80000 புள்ளிகளைக் கடந்த சென்செக்ஸ்! பட்ஜெட்டுக்கு முன்னர் வேகம் பிடிக்கும் பங்குச்சந்தை!

Sensex Touched Record High : இந்திய பங்குச்சந்தை முதன்முறையாக 80000 புள்ளிகளைத் தாண்டியது... இந்திய பங்குச்சந்தை உச்சத்தை எட்டியது, பட்ஜெட்டுக்கு முன்பே சாதனைகளை படைத்து வருகிறது சென்செக்ஸ்.

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 2, 2024, 02:38 PM IST
  • 80000 புள்ளிகளைத் தொட்ட சென்செக்ஸ்
  • இந்திய பங்குச்சந்தை உச்சத்தை எட்டியது
  • பட்ஜெட்டுக்கு முன்பே சாதனைகளை படைக்கும் சென்செக்ஸ்.
80000 புள்ளிகளைக் கடந்த சென்செக்ஸ்! பட்ஜெட்டுக்கு முன்னர் வேகம் பிடிக்கும் பங்குச்சந்தை! title=

நியூடெல்லி: பட்ஜெட் 2024க்கு முன் பங்குச் சந்தை புதிய உச்சத்தைத் தொட்டது. சென்செக்ஸ் புதிய சாதனைகளை படைத்து வருகிறது. ஜூலை 2 செவ்வாய் அன்று சென்செக்ஸ் புதிய உச்சத்தை தொட்டது. சந்தை துவங்கும் முன் சென்செக்ஸ் 80 ஆயிரத்தை தொட்டது. முதன்முறையாக சென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்ந்து 80,000 புள்ளிகளைத் தொட்டது.

80,000 புள்ளிகளைக் கடந்த சென்செக்ஸ்

காலையில் சந்தை தொடங்கியதுமே 9.02 மணியளவில், சென்செக்ஸ் உயர்ந்து 80,129 புள்ளிகளைத் தொட்டது. அதே நேரத்தில், நிஃப்டி 60.02 புள்ளிகள் அல்லது 0.25 சதவீதம் அதிகரிப்புடன் 24,202.20 என்ற அனைத்து நேர உயர் மட்டத்தைத் தொட்டது. இருப்பினும், சந்தை துவங்கிய பிறகு, இந்த உயர்வு சற்று தணிந்து சென்செக்ஸ் சரிந்தது. 

இன்று அதிக லாபம் கொடுத்த பங்குகள்

வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 379.68 புள்ளிகள் உயர்ந்து 79,855.87 புள்ளிகளை எட்டியது. நிஃப்டி 94.4 புள்ளிகள் உயர்வுடன் 24,236.35 புள்ளிகளை எட்டியது. ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், இன்ஃபோசிஸ், பார்தி ஏர்டெல், ஹெச்டிஎப்சி வங்கி, பவர் கிரிட் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் அதிக லாபம் பெற்றன.

மேலும் படிக்க | திருமணத்திற்கு பணம் தேவைப்பட்டால் கவலையை விடுங்க: PF கணக்கில் ஈசியா எடுக்கலாம்

இன்று அதிக நட்டம் கொடுத்த பங்குகள்

டாடா மோட்டார்ஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், கோடக் மஹிந்திரா வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கி பங்குகள் நஷ்டத்தில் இருந்தன.

சர்வதேச சந்தை நிலவரம்

ஆசிய சந்தைகளில், ஜப்பானின் நிக்கேய், ஹாங்காங்கின் ஹாங் செங் மற்றும் சீனாவின் ஷாங்காய் காம்போசிட் லாபத்தில் இருந்தன, அதே நேரத்தில் தென் கொரியாவின் கோஸ்பியின் உலகளாவிய எண்ணெய் தரமான ப்ரெண்ட் ஃப்யூச்சர்ஸ் ஒரு பீப்பாய்க்கு 0.23 சதவீதம் லாபத்துடன் வர்த்தகம் செய்யப்பட்டது.

சந்தை தரவு, வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (foreign institutional investors (FIIs)) திங்களன்று மூலதன சந்தையில் விற்பனையாளர்களாக இருந்தனர். அவர்கள் ரூ 426.03 கோடிக்கு விற்றனர்.

(பொறுப்புத் துறப்பு - பங்குச்சந்தை தரவுகள் அவ்வப்போது மாறிக்கொண்டிருப்பவை. இந்த கட்டுரை எழுதப்பட்டபோது இருந்த நிலவரத்தின் படி எழுதப்பட்டக் கட்டுரை இது. பங்குச்சந்தையில் முதலீடு செய்வதற்கு முன், கண்டிப்பாக உங்கள் சந்தை நிபுணர்களிடம் ஆலோசனை பெறவும். இந்தக் கட்டுரையில் உள்ள செய்திகளை ஜீ மீடியா தனிப்பட்ட முறையில் உறுதி செய்யவில்லை)

மேலும் படிக்க | ஹிண்டன்பர்க்கிற்கு செபி நோட்டீஸ் எதிரொலி! ஆர்டிஐ தாக்கல் செய்ய தயாராகும் ஹிண்டன்பர்க்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News