பிரவுன் சுகர் உண்மையில் நல்லது தானா... சர்க்கரைக்கான ஆரோக்கிய மாற்று எது?

சர்க்கரைக்கு ஆரோக்கியமான மாற்றாக கருதப்படும் இனிப்புகள்: பிரவுன் சுகர், சக்கரைக்கு ஆரோக்கியமான மாற்றாக கருதப்படுகிறது. எனினும், பிரவுன் சுகர் என்னும் பழுப்பு சர்க்கரையில் பெரிய அளவில் ஊட்டச்சத்து எதுவும் இல்லை என்கின்றனர் நிபுணர்கள்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 26, 2024, 12:33 PM IST
  • சர்க்கரைக்கு மாற்றான சில ஆரோக்கியமான சர்க்கரைகளை பயன்படுத்துவது ஆரோக்கியத்திற்கு சிறந்தது.
  • சீனித்துளசி இலை, சர்க்கரையைவிட 30 மடங்கு இனிப்புச்சுவை அதிகம் கொண்டது.
  • கலோரிகள் குறைவாக இருப்பதால் உடல் பருமனை குறைக்க நினைப்பவர்களுக்கு வரப்பிரசாதம்.
பிரவுன் சுகர் உண்மையில் நல்லது தானா... சர்க்கரைக்கான ஆரோக்கிய மாற்று எது? title=

பொதுவாக பிரவுன் சுகர், சக்கரைக்கு ஆரோக்கியமான மாற்றாக கருதப்படுகிறது. ஆனால் மற்ற வகை சர்க்கரைகளைப் போலவே, பிரவுன் சுகரும் அதிக அளவு சாப்பிட்டால் பாதிப்பை கொடுக்கக் கூடியது தான். சுமார் 100 கிராம் பிரவுன் சுகரில், 127 கலோரிகள் இருப்பதாக கூறப்படுகிறது. ஒரு டீஸ்பூன் பிரவுன் சுகரில் 15 கல்லூரிகள் உள்ளதாக கூறும் ஊட்டச்சத்து நிபுணர்கள், அதில் சிறிதளவு கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து மற்றும் மெக்னீசியம் இருப்பதாக குறிப்பிடுகின்றனர். 

ரத்த சக்கரை அளவை அதிகரிக்கும் பிரவுன் சுகர்

எனினும், பிரவுன் சுகர் என்னும் பழுப்பு சர்க்கரையில் பெரிய அளவில் ஊட்டச்சத்து எதுவும் இல்லை. சுத்திகரிக்கப்பட்ட வெள்ளை சர்க்கரையில் 16.3 கல்லூரிகள் இருப்பதாக கூறப்படுகிறது. கிட்டத்தட்ட அதே அளவு கலோரிகள் பழுப்பு சர்க்கரையில் இருப்பதை காணலாம். மேலும் கார்போஹைட்ரேட்டுகளும் அதிகம் உள்ளதால், இதனை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது சர்க்கரை அளவு அதிகரிக்கும். மேலும், அளவிற்கு அதிகமான பிரவுன் சுகர் காரணமாக, இதய நோய்கள், டைப் டு டையபடீஸ், மற்றும் சில வகை புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் எச்சரிக்கப்படுகிறது.

சர்க்கரைக்கு ஆரோக்கியமான மாற்றாக கருதப்படும் இனிப்புகள்

சீனி துளசி

ஸ்டீவ்யா என்று அழைக்கப்படும் சீனி துளசி இலைகளில், விட 30 மடங்கு அதிக இனிப்பு சுவை இருந்தாலும், குறைந்த அளவு சர்க்கரை சத்தும் மாவு சத்துக்களும் உள்ளதாக கூறப்படுகிறது. எனவே சீனி துளசி, சரக்கரைக்கு சிறந்த ஆரோக்கியமான மாற்று என நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும் சீனி துளசியில் கார்போஹைட்ரேட் அளவும் பூஜ்ஜியம் என்ற அளவில் இருக்கிறது. கூடுதலாக கலோரிகளும் மிகக் குறைவு. எனவே சர்க்கரை அளவு உடல் எடையும் கட்டுக்குள் இருக்கும்.

பேரீச்சம் பழ சர்க்கரை

பேரீச்சம்பழம் நார்ச்சத்து நிறைந்தது என்பதோடு கிளேசிமிக் குறியீடு மிகவும் குறைவாகவே உள்ளது. இயற்கையாகவே இனிப்பு சுவையை அளிக்கும் இதில் பிரக்டோஸ் உள்ளது. மேலும் இதில் நார்ச்சத்து, பொட்டாசியம் மெக்னீசியம், மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்துள்ளன. நீரிழிவு நோயாளிகளுக்கு மட்டுமல்ல, உடல் பருமனை குறைப்ப நினைப்பவர்களுக்கும், சர்க்கரைக்கான சிறந்த ஆரோக்கியமான மாற்றாக இருக்கும்.

மேலும் படிக்க | ஓமவல்லிக்குள் இருக்கும் நல்ல குணங்கள் என்ன? பல நோய்களுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி!

மங்க் பழச் சர்க்கரை

மங்க் பழ செடியில் இருந்து தயாரிக்கப்படும் இயற்கை இனிப்பான மங்க் பல சர்க்கரை, வெள்ளை சர்க்கரை விட பல மடங்கு இனிமையானது. ஆனால் இது சர்க்கரை அளவை அதிகரிக்காது. சீன மருத்துவத்தில் பல நூற்றாண்டுகளாக, மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் இந்த மங்க் பழம், நீரழிவு நோயாளிகளுக்கான பாதுகாப்பான உணவாக இருக்கும். உடல் பருமனை குறைக்க நினைப்பவர்களுக்கும் இது வரமாக இருக்கும். குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்களும் இதை உட்கொள்ளலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

தேங்காய் சர்க்கரை

தென்னை மர பூ மொட்டுகளின் சாற்றில் இருந்து தயாரிக்கப்படும் இயற்கை இனிப்பு தேங்காய் சர்க்கரை. இதனை தேங்காய் பனை சர்க்கரை என்றும், தேங்காய் பூ மொட்டு சர்க்கரை என்றும் கூறுவார்கள். சர்க்கரை போலவே தயாரிக்கப்படும் இந்த தேங்காய் சர்க்கரை லேசான கேரமல் சுவையுடன் பழுப்பு நிறத்தில் இருக்கும். சர்க்கரையுடன் ஒப்பிடும்போது குறைந்த அளவு கிளைசிமி குறியீடு கொண்டுள்ளது. எனவே நீரழிவு நோயாளிகளுக்கு ஏற்றது. மேலும் இதில் கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம், துத்தநாகம் போன்ற தாதுக்கள் உள்ளன.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | ஒல்லி பெல்லி வேணுமா? எடை குறையணுமா? வெந்தயத்தை இப்படி சாப்பிடுங்க போதும்!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News