Weight Loss While Sleeping: உடல் எடையை குறைப்பது எப்படி என்பதே இன்று பலரின் கவலையாக இருக்கிறது. தூங்கும்போதே உடல் எடையை குறைக்க முடியும் என்றால் மகிழ்ச்சியாக இருக்கிறதா?
உடல் எடையை குறைக்க, மிகவும் சிரமப்பட்டு, கஷ்டப்பட்டு, துன்பப்பட்டு என பல படுதல்களை செய்தாலும் அது பலனளிப்பதில்லை. இவ்வளவு கஷ்டப்பட்டாலும், உடல் பருமன், கடலில் இருந்து ஒரு துளி நீரை குறைந்தது போலவே இருக்கிறது என புலம்பும் நபரா நீங்கள்? இதோ உங்களுக்கான உடல் எடை குறைக்கும் மிகச் சுலபமான வழி...
சில உண்மைகளை தெரிந்துக் கொண்டு, அவற்றை பின்பற்றினால், இரவு படுக்கும்போது எடை பார்த்து விட்டு தூங்கி எழுந்தால், மீண்டும் காலையில் எழுந்த பிறகு மீண்டும் எடை பார்த்தால், எடை குறைந்திருப்பதை தெரிந்துக் கொள்ளலாம்.
அதற்கு காரணம் என்ன தெரியுமா? சுவாசம் மற்றும் வியர்வை காரணமாக எடை குறைகிறது. தூக்கமில்லாமல் தவிப்பதும் திடீரென எடை அதிகரிக்க ஒரு முக்கியமான காரணமாகும்.
Also Read | உடல் பயிற்சி இல்லாமலேயே எளிதாக உடல் எடையை குறைக்கலாம்..!!
எடை இழப்பு என்பது மிகவும் கடினமானது என்று தெரியும். ஆனால், அடி மேல் அடி அடித்தால் அம்மியும் இம்மி அளவாவது நகரும் என்பதைப் போல, எடை குறைக்கும் முயற்சி சிறிது சிறிதாக பலனளிக்கும்.
சத்தான உணவு மற்றும் உடல் பயிற்சியுடன் எடை குறைப்புப் பயணம் தொடரவேண்டும். சொல்வது சுலபம், ஆனால் அதை கடைபிடிப்பது மிகவும் கடினம். உணவு கட்டுப்பாட்டுடன் ஆரோக்கியமான உணவை உண்டு, உடற்பயிற்சி செய்வது உடல் பருமனை குறைப்பதற்கு அர்ப்பணிப்பும், ஊக்கமும் தேவை.
ஒரு ஆய்வின் படி, தூக்கமின்மை வளர்சிதை மாற்ற விகிதம் மற்றும் ஆற்றல் செலவு 20% குறைவதற்கு வழிவகுக்கும் என்று கூறுகிறது. ஒருவர், எட்டு மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கினால், மன அழுத்தம் மற்றும் ஹார்மோன்களில் மாறுதல் ஏற்படும்.
மன அழுத்தமும், ஹார்மோன்களில் ஏற்படும் வழக்கத்துக்கு மாறான மாறுதலும், குடலில் உள்ள நுண்ணுயிரிகளின் மீது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். அது மட்டுமல்ல, தூக்கமின்மை என்பது, பசியை ஏற்படுத்தும் ஹார்மோன்களை தொந்தரவு செய்யும்.
READ ALSO | எடையை குறைக்க 100% பலனளிக்கும் சூப்பர் டிப்ஸ்..!!
தூங்கும் போது எடையை குறைப்பது மிகவும் சுலபமானது தான். மாலையில் உடற்பயிற்சி செய்வது மிகவும் உதவியாக இருக்கும். மாலை நேரங்களில் உடற்பயிற்சி செய்வது, வளர்சிதை மாற்ற விகிதம் வேகமாகும், மாலையில் உடற்பயிற்சி செய்வதன் மூலம், உங்கள் வளர்சிதை மாற்ற விகிதத்தை 16 மணிநேரம் வரை அதிகரிக்கலாம் என்பதை ஆய்வு உறுதிப்படுத்துகிறது.
வளர்ச்சிதை மாற்ற விகிதமானது, தூங்கும்போது கூடுதல் கிலோவைக் குறைக்க உதவுகிறது. ‘The effect of morning vs evening exercise training on glycaemic control and serum metabolites in overweight/obese men: a randomised trial' என்ற தலைப்பில் வெளியான ஆய்வறிக்கை கூறுவதும் பயனுள்ளதாக இருக்கலாம். இந்த ஆய்வின்படி, மாலையில் உடற்பயிற்சி செய்தவர்களுக்கு இரவுநேரத்தில் குளுக்கோஸ் அளவு குறைவாக உள்ளது. இதனால், காலையில் உடற்பயிற்சி செய்பவர்களை விட மாலையில் உடற்பயிற்சி செய்பவர்களின் உடல் எடை விரைவில் குறைகிறது.
இரவில் படுப்பதற்கு முன்னதாக, கேசீன் புரோட்டீன் ஷேக் (casein protein shake) குடிப்பதால் இரவில் எடை குறையும். இந்த புரோட்டின் ஷேக், மெதுவாக வெளியிடும் புரதமாகும். இது செரிமாணமாக எட்டு மணி நேரத்திற்கும் அதிகமாக எடுத்துக் கொள்ளும். எனவே, இரவு முழுவதும் வளர்சிதை மாற்ற நார்ச்சத்தை எரிக்க உதவும் அமினோ அமிலங்களை கேசீன் மெதுவாக வெளியிடுகிறது.
ALSO READ | குழந்தையின் மூளை ஜெட் வேகத்தில் இயங்க வேண்டுமா; இந்த ‘6’ உணவுகளை கொடுக்கவும்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR