Petrol, Diesel Price Update: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

மக்களின் அன்றாட தேவைகளில் ஒன்றாக உள்ள பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளின் இன்றைய நிலவரம் பற்றி அறிந்து கொள்ளலாம். 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 19, 2021, 10:15 AM IST
Petrol, Diesel Price Update: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் title=

மக்களின் அன்றாட தேவைகளில் ஒன்றாக உள்ள பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளின் இன்றைய நிலவரம் பற்றி அறிந்து கொள்ளலாம். 
சென்னையில் இன்று பெட்ரோல் விலையில் எவ்வித மாற்றமும் இன்றி லிட்டருக்கு ₹92.43 என்ற அளவிலும், அதே போன்று, டீசல் விலையும் எவ்வித மாற்றமும் இன்றி லிட்டருக்கு ₹85.75 என்ற அளவிலும் விற்பனை செய்யப்படுகிறது.  இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வரை மாதம் இரு முறை,  பெட்ரோல் மற்றும் டீசலின் விலையை நிர்ணயம் செய்யும் முறை  பழக்கத்தில் இருந்தது. 

ஆனால், தற்போது, பெட்ரோல், டீசல் விலைகள் தினசரி நிர்ணயிக்கப்படுகின்றன. சர்வதேச நிலையில், கச்சா எண்ணெய் விற்கப்படும் விலைக்கு ஏற்ப, பெட்ரோல் மற்றும் டீசல்  விலைகள் தினமும் நிர்ணயம் செய்யப்படுகின்றன.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க கடந்த ஆண்டு மார்ச் இறுதியில் பொது முடக்கம்  அமல்படுத்தப்பட்டது. அதை அடுத்து பெட்ரோல் டீசல் விலைகளில் மாற்றம் இல்லாமல் இருந்தது.  அதன் பிறகு விலைகளில் மாற்றம் ஏற்பட்டது. 

ALSO READ | கிரிப்டோகரன்சி Bitcoin மதிப்பு $56,580, அதன் மதிப்பு அதிகரிப்பதன் மர்மம் என்ன?

சென்னையில் நேற்றும்  பெட்ரோல்  விலை ₹92.43  என்ற அளவிலும், டீசல் லிட்டர் ₹85.75 என்ற அளவிலும் விற்பனை செய்யப்பட்டது.  இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் ஏதும் இன்றி அதே விலையில் நீடிக்கிறது. 

பெட்ரோல் விலை கடந்த ஒரு வருடத்தில் லிட்டருக்கு ₹21.58 என்ற அளவில் உயர்ந்துள்ளது, டீசல் விலை லிட்டருக்கு ₹19.18 என்ற அளவில் அதிகரித்துள்ளது.

டெல்லியில் பெட்ரோல் விலையில் மத்திய அரசு லிட்டருக்கு ₹32.98 ஆகவும், விற்பனை வரி அல்லது மாநில அரசின் மதிப்பு கூட்டு வரி VAT ₹19.55 ஆகவும் உள்ளது.
டீசலைப் பொறுத்தவரை, மத்திய கலால்  வரி ₹31.83 என்ற அளவிலும், மதிப்பு கூட்டு வரி  ₹10.99 ஆகவும் உள்ளது. தவிர, விலையில் ஒரு லிட்டருக்கு  ஆன, குறைந்தபட்சம டீலர் கமிஷன்  ₹2.6 மற்றும் டீசலுக்கு ₹2 என்பதும் அடங்கும்.

ALSO READ | உங்கள் பட்ஜெட்டிற்கு ஏற்ற சிறந்த ஸ்மார்ட்போன்கள்; ஒரு அலசல்
 

 

Trending News