புதுடெல்லி: ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்து அதன் இயற்கை எழிலுக்கும், தட்பவெட்ப நிலைக்கு மட்டுமல்ல, பண முதலீடு செய்வதற்கும் பெயர் போன நாடு. சுவிட்சர்லாந்தில் உள்ள வங்கிகள் கறுப்பு பணத்தை பதுக்குவோருக்கு வசதியான இடமாக இருக்கின்றன.
வரி ஏய்ப்புக்காக பணக்காரர்கள் சுவிஸ் வங்கிக் கணக்கில் (Swiss banks) பணத்தை சேமித்து வைப்பது உலகறிந்த உண்மை. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு மத்தியில் பதவியேற்றதும், கறுப்பு பணத்தை மீட்க தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அங்கு முதலீடு செய்யப்பட்டிருக்கும் இந்தியர்களின் பணத்தை மீட்க மத்திய அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்தியா உள்ளிட்ட 86 நாடுகள் சுவிட்சர்லாந்து உடன் தானியங்கி தகவல் பரிமாற்ற ஒப்பந்தத்தை (automatic communication agreements) மேற்கொண்டுள்ளன. இந்த ஒப்பந்தம் சுவிட்சர்லாந்து வங்கிகளில் முதலீடு செய்துள்ளவர்களின் விவரங்களை, அந்தந்த நாடுகளிடம் வழிவகை செய்கிறது.
Also Read | உங்கள் பணத்தை சேமிக்க ஐந்து எளிய வழிகள்!
அதன் அடிப்படையில் மூன்றாம் கட்டமாக வங்கிக் கணக்குகளை சுவிட்சர்லாந்து அரசு இன்னும் சில நாட்களில் பகிர்ந்துக் கொள்ளவிருக்கிறது.
Switzerland to share with India this month 3rd set of Swiss bank account details of Indians under automatic info exchange framework: Officials
— Press Trust of India (@PTI_News) September 12, 2021
முன்னதாக, 2019ஆம் ஆண்டு செப்டம்பரில் இந்தியா உட்பட 75 நாடுகளை சேர்ந்தவர்களில் வங்கிக் கணக்குகளை (Swiss bank accounts) சுவிட்சர்லாந்து (Switzerland) ஒப்படைத்தது. சுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களின் முதல் பட்டியல் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவுக்கு கிடைத்தது.
கடந்தாண்டு அக்டோபர மாதம் இரண்டாவது பட்டியல் ஒப்படைக்கப்பட்டது. தற்போது மூன்றாவது பட்டியல் இந்த மாத இறுதிக்குள் இந்தியாவிற்கு கிடைத்துவிடும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதில், இந்தியர்களின் சுவிஸ் வங்கிக் கணக்கு மட்டுமல்ல, சுவிட்சர்லாந்தில் இந்தியர்கள் வாங்கியுள்ள சொத்துக்கள் குறித்த தகவலும் முதல் முறையாக அளிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.
தங்கள் சொந்த நாடுகளில் வரி செலுத்துவதில் இருந்து தப்புவதற்காக கருப்புப் பணத்தை செல்வந்தர்கள் சுவிட்சர்லாந்து வங்கிக் கணக்கில் சேமித்து வைக்கின்றனர்.
Also Read | வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் திருமணம்- டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
அதிக பணம் வைத்திருப்பவர்கள் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்குச் செலுத்தவேண்டிய பல்வேறு வரிகள், கட்டணங்களை செலுத்தாமல் ஏமாற்றி, வரி ஏய்ப்பு செய்து முடக்கி வைக்கும் பணத்தை பாதுகாப்பாக வைப்பதற்கு ஏதுவாக சுவிட்சர்லாந்து நாட்டின் சட்டங்கள் உள்ளன.
வெளிநாடுகளில், குறிப்பாக சுவிட்சர்லாந்து நாட்டு வங்கிகளில் மட்டும் இந்தியர்களின் 1,500 பில்லியன் டாலர் மதிப்புள்ள கருப்புப் பணம், தனிநபர் சேமிப்புக் கணக்குகளில் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டில் கடுமையான சட்டங்கள் இருந்தபோதிலும், கருப்புப்பணம் வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ளது. வருமான வரிச் சட்டம், 1961, வெளிநாட்டு பணப் பரிவர்த்தனை மேலாண்மைச் சட்டம், 1999 (FEMA), மத்திய கலால் மற்றும் சுங்கவரிச் சட்டம், 1994, சேவை வரிச் சட்டம், 194 [7], வணிக வரிச் சட்டம் ஆகியவை இந்தியாவில் கருப்புப்பணத்தைக் கட்டுப்படுத்த உள்ள சட்டங்கள்:ஆகும்.
Also Read | கொரோனா இறப்பு சான்றிதழ்! வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட மத்திய அரசு!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR