எழுதுதல் போன்ற அறிவுசார் வேலைகளில் மரியாதை பெறுவீர்கள். செலவுகள் அதிகரிக்கும். உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்வது நல்லது.  

13 /13

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.