கலோரிகளை எரித்து... உடல் பருமனை குறைக்கும் ‘சூப்பர்’ ஆயுர்வேத பொடி!

Ayurvedic Home Made Powder For Weight Loss: உடல் எடையை குறைக்க எளிதான வழி ஆரோக்கியமான உணவு மற்றும் தினசரி உடற்பயிற்சி ஆகும். அதே நேரத்தில், எடையைக் குறைக்க ஆயுர்வேத வைத்தியங்களும் கை கொடுக்கும். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 17, 2024, 06:44 PM IST
கலோரிகளை எரித்து... உடல் பருமனை குறைக்கும் ‘சூப்பர்’ ஆயுர்வேத பொடி! title=

இன்றைய மோசமான வாழ்க்கை முறை காரணமாக, உடல் பருமன் மிகப்பெரிய பிரச்சனையாக மாறிவிட்டது. இதற்கு மிக முக்கிய காரணம் தவறான உணவுப் பழக்கம் மற்றும் உடல் இயக்கம் இல்லாத உட்கார்ந்தே வேலை செய்யும் வாழ்க்கை முறை. உடல் பருமன் உங்கள் அழகைக் கெடுப்பதோடு,  நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், மூட்டு வலி, இதய நோய்கள் மற்றும் புற்றுநோய் உள்ளிட்ட தீவிரமான, உயிருக்கு ஆபத்தான நோய்களின் அபாயத்தையும் அதிகரிக்கிறது.

உடல் எடையை குறைக்க பல்வேறு டயட் உணவு முறையை பின்பற்றுவதோடு, உடற்பயிற்சியையும் கடைபிடிக்கின்றனர் . உடல் எடையை குறைக்க எளிதான வழி ஆரோக்கியமான உணவு மற்றும் தினசரி உடற்பயிற்சி ஆகும். அதே நேரத்தில், எடையைக் குறைக்க (Weight Loss Tips) ஆயுர்வேத வைத்தியங்களும் கை கொடுக்கும். அவை மிகவும் பயனுள்ளதாகவும் கருதப்படுகின்றன.

உடல் பருமனை குறைக்கும் ஆயுர்வேத பொடி

ஆயுர்வேதத்தில் உடல் எடைய குறைக்க பல மூலிகைகள் உள்ளன. சீரகம், பெருஞ்சீரகம், தனியா, இலவங்கபட்டை மற்றும் வெந்தயம் போன்ற மசாலா மற்றும் மூலிகைகள் தொப்பையை கரைக்கும் ஆற்றல் கொண்டவை. இவற்றின் கலவையில் இருந்து தயாரிக்கப்படும் ஆயுர்வேத தூள் குடல் செயல்பாட்டை மேம்படுத்தி எடையை குறைக்கிறது. கலோரிகளையும் எரிக்கிறது உடல் எடையை குறைக்க ஆயுர்வேத பொடி செய்வது எப்படி என்று பார்ப்போம்.

எடை குறைக்கும் பொடியை தயாரிக்க, உங்களுக்கு 2 டீஸ்பூன் சீரகம், 1 டீஸ்பூன் வெந்தயம், 2 டீஸ்பூன் பெருஞ்சீரகம், 2 டீஸ்பூன் தனியா மற்றும் 2 இன்ச் நீள இலவங்கப்பட்டை தேவைப்படும். இந்த மசாலாப் பொருட்களை சரியான விகிதத்தில் எடுத்து லேசாக வறுக்கவும். மசாலா வாசனை வர ஆரம்பித்ததும், கேஸை அணைத்து விடவும். மசாலா ஆறியதும் மிக்ஸி ஜாரில் போட்டு பொடி தயார் செய்யவும். இபோது உங்கள் எடை இழப்பு தூள் (Weight Loss Powder) தயாராக உள்ளது. அதை காற்றுபுகாத ஒரு கண்ணாடி பாட்டிலில் சேமிக்கவும்.

எடை இழப்புபிற்கான ஆயுர்வேத பொடியை உட்கொள்ளும் முறை 
உடல் பருமன் குறைய காலையில் வீட்டில் தயாரிக்கப்பட்ட எடை இழப்பு பொடியை வெதுவெதுப்பான நீரில் உட்கொள்ளவும். இதற்கு, 1 கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் 1 தேக்கரண்டி பொடியை கலந்து குடிக்கவும். இந்த பொடியை காலையில் சாப்பிட மறந்து விட்டால், இரவு உணவிற்கு 2 மணி நேரத்திற்கு முன் சாப்பிடலாம்.

மேலும் படிக்க |  இஞ்சி இடுப்பழகி ஆகணுமா... கை கொடுக்கும் சூப்பர் டீடாக்ஸ் பானம்!

ஆயுர்வேத எடை இழப்பு பொடியின் ஆரோக்கிய நன்மைகள்

1. வெந்தயம், சீரகம், பெருஞ்சீரகம் மற்றும் தனியாவில் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. இவை, உடலின் வளர்சிதை மாற்றம் என்னும் மெட்டபாலிஸத்தை அதிகரித்து உடல் எடையைக் குறைக்க உதவும். இதை உட்கொள்வதன் மூலம், உங்கள் எடை இழப்பு பயணம் எளிதாக இருக்கும்.

2. உடல் பருமனை குறைக்கும் ஆயுர்வேத பொடியில் உள்ள சத்துக்கள் செரிமானத்தை மேம்படுத்த உதவும். இதன் குடல் தொடர்பான, ஆசிடிட்டி, வாயு, வயிற்று உப்பிசம் போன்ற பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

3. எடை குறைப்புக்கான ஆயுர்வேத பொடி உங்கள் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்தி, உடலை பல்வேறு வகை தொற்று நோய்களைத் தடுப்பதற்கும் உதவியாக இருக்கும்.

4. ஆயுர்வேத பொடியில் உள்ள இலவங்கப்பட்டை ஆன்டிஆக்ஸிடன்ட்களைக் கொண்டுள்ளது. அதன் நுகர்வு இன்சுலின் அளவைக் கட்டுப்படுத்த உதவும். மேலும் மூட்டு வலி போன்ற பிரச்சனைகளையும் தடுக்கும்.

மேலும் படிக்க | யூரிக் அமில அளவை சிம்பிளா குறைக்கும் சூப்பர் காய்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News