எச்சரிக்கை! இந்த நோய்களிலிருந்து விலகி இருக்க 6 வழிமுறைகளைப் பின்பற்றவும்

Rainy Season Health Tips: வீட்டில் வைக்கப்படும் உணவு பல காரணங்களால் மாசுபடுகிறது. உணவை சரியான வெப்பநிலையில் வைக்காவிட்டால், பாக்டீரியாக்கள் அதில் வளரும். இதேபோல், பழங்கள் மற்றும் காய்கறிகளை சரியாக கழுவவில்லை என்றால், பல பாக்டீரியாக்கள் நம் வயிற்றில் செல்ல வாய்ப்புள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 14, 2021, 02:43 PM IST
  • நமது அலட்சியம் காரணமாக வீடுகளில் உள்ள உணவு அடிக்கடி மாசுபடுகிறது.
  • உணவை சரியான வெப்பநிலையில் வைக்காவிட்டால், பாக்டீரியாக்கள் அதில் வளரும்.
  • சமையலுக்கு நல்ல தண்ணீரைப் (Clean Water) பயன்படுத்துங்கள்.
எச்சரிக்கை! இந்த நோய்களிலிருந்து விலகி இருக்க 6 வழிமுறைகளைப் பின்பற்றவும் title=

Rainy Season Health Tips: மழைக்காலத்தில் நாம மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனென்றால் மழைக்காலத்தில் நமது உடலில் நோய்களின் தாக்கம்  ஏற்படகூடிய சாத்தியக்கூறுகள் அதிகமாக இருக்கிறது. இந்த மழை பருவத்தில், ஒவ்வொரு இல்லத்தரசியும் தன் குடும்ப உறுப்பினர்களுக்கு சிறந்த உணவைத் தர முயற்சிக்கிறார்கள், ஆனால் நமது அலட்சியம் காரணமாக வீடுகளில் உள்ள உணவு அடிக்கடி மாசுபடுகிறது. இது உடல் ஆரோக்கியத்திற்கு பல பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது. உணவு மாசுபடமால் இருக்க மிகுந்த எச்சரிக்கை தேவை. சில விஷயங்களை கவனமாக பின்பற்றுவதன் மூலம், உணவை பாதுகாப்பாக வைப்பதோடு, அதனால் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து அனைத்து குடும்ப உறுப்பினர்களையும் பாதுகாப்பாக வைக்கலாம்.

அசுத்தமான உணவு குறித்து எச்சரிக்கை:
வீட்டில் வைக்கப்படும் உணவு பல காரணங்களால் மாசுபடுகிறது. உணவை சரியான வெப்பநிலையில் வைக்காவிட்டால், பாக்டீரியாக்கள் அதில் வளரும். இதேபோல், பழங்கள் மற்றும் காய்கறிகளை சரியாக கழுவவில்லை என்றால், பல பாக்டீரியாக்கள் நம் வயிற்றில் செல்ல வாய்ப்புள்ளது. இதேபோல், காய்கறிகள், அரிசி மற்றும் சப்பாத்திகளை சரியாக வேகவைத்து சமைப்பது முக்கியம். தானியங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்றவற்றை பயன்படுத்துவதற்கு முன்பு அவற்றை சரியாக சுத்தம் செய்வது மிகவும் முக்கியம். கவனக்குறைவு காரணமாக, குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் மாசுபட்ட உணவுக்கு பலியாகிறார்கள்.

சுத்தம் மிக முக்கியம்:
உங்கள் ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் தூய்மை பெரும் பங்கு வகிக்கிறது. உணவு சமைக்கும் போது, ​​பரிமாறும் போது அல்லது சாப்பிடும் போது கைகளை நன்கு கழுவ வேண்டும். வெவ்வேறு இடங்களில் கைகளைப் பயன்படுத்துவதால், பாக்டீரியாக்கள் கைகளில் ஒட்டிக்கொள்கின்றன. அதனால் தான் கைகளை அடிக்கடி கழுவ வேண்டும். இதேபோல், உங்கள் சமையலறை மற்றும் பாத்திரங்களும் சுத்தமாக இருக்க வேண்டும். இதில் எந்த கவனக்குறைவும் இல்லாமல் அவற்றை நன்கு கழுவுவது மிகவும் முக்கியம்.

ALSO READ | சாபிட்டப் பிறகு வாந்தி வருவது போல் இருக்கிறதா? இந்த நோயின் அறிகுறியாக இருக்கலாம் -எச்சரிக்கை

மூல மற்றும் சமைத்த உணவு:
மூல உணவு (Raw Food) மற்றும் சமைத்த உணவை (Cooked Food) ஒன்றாக வைப்பதை தவிர்க்கவும். குறிப்பாக இறைச்சி, கடல் சார்ந்த உணவுவகை, சிக்கன் உட்பட மற்ற உணவுகள் சமைத்த உணவுகளிலிருந்து விலகி வைக்க வேண்டும். அதிகமாக பாக்டீரியாக்கள் மூல உணவை மாசுபடுத்தும். எனவே, மூல மற்றும் சமைத்த உணவுகளுக்கு இடையில் குறிப்பிட்ட தூரத்தை பராமரிப்பது நல்லது.

வெப்பநிலை மற்றும் உணவு:
வெயில் காலத்தில் உங்கள் உணவை அதிகமாக கெட்டு விடுகிறது. சாதாரண அறையின் வெப்பநிலையில், உணவுகளில் பாக்டீரியா விரைவாக வளரும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்த பாக்டீரியாவைத் தடுக்க, வெப்பநிலை (Temperature) 5°C க்கும் குறைவாகவோ அல்லது 60°-C க்கும் அதிகமாகவோ இருக்க வேண்டும். நீண்ட நாட்களாக வைக்கப்பட்ட உணவை சாப்பிடுவதை தவிர்க்கவும். ஏனென்றால் அது மாசுபடுவதற்கான அதிக ஆபத்து உள்ளது.

சமையலுக்கு சுத்தமான தண்ணீர் பயன்படுத்துங்கள்:
பெரும்பாலும் மக்கள் ஒரு பழக்கத்தைக் கொண்டுள்ளனர், அவர்கள் குடிநீரில் மிகவும் கவனமாக இருப்பார்கள் மற்றும் எல்லா வகையான நீரையும் குடிப்பதைத் தவிர்க்கிறார்கள். ஆனால் உணவு சமைக்கப் பயன்படுத்தப்படும் தண்ணீரில் அவர்கள் கவனக்குறைவாக இருக்கிறார்கள். இந்த கவனக்குறைவு உணவை மாசுபடுத்துகிறது. சமையலுக்கு நல்ல தண்ணீரைப் (Clean Water) பயன்படுத்துங்கள்.

நன்றாக வேகவைத்து சமைக்கவும்:
உணவு மாசுபடுவதைத் தடுப்பதில் நன்றாக வேகவைத்து சமைப்பது பெரும் பங்கு வகிக்கிறது. இதன்மூலம் அனைத்து வகையான தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களையும் (Bacteria) அழிக்கிறது. ஒரு ஆய்வின்படி, 70°C இல் சமைக்கப்பட்ட உணவு பயன்படுத்துவது பாதுகாப்பானது.

ALSO READ | 6 வயதில் செக்ஸ், வாடகை மனைவி, மூத்த பெண்களுடன் உறவு -சில வித்தியாசமான நடைமுறைகள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News