புதுடெல்லி: தங்கம் விலை இந்த மாதம் ₹ 2300 குறைந்துள்ளது, மேலும் சரிவு சாத்தியம் என்று கூறப்படும் நிலையில், தங்கத்தின் விலையில் அழுத்தம் காணப்படுகிறது. உள்நாட்டு சந்தையில், இந்த மாதத்தின் கடைசி வர்த்தக அமர்வில் எம்சிஎக்ஸ் தங்கத்தின் விலை பத்து கிராமுக்கு ரூ.57600 ஆக இருந்தது. செப்டம்பர் மாதத்தில் இதன் விலை ரூ.2300க்கு மேல் குறைந்துள்ளது. ஆகஸ்ட் 30 அன்று, அதன் விலை பத்து கிராமுக்கு ரூ.59926 ஆக இருந்தது. மாதாந்திர அடிப்படையில் நான்கால் சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை 1865 டாலராக இருந்தது.
டெல்லி சந்தையில் தங்கத்தின் விலை 250 ரூபாய் குறைவு
புல்லியன் சந்தையில், டெல்லியில் தங்கத்தின் விலை பத்து கிராமுக்கு ரூ.250 குறைந்து ரூ.58700 ஆக உள்ளது. அதே சமயம், வாரத்தின் கடைசி வர்த்தகத்தில் வெள்ளியின் விலை ரூ.1200 பெரும் உயர்ந்து, கிலோவுக்கு ரூ.74300-ஆக முடிவடைந்தது. மத்திய வங்கியின் நிலைப்பாடு காரணமாக தங்கத்தின் மீதான அழுத்தம் அதிகரித்துள்ளது.
தங்கத்தின் விலை குறைவு தொடர்பாக ஹெச்டிஎப்சி செக்யூரிட்டீஸ் ஆய்வாளர் சௌமில் காந்தியிடம் பேசினோம். பெடரல் ரிசர்வ் வங்கியின் ஹாக்கிஷ் அவுட்லுக் வெளியிடப்பட்டதிலிருந்து தங்கத்தின் விலையில் அழுத்தம் உள்ளது. எதிர்வரும் காலத்தில் மற்றொரு வட்டி விகித உயர்வு சாத்தியமாகும் என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
வட்டி விகிதங்கள் நீண்ட காலத்திற்கு அதிகமாக இருக்கும். என்பதால் தங்கத்தை அடிப்படையாகக் கொண்ட பத்திர ஈட்டுத் தொகை மற்றும் டாலர் குறியீடு வலுவடைந்து வருகிறது. இதனால், தங்கத்தின் மீதான முதலீடு சற்று குறைந்திருப்பதால், பொன் விலை சரிகிறது, இது மேலும் சரியும் என்று அவர் அனுமானம் தெரிவித்தார்.
மேலும் படிக்க | பொன்னகை வாங்கும்போது முகத்தில் புன்னகை இருக்க வேண்டுமா? தங்கநகை வாங்க டிப்ஸ்
தங்க விலை மீதான அழுத்தம் அதிகரிக்கும்
எதிர்வரும் பண்டிகைக் காலங்களில் தங்கத்தின் தேவை அதிகரிக்கும் என்பதால், விலை உயர்வு சாத்தியமாக இருக்கலாம் என்ற பொதுவான கருத்து நிதர்சனமாகுமா? ஆனால் விலை குறையும் என வாங்குபவர்கள் காத்திருக்கின்றனர். குறைந்த விலையில் வாங்குவது என்பது அனைவரின் விருப்பமாக இருக்கிறது.
ஆனால், வங்கிகளில் வட்டி விகிதம் அதிகமானாதால், தங்கத்தின் மீதான ஈர்ப்பு குறைந்து உள்ளது. எனவே, நகைகளை வாங்க திட்டமிடுபவர்களுக்கும், தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புபவர்களுக்கும் ஏற்ற காலம் இது
24 காரட் தங்கத்தின் விலை
IBJA எனப்படும் இந்தியன் புல்லியன் ஜூவல்லர்ஸ் அசோசியேஷன் இணையதளத்தில் உள்ள தகவலின்படி, 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5772. 22 காரட் விலை ரூ.5633 ஆகவும், 20 காரட் ரூ.5137 ஆகவும், 18 காரட் ரூ.4675 ஆகவும், 14 காரட் ஒரு கிராம் ரூ.3723 ஆகவும் உள்ளது. இதில் 3 சதவீத ஜிஎஸ்டி மற்றும் மேக்கிங் சார்ஜ் சேர்க்கப்படவில்லை என்பதை கவனத்தில் கொள்ளவும். மேலும் பல்வேறு நகரங்களில் அந்தந்த பகுதிகளுக்கான வரி வகைகளைப் பொறுத்து தங்கத்தின் விலையில் சிறிய அளவிலான மாற்றங்கள் இருக்கும்.
மேலும் படிக்க | தங்க நகைகளின் விலை எப்படி கணக்கிடப்படுகிறது என்று தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ