நிதி அமைச்சகம் சனிக்கிழமையன்று வெளியிடப்பட்ட அறிவிப்பில், ஆதார் உடனான நிரந்தர கணக்கு எண்ணை(PAN) இணைப்பதற்கான காலக்கெடுவை செப்டம்பர் 30-லிருந்து டிசம்பர் 31 வரை நீட்டித்துள்ளது.
இந்த அறிவிப்பை நிதி அமைச்சகத்தின் ஒரு பிரிவான மத்திய நேரடி வரி வாரியம் வெளியிட்டுள்ளது. தனிநபர்கள் தங்கள் நிரந்தர கணக்கு எண்ணை(PAN) ஆதார் உடன் இணைப்பதற்கான காலக்கெடுவை அரசாங்கம் நீட்டிப்பது இது ஏழாவது முறையாகும். இதற்கு முன்னதாக காலக்கெடு மார்ச் 31 அன்று நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இரண்டையும் இணைப்பது, காலக்கெடுவுக்கு முன், முக்கியமானது, ஏனெனில் இணைக்கப்படாவிட்டால் PAN அட்டை செயல்படாது. இணைப்புகள் இல்லாவிட்டால் முதலீடுகள், வரி தாக்கல் மற்றும் கடன்கள் தொடர்பான செயல்முறைகள் கடினமாகிவிடும் என்றும் விளக்கப்பட்டுள்ளது.
Central Board of Direct Taxes (CBDT) extends the date for linking PAN & Aadhaar from 30th September, 2019 to 31st December, 2019. pic.twitter.com/nGsULxLnuj
— ANI (@ANI) September 28, 2019
முன்னதாக கடந்த ஜூலை மாதம், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆற்றிய பட்ஜெட் உரையில், வருமான வரி தாக்கல் உள்ளிட்ட அனைத்து நோக்கங்களுக்காக ஆதார் அட்டை தற்போது PAN அட்டையாக இரட்டிப்பாகும் என்று கூறியிருந்தார்.
120 கோடிக்கும் அதிகமான இந்தியர்கள் இப்போது ஆதார் வைத்திருக்கிறார்கள். எனவே, வரி செலுத்துவோரின் எளிமை மற்றும் வசதிக்காக, PAN மற்றும் ஆதார் ஆகியவற்றை ஒன்றுக்கொன்று மாற்றக்கூடியதாக மாற்றவும், PAN இல்லாதவர்கள் தங்கள் ஆதார் எண்ணை மேற்கோள் காட்டி வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்ய அனுமதிக்கவும், பான் மேற்கோள் காட்ட வேண்டிய இடங்களில் பயன்படுத்தவும் இந்த முறைமை செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டதாக குறிப்பிட்டிருந்தார்.
மேலும், தங்கள் ஆதாரை PAN உடன் இணைத்தவர்கள் IT சட்டத்தின் கீழ் PAN பதிலாக ஆதார் அட்டையை பயன்படுத்தலாம் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். ஆதார் வைத்திருப்பவர்களுக்கு எளிதில் பான் அட்டை பெறுவதையும் சீதாராமன் முன்மொழிந்தார். அதேவேளையில், இணக்கத்தை மேம்படுத்துவதற்காக குறிப்பிட்ட சில உயர் மதிப்பு பரிவர்த்தனைகளுக்கு பான் / ஆதார் கட்டாய மேற்கோளை நிதியமைச்சர் அறிவித்தார். மேலும், ஆதார்- பான் உடன் இணைக்கத் தவறியவர்களுக்கு தொடர்புடைய அபராத விதிகளை திருத்துவதற்கும் பட்ஜெட் முன்மொழிந்தது.
இந்நிலையில் தற்போது ஆதார் உடனான நிரந்தர கணக்கு எண்ணை(PAN) இணைப்பதற்கான காலக்கெடுவை மத்திய அமைச்சகம் நீட்டித்துள்ளது குறிப்பிடத்தக்கது.