NEET Result 2020: நீட் தேர்வு முடிவுகளை வெளியிட்டது தேசிய தேர்வு முகமை

NEET Result 2020: நீட் தேர்வு முடிவுகளை வெளியிட்டது தேசிய தேர்வு முகமை. முடிவுகளை  ntaneet.nic.in என்ற வலைதளத்தில் பெறலாம்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 16, 2020, 06:07 PM IST
NEET Result 2020: நீட் தேர்வு முடிவுகளை வெளியிட்டது தேசிய தேர்வு முகமை title=

நீட் தேர்வு 2020 எழுதுவதற்கு சுமார் 15.97 லட்சம் மாணவர்கள் பதிவு செய்தனர். மொத்த பதிவு செய்யப்பட்ட மொத்தம், 15.97 லட்சம் மாணவர்களில்,  85-90 சதவீதத்திற்கும் அதிகமானோர் நீட் 2020 தேர்வை எழுதினர்.

நீட் 2020 முடிவுகளை எவ்வாறு தெரிந்து கொள்ளலாம்:

வழிமுறை 1: அதிகாரப்பூர்வ வலைத்தளமான - ntaneet.nic.in என்ற வலை தளத்திற்கு செல்லவும்.

வழிமுறை  2: முகப்புப்பக்கத்தில், ‘NEET (UG) – 2020 Result’ என்ற இணைப்பைக் கிளிக் செய்க.

வழிமுறை  3: உங்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி போன்ற தேவையான விவரங்களை உள்ளிட்டு  submit என்பதைக் கிளிக் செய்க

வழிமுறை  4: உங்கள் நீட் 2020 முடிவுகள் இப்போது உங்கள் திரையில் காண்பிக்கப்படும்

வழிமுறை 5: உங்கள் NEET 2020 முடிவைப் பதிவிறக்கவும். எதிர்கால தேவைக்காக எடுத்துக் கொள்ளுங்கள்.

நீட் 2020 பதில்களை அறிந்து கொள்வது எப்படி:

வழிமுறை 1: ntaneet.nic.in என்ற வலைதளத்திற்கு செல்லவும்

வழிமுறை 2. “NEET (UG) - 2020 Final Answer Key”  என்பதை கிளிக் செய்க

வழிமுறை 3. ஒரு PDF பைல் திறக்கும்

வழிமுறை 4. நீங்கள் எத்தனை கேள்விகளுக்கு சரியான விடை அளித்துள்ளீர்கள் என்பதை சரிபார்க்கவும்.

முன்னதாக, அக்டோபர் 12 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் கோவிட் -19 நெருக்கடி காரணமாக, கண்டெயின்மெண்ட் பகுதிகளில் இருந்ததன் காரணமாக செப்டம்பர் 13 ஆம் தேதி நடத்தப்பட்ட நீட் தேர்வில் எழுத தவறியவர்களுக்கு, அக்டோபர் 14 ஆம் தேதி நீட் குறித்த சிறப்புத் தேர்வை நடத்துமாறு என்.டி.ஏ-க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. 

Trending News