ஆரோக்கியத்தை மேம்படுத்தும் கில்லி இந்த மல்லி விதைகள்: நன்மைகளின் லிஸ்ட் இதோ

Health Benefits of Coriander Seeds: கொத்தமல்லி ஒரு மருத்துவ தாவரமாகும். இதில் பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. இவை நோய்களை எதிர்த்துப் போராட உதவிகின்றன.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 27, 2024, 06:01 PM IST
  • மல்லி விதைகளில் உள்ள வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டிஆக்சிடன்டுகள் உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன.
  • மல்லி விதைகள் இதய ஆரோக்கியத்திற்கு நன்மை செய்யும் பல விளைவுகளைக் கொண்டுள்ளன.
  • மல்லி விதைகள் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
ஆரோக்கியத்தை மேம்படுத்தும் கில்லி இந்த மல்லி விதைகள்: நன்மைகளின் லிஸ்ட் இதோ title=

Health Benefits of Coriander Seeds: நாம் தினமும் சமையலில் பயன்படுத்தும் மசாலா பொருட்கள் உணவின் சுவையை அதிகரிக்கின்றன. இது மட்டுமின்றி, இவற்றில் பல வித ஆரோக்கிய நன்மைகளும் இருக்கின்றன. இந்த மசாலா பொருட்கள் பல வித உடல் உபாதைகளுக்கு நிவாரணமாக அமைகின்றன. சுவையோடு பல வித அரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ள அப்படி ஒரு மசாலா பொருள்தான் தனியா. இவற்றை மல்லி விதைகள் என்றும் கூறுகிறோம். 

கொத்தமல்லி ஒரு மருத்துவ தாவரமாகும். இதில் பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. இவை நோய்களை எதிர்த்துப் போராட உதவிகின்றன. மல்லி விதைகள் செரிமான சக்தியை அதிகரிப்பதோடு, கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தவும், இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கவும், சிறுநீரகம் உள்ளிட்ட பல பாகங்களை பாதுகாக்கவும் உதவுகின்றன. மல்லி விதைகளில் புரதச்சத்து, கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, தாதுக்கள் ஆகியவை நிறைந்துள்ளன. உடல் ஆரோக்கியத்திற்கு தனியாவால் கிடைக்கும் நன்மைகள் பற்றி இங்கே காணலாம். 

மல்லி விதைகளின் ஆரோக்கிய  நன்மைகள்

- மல்லி விதைகளில் உள்ள வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்டுகள் உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன. கொத்தமல்லி இலைகள் மற்றும் விதைகளில் வைட்டமின் கே நிறைந்துள்ளது. இது இரத்தக் கட்டிகளைத் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

- வைட்டமின் கே எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது. இது ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற பிரச்சனைகளைத் தடுக்க உதவுகிறது. இதுமட்டுமின்றி  வைட்டமின் கே இதய நோய் அபாயத்தையும் குறைக்க உதவுகிறது.

ப்ரீ ரேடிக்கல்கள்

மல்லி விதைகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது உடலில் உள்ள ப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட அவசியமாக உள்ளன. மல்லி விதைகளில் உள்ள ஆண்டிஆக்சிடெண்டுகள் ப்ரீ ரேடிக்கல்களை அகற்ற உதவுகின்றன. மல்லி விதைகளால் சில புற்றுநோய்களின் அபாயம் குறைகிறது. மூப்பின் பிரச்சனைகளையும் இது குறைகின்றது. 

இதய நோய்களின் ஆபத்து குறைகின்றது

மல்லி விதைகள் இதய ஆரோக்கியத்திற்கு நன்மை செய்யும் பல விளைவுகளைக் கொண்டுள்ளது. இது ஒரு டையூரிடிக் ஆக செயல்படுகிறது. இது உடலிலிருந்து அதிகப்படியான சோடியத்தை வெளியேற்றவும் இரத்த அழுத்தத்தை குறைக்கவும் உதவும். மேலும் மல்லி விதைகள் கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவுகின்றன. 

மேலும் படிக்க | டெங்கு காய்ச்சலா? விரைவில் குணமாக இந்த உணவுகளை டயட்டில் சேருங்கள்

வீக்கத்தை குறைக்கிறது

தனியா உடலில் ஏற்படும் அழற்சியை குறைக்க உதவுகிறது. அழற்சி புற்றுநோய் முதல் இதய நோய் வரையிலான பிரச்சனைகளுடன் தொடர்புடையது. தனியாவில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் வீக்கத்தை குறைத்து புற்றுநோய் செல்களை செயலிழக்கச்செய்கின்றன.

இரத்த சர்க்கரை அளவை பராமரிக்கிறது

கொத்தமல்லி விதைகள் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும். இது இரத்த சர்க்கரை அளவை கணிசமாகக் குறைக்கும். மல்லி விதைகள் இரத்த சர்க்கரையை நிர்வகிக்க உதவும் என்சைம்களை செயல்படுத்த உதவுகின்றன. இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக உள்ளவர்கள் மல்லி விதைகளை உணவில் சேர்த்துக் கொள்வதால் பலன் கிடைக்கும்.

ஊட்டச்சத்து

மல்லி விதைகள் வைட்டமின் ஏ இன் சிறந்த மூலமாக உள்ளன. இவை ரெடினாவுக்கு ஊட்டச்சத்தை அளிப்பதற்கும், கண்களை ஈரப்பதத்துடன் வைப்பதற்கும், கண்களைப் பராமரிப்பதற்கும் உதவுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி

மல்லி விதைகளில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. இது உடலின் நோய் எதிர்ப்பு சக்திக்கு முக்கியமானது. ஏராளமான வைட்டமின் சி உட்கொள்வதால் வெள்ளை இரத்த அணுக்கள் நல்ல முறையில் வேலை செய்வது உறுதிசெய்யப்படும். காயங்களை குணப்படுத்தவும், கொலாஜன் உற்பத்தியிலும் வைட்டமின் சி பங்களிக்கின்றது. இது சருமத்தை பராமரிக்க உதவுகிறது.

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | அடாவடி கொழுப்பை அட்டகாசமாய் குறைக்கும் கற்றாழை: இப்படி தினமும் சாப்பிடுங்க

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News