MPC நிதிக் கொள்கைக் குழு, ரெப்போ ரேட்டை திருத்துமா? இல்லை என்றால் காரணம் இதுதான்

 RBI MPC Meeting From October 4: வட்டி விகித நிர்ணயக் குழுவான நாணயக் கொள்கைக் குழுவின் கூட்டத்தில் என்னவெல்லாம் நடக்கும்? எந்த எதிர்ப்பார்ப்புகள் பொய்த்துப் போகும்?  

Written by - Malathi Tamilselvan | Last Updated : Oct 4, 2023, 09:41 AM IST
  • ஆர்பிஐ வட்டி விகித நிர்ணயக் குழு
  • நாணயக் கொள்கைக் குழுவின் கூட்டம் இன்று தொடங்குகிறது
  • கொள்கை முடிவுகள் அக்டோபர் 6 வெளியிடப்படும்
MPC நிதிக் கொள்கைக் குழு, ரெப்போ ரேட்டை திருத்துமா? இல்லை என்றால் காரணம் இதுதான் title=

புதுடெல்லி: இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வட்டி விகித நிர்ணயக் குழுவான நாணயக் கொள்கைக் குழுவின் (MPC)  மூன்று நாள் கூட்டம் இன்று தொடங்குகிறது. ஜூலை மாதத்தில் உள்நாட்டு பணவீக்கம் 7.4% வரை அதிகரித்திருந்தாலும் ஆகஸ்ட் மாதத்தில் இது 6.8% ஆக குறைந்தது என்ற பின்னணியில் இருந்து பார்க்க வேண்டும் என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.உள்நாட்டு பணவீக்கம் இன்னும் இரு மாதங்களில் அதாவது டிசம்பரில் குறைந்து 5.5% ஆக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படி பல்வேறு ஊகங்கள் மற்றும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிசர்வ் வங்கியின் (Reserve Bank of India) நிதிக் கொள்கைக் குழு மதிப்பாய்வு குழுக்கூட்டம் தொடங்கவிருக்கிறது. 

நிதிக் கொள்கைக் குழு
திருத்தப்பட்ட RBI சட்டம், 1934 இன் பிரிவு 45ZB இன் கீழ், ஆறு உறுப்பினர்களைக் கொண்ட நாணயக் கொள்கைக் குழுவை (MPC) அமைக்க மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது. பணவீக்க இலக்கை அடைய தேவையான கொள்கை விகிதத்தை இந்தக் குழு தீர்மானிக்கிறது.

ரிசர்வ் வங்கி கவர்னர் தலைமையில், மத்திய வங்கியின் இரண்டு பிரதிநிதிகள் மற்றும் மூன்று வெளி உறுப்பினர்கள் அடங்கிய குழு, மூன்று நாட்கள் நடைபெறும் இந்தக் கூட்டங்களில், நிலவும் உள்நாட்டு மற்றும் பொருளாதார சூழ்நிலைகள் குறித்து விவாதிக்கும்.

மேலும் படிக்க | RBI Repo Rate:வட்டி விகிதங்களை மாற்றுமா ரிசர்வ் வங்கி? கடன் வாங்கியவர்களுக்கு குட் நியூஸ்?

இன்று முதல் மூன்று நாட்கள் அதாவது அக்டோபர் 4 முதல் அக்டோபர் 6 வரை நடைபெறும் நிதிக் கொள்கைக் குழுவின் கூட்டத்தில் (RBI MPC Meeting) எடுக்கப்பட்ட இறுதி நாளான வெள்ளிக்கிழமை அளிக்கப்படும். இந்தக் கூட்டத்தில் ரெப்போ விகிதம் மாற்றப்படாமல் 6.5 சதவீதத்திலேயே வைக்கப்படலாம் என்று பல நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதனால், சில்லறை மற்றும் கார்ப்பரேட் கடன் வாங்குபவர்களுக்கான வட்டி விகிதங்களில் மாறுதல் செய்யப்படாத நிலை உருவாகும். இதற்கு முன்னதாக, ஜூன் முதல் வாரத்தில் நடைபெற்ற நிதிக் கொள்கைக் குழுவின் ஆலோசனைக் கூட்டத்திலும் ரெப்போ விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ரிசர்வ் வங்கியின் இன்றைய நிதிக் கொள்கை குழு கூட்டத்தில் எடுக்கப்போகும் முடிவுகள் பல்வேறு காரணிகளின் அடிப்படையில் இருக்கும் என்பதால், நிபுணர்கள் சொல்வதெல்லாம் வெறும் அனுமானங்கள் மட்டுமே என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

ரெப்போ விகித உயர்வு தொடங்கியது எப்போது?
ரஷ்யா-உக்ரைன் போர் தொடங்கியபோது, சர்வதேச சூழலை கருத்தில் கொண்டு, ரிசர்வ் வங்கி மே 2022 இல் கொள்கை விகிதத்தை அதிகரிக்கத் தொடங்கியது. மே மாதத்திற்கு முன்பு ரெப்போ விகிதம் 4 சதவீதமாக இருந்தது. இந்த ஆண்டு பிப்ரவரியில் ரெப்போ விகிதம் 6.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதன்பிறகு, தொடர்ந்து கடந்த மூன்று இருமாத நாணயக் கொள்கை மறுஆய்வுக் கூட்டங்களில், அதில் எந்த மாற்றமும் செய்யப்படாமல் உள்ளது.  

மேலும் படிக்க | REPO: ரெப்போ விகிதத்திற்கும் பணவீக்கத்திற்கும் இப்படி ஒரு கனெக்‌ஷனா? 

6.5 சதவீத ரெப்போ ரேட்
பாங்க் ஆப் பரோடாவின் தலைமைப் பொருளாதார நிபுணர் மதன் சப்னாவிஸ் அண்மையில் ரெப்போ விகிதம் தொடர்பாக கருத்து தெரிவித்தபோது, இம்முறை கொள்கை நிலைப்பாடு தற்போதுள்ள விகிதக் கட்டமைப்பிலேயே தொடர வாய்ப்புள்ளது என்று கூறியிருந்தார்.

ரெப்போ விகிதம் 6.5 சதவீதமாகவே தொடர்ந்தாலும், சில்லறை பணவீக்கம் 6.8 சதவீதம் என்ற உயர்ந்த நிலையிலேயே உள்ளதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் இது குறையலாம் என்று எதிர்ப்பார்க்கப்பட்டாலும், காரீஃப் உற்பத்தி குறித்த அச்சம் காரணமாக சில்லறை பணவீக்கம் அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

2 மாதங்களுக்கு ஒருமுறை கூட்டம் நடைபெறும்
இந்தக் கூட்டம் 2 மாதங்களுக்கு ஒருமுறை ரிசர்வ் வங்கியின் நிதிக் குழுவால் நடத்தப்படுகிறது. 3 நாட்கள் நடைபெறும் இந்த கூட்டம் மூன்றாவது நாளில் ரிசர்வ் வங்கி கவர்னர் செய்தியாளர் சந்திப்பில் குழுவின் முடிவை அறிவிக்கிறார். இந்த முறை கூட்டம் இன்று முதல் அதாவது 4 அக்டோபர் 2023 இல் தொடங்குகிறது மற்றும் அக்டோபர் 6 ஆம் தேதி கொள்கை அறிவிக்கப்படும்.

மேலும் படிக்க | EPFO Update: பணிஓய்வுக்கு முன்னரே பிஎஃப் தொகையை எடுக்க முடியுமா? எவ்வளவு எடுக்கலாம்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News