தங்கத்தின் விலை குறைவது எப்போது? கிடுகிடுவென விலையேற காரணம் என்ன?

Gold Price Today : தங்கத்தின் விலை, ஒரு சவரனுக்கு தற்பாேது ரூ.53,280 விலையை எட்டியுள்ளது. இந்த விலை உயர்வுக்கு காரணம் என்ன? இதன் விலை எப்போது குறையும்?   

Written by - Yuvashree | Last Updated : Apr 8, 2024, 06:30 PM IST
  • தங்கத்தின் விலை இன்று வரலாறு காணாத உச்சத்தை தொட்டது
  • இதன் விலை குறைவது எப்போது?
  • விலை அதிகரிக்க காரணம் என்ன?
தங்கத்தின் விலை குறைவது எப்போது? கிடுகிடுவென விலையேற காரணம் என்ன?  title=

Gold Price Today : இந்திய பெண்களை பொறுத்தவரை, தங்கம் என்பது வரும் அழகு ஆபரணம் மட்டுமல்ல, ஒரு மிகப்பெரிய முதலீடாகவே இருக்கிறது. அதிலும், குறிப்பாக பெண் பிள்ளைகளை பெற்றோர், திருமண வயதில் குழந்தைக்கு சீர் செய்யவில்லை என்றால் கூட, அவரது எதிர்காலத்திற்காக குழந்தைக்கு 1 வயது ஆகும் முன்பிருந்தே தங்கத்தில் முதலீடு செய்ய தொடங்கி விடுவர். சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை, ஒரு சவரன் தங்கம், ரூ.5,000த்திற்கும் கீழ் விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால், இந்த ஆண்டோ, ஒரு சவரன் தங்கத்தின் விலை அப்படியே ரூ.53,000 தாண்டி ஜெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. 

20 ஆண்டுகளுக்கு பின்பெல்லாம் போக வேண்டாம், கடந்த மாதமே சென்று பார்க்கலாம். அப்போது தங்கத்தின் விலை எவ்வளவு இருந்தது தெரியுமா? ரூ.46,000. ஒரே மாதத்தில் கிடுகிடுவென உயர்ந்துள்ள தங்கத்தின் விலையை பார்த்து இந்தியர்கள் பலர் மலைத்து போய் அமர்ந்துள்ளனர். 

தங்க விலை உயர காரணம் என்ன?

தங்கத்தின் விலை ஏன் உயருகிறது என்பது குறித்து, கடந்த ஆண்டு பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் ஒரு ஊடகத்திற்கு பேட்டி கொடுத்திருந்தார். கடந்த ஆண்டின் தங்க விலை ஏற்றத்திற்கு இஸ்ரேல்-பாலஸ்தீன போர் காரணம் என குறிப்பிட்டிருந்தார். இந்த ஆண்டு தங்க விலை அதிகரிப்பதற்கும் சில காரணங்களை பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மத்திய வங்கி கொள்முதல், டாலர் மதிப்பி வீழ்ச்சி, சீன தேவை, அமெரிக்காவின் வட்டி விகித குறைப்பு உள்ளிட்ட பல காரணங்கள் கூறப்படுகின்றன.  சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்பதாலும், நம் நாட்டில் தங்கத்தின் விலை உச்சம் தொடுவதாக சில பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். 

மேலும் படிக்க | ‘இந்த’ பொருளை ரூ.600க்கு வாங்கி 6,000-ற்கு விற்கலாம்! சூப்பராக லாபம் பார்க்க ஐடியா..

தங்க விலை குறைய வாய்ப்பிருக்கிறதா?

வெளிநாட்டு நிறுவனங்களின் தரவுகளின் படி, 2025ஆம் ஆண்டு வரை தங்கத்தின் விலை உயர்ந்து இருக்கும் என்றே தெரியவந்துள்ளது. இதற்கு, சர்வதேச நிகழ்வுகளின் தாக்கம் காரணமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. 

இந்த விலை உயர்வு நீடிக்குமா?

கடந்த 20 ஆண்டுகளின் தரவுகளின் படி, தங்கத்தின் விலை, தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருப்பதாக தெரிகிறது. இதற்கு காரணம், அதிகரித்து வரும் தங்கத்தின் தேவைதான். வரும் ஜூன் மாதம், அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நிகழ்ந்தால், கண்டிப்பாக தங்க விலையிலும் மாற்றம் நிகழலாம் என கூறப்படுகிறது. இந்தியாவை பொறுத்தவரை, பணவீக்கம் (Inflation) இருப்பதால், தங்கத்தின் விலை இன்னும் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. 

இன்றைய (ஏப்ரல் 8) நிலவரத்தின் படி, ஆபரன தங்கத்தின் விலை, சவரனுக்கு ரூ.360 உயர்ந்திருக்கிறது. ஒரு கிராம் தங்கம், ரூ.6,660 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை, ரூ.360 உயர்ந்து, ரூ.53,280ஆக இருக்கிறது. தற்போது தங்கத்தில் முதலீடு செய்தால், லாபகரமாக இருக்கும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.  

வெள்ளி விலை நிலவரம்:

வெள்ளி விலை நிலவரத்தை பொறுத்தவரை, சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.1 உயர்ந்து கிராமுக்கு ரூ.85 ரூபாயாக விற்கப்படுகிறது. கிலோவுக்கு, ரூ.1000 உயர்ந்து ரூ.85 ஆயிரத்திற்கு விற்கப்படுகிறது. தங்கத்தை போலவே வெள்ளியின் விலையும் இதுவரை இல்லாத அளவிற்கு உயர்ந்து வரலாறு படைத்திருப்பது குறிப்ப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | கையில் இருக்கும் செல்போனை வைத்து இவ்வளவு லாபம் பார்க்கலாமா? இது தெரியாம போச்சே!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News