இந்திய பண்பாட்டில் ஆசீர்வாதம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. பிறரின் ஆசீர்வாதமே நம்மை வாழவைக்கும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை. பெரியோர் காலில் விழுந்து ஆசி பெற்றால் சக்தி அதிகமாகும் என்பது தெரியுமா? ஆசிர்வாதம் எனும் மிகப்பெரிய சக்தி நமக்கு பெரும் பலத்தை கொடுக்கிறது..
அசிர்வாதம் பெறுவது மட்டுமல்ல.. ஆசிர்வாதம் செய்வதும் நமக்குக் சக்தியை கொடுக்கும்.. ஆனால் ஆசீர்வாதம் செய்வதற்கு நாம் தேர்ந்தெடுக்கும் வார்த்தைகளில்தான் பல விஷயங்கள் பொதிந்திருக்கிறது. பொதுவாகவே, வயது முதிர்ந்தவர்களிடம் ஆசி வாங்கினால் மகிழ்ச்சி ஏற்படும்.
சிலர் காலில் விழுந்தால் பரவாயில்லை, விழவேண்டாம் என்று இயல்பாக சொல்வார்கள், வேறு சிலரோ, பதறிவிடுவார்கள். இவை அனைத்தும் தவறு என்றும், நம்மிடம் ஆசி வேண்டுபவருக்கு ஆசீர்வாதம் கொடுக்காமல் இருப்பது தவறு என்றும் சாஸ்திரங்கள் சொல்கின்றன.
Also Read | அமாவாசையை பவுர்ணமியாக்கிய அன்னை அபிராமியின் திருக்கடையூர் திருவிளையாடல்
புது மணமக்கள் காலில் விழுந்தால் தீர்க்காயுஸ்மான் பவ என ஆணுக்கும், தீர்க்க சுமங்கலிமான் பவ! என பெண்ணுக்கும் ஆசி கொடுக்கலாம்.
வயதானவர்கள் சகல தோசங்களும் இன்றோடு நீங்கப்பெற்று சகல செல்வங்களும் பெற்று ,குடும்ப ஒற்றுமையுடன், நல்ல தொழில் வளத்துடன், நீண்ட ஆயுளுடன் வளமுடன் வாழ்க என்று ஆசிர்வாதிக்கலாம்.
மந்திரம்,உச்சாடனம்,அபிசேகம்,ஆராதனை எல்லாமே கடவுளை வணங்கும்போது செய்வது. அது செய்யும் நம்மையும் வளப்படுத்தும் என்பது இந்துமத நம்பிக்கை.
நாம் ஏன் காலில் விழுகிறோம் என்பதற்கு அறிவியல் ரீதியான காரணம் உண்டு. ஆய்வின் படி மனிதனின் காலில்தான் சக்தி ஓட்டம் அதிகமாக இருக்கிறது.
Also Read | பார்ப்பவரை பரவசமூட்டும் அன்னையின் விதவிதமான அலங்காரங்கள்
ஒரு ஞானியின் காலைத் தொட்டு ஆசி பெறும் போது அவர்களின் சக்தி நமக்கும் கிடைக்கிறது. காலை தொடுதலின் மூலம் இந்த சக்தி பரிமாற்றம் நடக்கிறது. கோயிலுக்குச் சென்றால் தரையில் விழுந்து கடவுளை வணங்குவதற்கும் காரணம் உண்டு.
நீங்கள் தரையில் விழுந்து வணங்குவதை சாஷ்டாங்க நமஸ்காரம் என்பார்கள். கோயிலில் இருக்கும் சக்தி பெற்றுக் கொள்ளும் தன்மையானது அனைவரின் உடலுக்கும் இருப்பதில்லை.
சக்தியை இயல்பாக பெற்றுக் கொள்ளும் தன்மை இல்லாத பட்சத்தில் உங்கள் உடலுக்கும் கோயிலில் இருக்கும் சக்திக்கும் ஒரு தொடர்பை உருவாக்க, கோயிலின் தரையில் அமர வேண்டும் அல்லது இந்த சாஷ்டாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும்
Also Read | இன்றைய பஞ்சாங்கம்: 2021 பிப்ரவரி 21ஆம் நாள், மாசி 09, ஞாயிற்றுக்கிழமை
சொல்லும் வார்த்தைகளில் சக்தி இருக்கிறது..மனப்பூர்வமாக ஒருவர் ஆசி வழங்கும்போது அதன் சக்தி அளவிட முடியாதது... பல பாவங்களையும், தோசங்களையும் போக்கும் ஆசீர்வாதத்தை பெரியோரிடம் இருந்து பெற்று உங்கள் சக்தியை அதிகப்படுத்திக்கொள்ளுங்கள்..
ஜோதிடம், ராசிபலன், சாஸ்திரம்,மத நம்பிக்கைகள் இவற்றை கடைபிடிப்போர் கூட பலர் அடுத்தவருக்கு மரியாதை கொடுப்பதில் தயக்கம் காட்டுவார்கள். பெரியோர், மகான்கள், சாதனை புரிந்தோர், மகான்களை சந்தித்தோர், நம் வீட்டுக்கு வரும் மூத்த தம்பதிகள் இவர்களிடம் நாம் ஆசி பெறுவதால் அவர்களின் நல்ல எண்ணங்கள் நம்மை பலப்படுத்தும்.
ஆசீர்வாதத்தின் அர்த்தமும் மகிமையும் அதை பெற்று சிறப்புடன் வாழ்பவர்களுக்கு நன்கு புரியும்.
Also Read | உங்களிடம் இருக்கும் செல்வம் எந்த வகை? எவ்வளவு தலைமுறையினருக்கு செல்லும்?
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR