முதல்வராக பதவியேற்கும் ஹேமந்த் ஷோரன் முன் நிற்கும் 5 சவால்கள்...

ஜார்கண்ட் சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா (பாஜக) தோல்வியுற்ற நிலையில், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் ஷோரன் கூட்டணி கட்சி காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் ஆதரவுடன் புதிய முதல்வராக பதவியேற்க உள்ளார். 

Last Updated : Dec 24, 2019, 01:02 PM IST
  • 2000-ஆம் ஆண்டில் பீகாரில் இருந்து பிளவுபட்டதிலிருந்து ஜார்கண்ட் ஒரு 'ஏழை' மாநிலம் என்று அழைக்கப்படுகிறது.
  • ஜார்க்கண்டின் சுமார் 36.96 சதவீத மக்கள் இன்னும் வறுமைக் கோட்டுக்கு (BPl) கீழே வாழ்கின்றனர் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
முதல்வராக பதவியேற்கும் ஹேமந்த் ஷோரன் முன் நிற்கும் 5 சவால்கள்... title=

ஜார்கண்ட் சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா (பாஜக) தோல்வியுற்ற நிலையில், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் ஷோரன் கூட்டணி கட்சி காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் ஆதரவுடன் புதிய முதல்வராக பதவியேற்க உள்ளார். 

ஆனால் ஜார்கண்ட் முதல்வராக பதவியேற்ற பின்னர் ஹேமந்த் சோரன் சில கடுமையான சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அந்தவகையில் ஜார்க்கண்ட் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு JMM தலைவர் எதிர்கொள்ள வேண்டிய ஐந்து சவால்கள் இங்கே...

  • மாநிலத்தின் கருவூலத்தில் ரூ.85,000 கோடிக்கு மேல் கடன்

ஜார்கண்ட் அரசு தற்போது ரூ .85,000 கோடிக்கு மேல் கடனில் உள்ளது. ரகுபர் தாஸ் 2014-ஆம் ஆண்டில் மாநில முதல்வராக பொறுப்பேற்றபோது, ​​மாநிலக் கருவூலத்தின் மொத்த கடன் ரூ.37,000 கோடியாக இருந்தது, ஆனால் தாஸின் ஆட்சிக் காலத்தில் கடன் அதிகரித்துக்கொண்டே இருந்தது என்பது சுவாரஸ்யமானது. 

நமக்கு கிடைத்த தரவுகளின்படி, முதல்வர் தாஸ் தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் உள்ள கடன்கள்,... ஜார்கண்டின் அனைத்து முதல்வர்களும், அதாவது 2000 முதல் 2014 வரை பதவிவகித்த முதல்வர்கள் வாங்கிய கடன்களை விட அதிகமாக இருக்கின்றன. ஹேமந்த் சோரனுக்கு முதல் சவால் மாநிலத்தின் கருவூலத்தின் சுமையை குறைப்பதாகும். இது தவிர, ஜார்க்கண்டின் விவசாயி ரூ.6,000 கோடிக்கு மேல் கடனைக் கொண்டுள்ளார், மேலும் புதிய முதலமைச்சர் விவசாயிகளுக்கு கடன் சுமையிலிருந்து வெளியேற உதவும் நோக்கில் நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

  • 'ஏழை' மாநிலத்தின் குறிச்சொல்லை அகற்ற வேண்டும்.

2000-ஆம் ஆண்டில் பீகாரில் இருந்து பிளவுபட்டதிலிருந்து ஜார்கண்ட் ஒரு 'ஏழை' மாநிலம் என்று அழைக்கப்படுகிறது. ஜார்க்கண்டின் சுமார் 36.96 சதவீத மக்கள் இன்னும் வறுமைக் கோட்டுக்கு (BPl) கீழே வாழ்கின்றனர் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். BPL மக்கள்தொகையின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கும், ஜார்கண்ட் ஒரு 'ஏழை' மாநிலம் என குறிப்பதை நீக்குவதற்குமான வேலைபாடுகளில் ஹேமந்த் ஷோரன் புதிய யோசனைகளைக் கொண்டு வர வேண்டும்.

  • உணவு பற்றாக்குறை

ஜார்க்கண்ட் எப்போதும் பட்டினியால் ஏற்படும் மரணங்களுக்கான செய்திகளில் வெளியாகி வருகின்றன. 2017-ஆம் ஆண்டில், சந்தோஷி என்ற 11 வயது சிறுமி ஜார்க்கண்டின் சிம்டேகாவில் உணவு பற்றாக்குறையால் இற்ந்ததாக செய்தி வெளியாகி நாட்டு மக்களின் இரங்கல்களை மட்டும் பெற்றது. சந்தோஷியின் மரணம் இந்தியா முழுவதும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. உத்தியோகபூர்வ தகவல்களின்படி, ஜார்க்கண்டிற்கு ஆண்டுக்கு சுமார் 50 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் தேவைப்படுகின்றன, ஆனால் மாநிலத்திற்கு ஆண்டுக்கு 40 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்களை உற்பத்தி செய்ய முடிகிறது. மாநிலத்தில் பட்டினி கிடப்பதைத் தடுக்க 10 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்களின் இடைவெளியை நிரப்புவதற்கான சவாலை ஹேமந்த் சோரன் கையாள வேண்டும்.

  • நக்சலிசம் மற்றும் பாதுகாப்பு

ஜார்க்கண்டில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் இருந்து நக்சலிசத்தை அழிப்பதில் பாதுகாப்புப் படையினர் வெற்றி பெற்றிருந்தாலும், மாநிலத்தின் 13 மாவட்டங்கள் இன்னும் நக்சலிசத்தால் பாதிக்கப்பட்டு தான் வருகின்றன. இந்த மாவட்டங்கள் குந்தி, லதேஹர், ராஞ்சி, கும்லா, கிரிடிஹ், பாலமாவ், கார்த்வா, சிம்டேகா, தும்கா, லோஹர்டாகா, பொகாரோ மற்றும் சத்ரா ஆகியன ஆகும். இந்த மாவட்டங்களை நக்சலிசத்திலிருந்து விடுவிப்பது உள்வரும் முதல்வர் ஹேமந்த் ஷோரனுக்கு ஒரு சவாலாக இருக்கும்.

  • அதிகரித்துவரும் வேலையின்மை

ஹேமந்த் ஷோரனுக்கு ஒரு பெரிய சவாலாக இருக்க இருப்பது, ஜார்க்கண்டில் உள்ள இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு. தேசிய மாதிரி கணக்கெடுப்பு அலுவலகம் (NSSO) வெளியிட்டுள்ள தகவல்களின்படி, அந்த 11 மாநிலங்களில் ஜார்க்கண்ட் ஒன்றாகும், அங்கு வேலையின்மை ஒரு முக்கிய பிரச்சினையாக உள்ளது. வேலையின்மை விஷயத்தில் ஜார்கண்ட் ஐந்தாவது இடத்தில் உள்ளது என்று அறிக்கை காட்டுகிறது. 2011-12 ஆம் ஆண்டில், ஜார்க்கண்டில் வேலையின்மை விகிதம் 2.5%-ஆக இருந்தது, இது 2017-18-ஆம் ஆண்டில் 7.7%-ஆக உயர்ந்தது என்றும் NSSO தரவு காட்டுகிறது.

Trending News