இன்று முதல் சென்னையில் உள்ள 4 சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் வசூலிப்பது நிறுத்தம்!

தமிழக அரசின் உத்தரவின்படி இன்று முதல் சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள 4  சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் வசூலிக்கப்படாததால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 30, 2021, 06:13 PM IST
இன்று முதல் சென்னையில் உள்ள 4  சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் வசூலிப்பது நிறுத்தம்!  title=

சென்னையைச் சுற்றிய இடங்களில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் சுங்கச்சாவடிகளில் கட்டண வசூலை நிறுத்த முயற்சி எடுக்கப்பட்டு வருவதாக சட்ட மன்றத்தில் சிறிது நாட்களுக்கு முன் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

தமிழ்நாடு சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடரில் ஒவ்வொரு துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய திருவையாறு தொகுதி திமுக உறுப்பினர் துரைசந்திரசேகர், ‘‘தமிழகத்தில் உள்ள நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகளை கடந்து வருவதில் தாமதம் ஏற்படுகிறது, நீண்ட நேரம் அனைவரையும் காக்க வைக்கின்றனர்.  எனவே, மத்திய அரசிடம் பேசி இந்த சுங்கச்சாவடிகளில் கட்டண வசூலை நிறுத்த வேண்டும்’’ என்றார். இதற்கு பதிலளித்து  எ.வ.வேலு, “ சென்னைக்கு அருகிலுள்ள 5 சுங்கச்சாவடிகளைக் கடக்க அதிக நேரம் எடுக்கும் என்பது உண்மைதான், இவை பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க ஏற்கனவே உத்தரவிட்டுள்ளார். எனவே, சுங்கச்சாவடிகளில் கட்டண வசூலை நிறுத்த முயற்சிகளை அரசு செய்யும்‘‘ என்றார்.

ALSO READ பம்பர் டு பம்பர் காப்பீட்டை கட்டாயமாக்கவும்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

இந்நிலையில்,  பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று  சென்னை ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளில்  எந்த ஒரு வாகனத்திற்கும் இன்று முதல் கட்டணம் வசூலிக்கபடாது என தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவித்திருந்தார். அதன் அடிப்படையில் நள்ளிரவு 12 மணி முதல் சென்னை பெருங்குடி, துரைப்பாக்கம் ரேடியல் சாலை, மேடவாக்கம் பிரதான சாலை, ஈசிஆர் செல்லும் கலைஞர் கருணாநிதி சாலை ஆகிய பகுதியில் உள்ள 4 சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் கட்டணம் இல்லாமல் சென்று வருகின்றன.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

இதனால் வாடகைகக்கு வாகன ஓட்டுநர்கள், வியாபாரிகள் என பலர் குறைந்தது மாதம் இரண்டாயிரம் ரூபாயினை சேமிக்க முடியும் எனவும்  கூறியுள்ளனர்.  

Trending News