கொஞ்சம் நடங்க பாஸ்!! தினமும் வாகிங் செய்வதால் கிடைக்கும் சூப்பர் நன்மைகள்

Walking Benefits: கலோரிகளை எரிக்க நடைபயிற்சி ஒரு சிறந்த வழியாகும். நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால், தினமும் 30 நிமிடங்கள் நடக்க முயற்சிக்கவும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 27, 2023, 04:21 PM IST
  • இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
  • புற்றுநோய் ஆபத்து குறைக்கப்படுகிறது.
  • நினைவாற்றல் மற்றும் கற்றலை மேம்படுத்துகிறது.
கொஞ்சம் நடங்க பாஸ்!! தினமும் வாகிங் செய்வதால் கிடைக்கும் சூப்பர் நன்மைகள் title=

Walking Benefits : அதிகாலையில் எழுந்து நடைப்பயிற்சி மேற்கொள்வதால், பல நன்மைகள் கிடைக்கும். நடைபயிற்சி நமது ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை வழங்கும் எளிமையான மற்றும் ஆரோக்கியமான பயிற்சி முறையாகும். நடைபயிற்சி நமது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். முதியவர்களைக் கொண்டு விஞ்ஞானிகள் நடத்திய சமீபத்திய ஆய்வின்படி, 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் கூடுதலாக 500 படிகள் நடப்பது மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை 14 சதவிகிதம் குறைக்கிறது . 

இந்த ஆய்வில், விஞ்ஞானிகள் சராசரியாக 78 வயதுடைய 15,500-க்கும் மேற்பட்டவர்களை ஈடுபடுத்தி இருந்தனர். இதில் முதியவர்கள் தினசரி நடைபயிற்சி செய்வதால் ஏற்படும் உடல்நல பாதிப்புகளை ஆய்வு செய்தனர். ஸ்டெப்சை கணக்கிட உடற்தகுதி சாதனங்கள் ஆய்வில் பயன்படுத்தப்பட்டன.

ஒவ்வொரு நாளும் 2000 படிகளுக்கு குறைவாக நடப்பவர்களுடன் ஒப்பிடும்போது ஒவ்வொரு நாளும் 4500 படிகள் நடப்பவர்களுக்கு கடுமையான நோய்களின் ஆபத்து குறைவாகவே காணப்பட்டதாக விஞ்ஞானிகளின் கூறுகின்றனர். அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் மாநாட்டில் வழங்கப்பட்ட ஒரு ஆய்வின்படி, கூடுதலாக 500 படிகள் நடப்பதன் மூலம், மக்கள் இருதய நோய்களால் பாதிக்கப்படும் அபாயம் 14 சதவிகிதம் குறைந்தது. ஆய்வின் தலைவரான பேராசிரியர் எரின் இ டூலி கூறுகையில், 'வயதுக்கு ஏற்ப உடல் செயல்பாடுகளை பராமரிப்பது முக்கியம், வழக்கமான நடைப்பயிற்சி நல்ல தேர்வாக இருக்கும். ஒவ்வொரு நாளும் 500 படிகள் அதிகமாக நடப்பது இதய ஆரோக்கியத்தில் இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அறிந்து நாங்கள் ஆச்சரியப்பட்டோம். நடக்கும் ஸ்டெப்சின் எண்ணிக்கையை படிப்படியாக அதிகரிக்கலாம்.’ என்றார்.

தினமும் வாகிங் செய்வதால் ஏற்படும் பலன்கள்

எடை இழப்புக்கு உதவும்

கலோரிகளை எரிக்க நடைபயிற்சி ஒரு சிறந்த வழியாகும். நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால், தினமும் 30 நிமிடங்கள் நடக்க முயற்சிக்கவும்.

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

நடைபயிற்சியின் போது இரத்த நாளங்கள் திறக்க தொடங்கும். இதனுடன், இந்த இரத்த நாளங்களில் சிக்கியுள்ள கொலஸ்ட்ரால் துகள்களும் உருக ஆரம்பிக்கின்றன. நடைப்பயிற்சி இதய துடிப்பு மற்றும் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. இது இதய நோய், பக்கவாதம் மற்றும் இதயம் தொடர்பான பிற பிரச்சனைகளின் அபாயத்தைக் குறைக்க உதவும்.

மேலும் படிக்க | Belly Fat குறைக்கணுமா? சீரகத்தை இப்படி சாப்பிட்டா சூப்பரா குறைக்கலாம்

புற்றுநோய் ஆபத்து குறைக்கப்படுகிறது
நடைபயிற்சி சில வகையான புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவும்.

நீரிழிவு கட்டுப்பாடு
டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு நடைப்பயிற்சி இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும்.

மன அழுத்தம் மற்றும் பதட்டம் குறையும்
நடைபயிற்சி மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் குறைக்க உதவும். இது மனநிலையை மேம்படுத்தவும், மனச்சோர்வின் அறிகுறிகளைக் குறைக்கவும் உதவும்.

நினைவாற்றல் மற்றும் கற்றலை மேம்படுத்துகிறது
நடைப்பயிற்சி நினைவாற்றலையும் கற்றலையும் மேம்படுத்த உதவும். இது அல்சைமர் மற்றும் பிற டிமென்ஷியா அபாயத்தைக் குறைக்கவும் உதவும்.

நுரையீரல் வலிமையாகும்:

நுரையீரல் பிரச்சனை உள்ளவர்களுக்கு, விறுவிறுப்பான நடைப்பயிற்சி ஒரு வரப்பிரசாதம் போன்றது. நடைப்பயிற்சியின் மூலம், தூய காற்று நுரையீரலுக்குள் நுழைகிறது. அதன் பிறகு ஆக்ஸிஜன் சப்ளை மேம்படும். இதன் காரணமாக நுரையீரல் வலுவாகவும் ஆரோக்கியமாகவும் மாறும். அதே சமயம் விறுவிறுப்பான நடைப்பயிற்சி மற்ற பிரச்சனைகளை ஏற்படுத்தாது.

மூட்டு வலியில் நன்மை பயக்கும்:

மூட்டுகள் சம்பந்தமான நோய் ஏதேனும் இருந்தால், விறுவிறுப்பான நடைபயிற்சி இதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அரை மணி நேரம் வேகமான வழக்கமான நடைபயிற்சி, மூட்டுகளில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. மூட்டுகளின் நிலை மேம்படும். இதன் காரணமாக அதன் செயல்பாடு சிறப்பாக இருக்கும். அதுமட்டுமின்றி உடலின் எலும்புகளும் வலுவாகும்.

மேலும் படிக்க | என்றென்றும் இளமையாக இருக்க... ‘இந்த’ உணவுகள் அவசியம் டயட்டில் இருக்கட்டும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News