இன்றைய (23.04.2018) உங்கள் ராசிபலன்- பார்க்க!

ராசிபலன்: இன்றைய நாள் எப்படி இருக்கும்: உங்கள் அதிஷ்ட நிறம் மற்றும் அதிஷ்ட எண் - உள்ளே!!

Last Updated : Apr 23, 2018, 06:04 AM IST
இன்றைய (23.04.2018) உங்கள் ராசிபலன்- பார்க்க! title=

மேஷம்:
இன்று தர்ம காரியங்களில் ஈடுபடுவீர்கள். மன அழுத்தம் மறையும். சிந்தனையில் தெளிவு உண்டாகும். சகோதர, சகோதரிகள் மற்றும் நண்பர்கள் மூலமாக நன்மை அடைவீர்கள். புதிய சொத்துக்களை வாங்குவீர்கள். ஆன்மீகப் பெரியோர்களைச் சந்தித்து அவர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள். 
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

ரிஷபம்:
இன்று உங்கள் தோற்றத்தில் பொலிவு உண்டாகும். புத்திசாலிகளின் நட்பைப் பெற்று பலனடைவீர்கள். மன உறுதி உண்டாகும். கவலைகள் மறைந்து மகிழ்ச்சி பிறக்கும். ஏற்றுமதி - இறக்குமதி வியாபாரங்கள் சூடுபிடிக்கும். தூர தேசத்திலிருந்து மகிழ்ச்சி தரும் செய்திகளைக் கேட்பீர்கள். 
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

மிதுனம்:
இன்று வெளிநாட்டுப் பயணங்களைச் செய்வீர்கள். சேமிப்பு விஷயங்களில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். வெளிவட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். உங்களைப் பற்றி அவதூறாகப் பேசியவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு உண்மை நிலையைப் புரிய வைத்து, நட்பைத் தக்க வைத்துக் கொள்ளும் சந்தர்ப்பம் ஏற்படும். 
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

கடகம்:
இன்று உத்யோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு தேடி வரும். வருமானம் சீராக இருக்கும். விரும்பிய இடமாற்றங்களும் கிடைக்கும். மேலதிகாரிகளின் அன்பும், ஆதரவும் கிடைக்குமென்றாலும் அவர்களிடம் மரியாதைக்குரிய தொலைவில் இருந்து பழகுவது நல்லது. 
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

சிம்மம்:
இன்று சக ஊழியர்களுடன் நல்ல நட்பு தொடர்வதால் உங்களின் வேலைகள் குறித்த காலத்திற்குள் நிறைவேறிவிடும். உங்களின் வேலைத் திறனைக் கூட்டிக்கொள்ள புதிய அலுவலகப் பயிற்சிகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். 
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

கன்னி:
இன்று வியாபாரிகள் போட்டிகளையும், பொறாமைகளையும் சந்தித்தாலும் பொறுமையுடன் செயல்பட்டு அவற்றைச் சமாளிப்பீர்கள். உங்களின் சமயோஜித புத்தியால் பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக்கொள்வீர்கள். புதிய வாடிக்கையாளர்களையும், புதிய சந்தைகளையும் நாடிச் செல்வீர்கள். 
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

துலாம்:
இன்று கொடுக்கல், வாங்கல் விவகாரங்களில் சிரமங்கள் உண்டாகாது. குடும்பத்தில் அமைதி நிலவும். வெளியூர் மற்றும் வெளிநாட்டிலிருந்து இன்பகரமான செய்திகள் வந்து சேரும். கணவரிடம் அனுசரித்து நடந்து கொள்வீர்கள். கணவரின் உறவினர்களோடு வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். 
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

விருச்சிகம்:
இன்று மாணவமணிகள் படிப்பில் வெற்றி வாகை சூடுவீர்கள். மேலும் உங்கள் ஞாபக சக்தியும், அறிவாற்றலும் பெருகும். அதேநேரம் விளையாடும் நேரங்களில் கவனமாக இருக்கவும். பெற்றோர்களின் ஆதரவுடன் உங்களின் எதிர்காலக் கல்வித் திட்டங்களைச் செவ்வனே நிறைவேற்றிக் கொள்வீர்கள். 
அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9 

தனுசு:
இன்று அரசியல்வாதிகள், தாங்கள் சார்ந்துள்ள கட்சியின் -தொண்டர்களுக்கும், நெருங்கியவர்களுக்கும் மிகப் பெரிய உதவிகளைச் செய்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். உங்கள் கௌரவம் உயரும். சமுதாயத்தில் அந்தஸ்து உண்டாகும். 
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

மகரம்:
இன்று உங்களின் முயற்சிகள் உங்களை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்லும். கலைத்துறையினர் படிப்படியான வளர்ச்சியைக் காண்பீர்கள். வருமானம் நன்றாக இருப்பதால் ரசிகர்களுக்காகச் செலவு செய்வீர்கள். சக கலைஞர்களால் நன்மை அடைவீர்கள். புதிய வாகனங்களை வாங்கும் வாய்ப்பும் கிடைக்கும். 
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

கும்பம்:
இன்று கஷ்டங்கள் யாவும் விலகும். மனசாட்சிக்கு பயந்து நடப்பீர்கள். எந்த நேரத்திலும் மனதில் பட்டதை தயக்கமின்றி சொல்வீர்கள். தன் குடும்பத்தினரிடம் அதீத பாசம் காட்டுவீர்கள். குடும்பத்தில் இதுவரை இருந்து வந்த கடன் தொல்லை இனிமேல் இருக்காது. 
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

மீனம்:
இன்று எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடத்தில் அன்பாகப் பழகவும். புதிய வீடு கட்டலாம். குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ள மூன்றாம் நபர் தலையீடு வேண்டாம். 
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 4, 6 

வழங்கியவர் - பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

மேலும் விவரங்களுக்கு http://kuppuastro.blogspot.in மற்றும் http://www.kuppuastro.com என்ற வெப்சைட் கிளிக் செய்யவும்.

Trending News