EPFO 3.0: பிஎஃப் உறுப்பினர்களுக்கு 2025 ஆம் ஆண்டில் பல நல்ல செய்திகள் காத்துக்கொண்டு இருக்கின்றன. ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) செயல்பாடுகளில் அரசாங்கம் பல மேம்பாடுகளை கொண்டு வரவுள்ளது. அதில் பெரிய சீர்திருத்தங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இதன் மூலம் பிஎஃப் கணக்கின் செயல்பாடுகள் மற்றும் நிர்வாகம் மிக எளிதாகிவிடும் என நம்பப்படுகின்றது. 2025 -இல் இபிஎஃப் உறுப்பினர்களுக்கு (EPF Members) கிடைக்கக்கூடிய மாற்றங்கள் என்ன? இதனால் கிடைக்கவுள்ள வசதிகள் என்ன? அனைத்தையும் இந்த பதிவில் விரிவாக காணலாம்.
வங்கி முறை போன்ற இபிஎஃப் அமைப்பு
EPFO இன் கீழ் தற்போது நடைமுறையில் உள்ள செயல்முறை பழையது. இந்த முழு செயல்முறையையும் நவீனமயமாக்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வங்கி முறையைப் போலவே, EPFO அமைப்பையும் மத்திய அரசு சீரமைக்கப் போகிறது.
EPF Subscribers: இதன் மூலம் பணியாளர்கள் அதிக பயன் பெறுவார்கள்
இன்று வங்கி தொடர்பான அனைத்து பணிகளும் எப்படி ஆன்லைனில் செய்யப்படுகின்றனவோ, அதே வழியில் வரும் காலத்தில் இபிஎஃப்ஓ தொடர்பான அனைத்து பணிகளும் ஆன்லைனில் கிடைக்கும் என தொழிலாளர் அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வங்கி டெபிட் கார்டுகளைப் போலவே EPFO கணக்கு வைத்திருப்பவர்களும் இபிஎஃப்ஓ கார்டுகள் (EPFO ATM Cards) வழங்கப்படும். இதுவரை இபிஎஃப் கணக்கில் (EPF Account) உள்ள பணத்தை எடுக்க நீண்ட செயல்முறை இருந்தது. ஆனால் இப்போது பணம் எடுப்பது ஏடிஎம்மில் பணம் எடுப்பது போல் எளிதாக இருக்கும்.
தற்போது இது ஒரு முன்மொழிவாகவே உள்ளது. இது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இது செயல்படுத்தப்பட்டால், இபிஎஃப் உறுப்பிபர்களுக்கான செயல்பாடுகள் மிக எளிதாகிவிடும்.
Retirement: பனி ஓய்வின் போதும் பலனளிக்கும்
மற்றொரு முக்கியமான சீர்திருத்தம் குறித்தும் பேசப்பட்டு வருகின்றது. தற்போது ஊழியர்களின் சம்பளத்தில் 12 சதவீத தொகையை மட்டுமே EPFO-ல் டெபாசிட் செய்ய முடியும். ஆனால் வரும் காலங்களில், உங்கள் வருமானத்தில் அதிகமாக டெபாசிட் செய்ய நீங்கள் விரும்பினால், அதுவும் சாத்தியமாகும். அதாவது, 12 சதவீதத்துக்கு மேல் பணத்தை பிஎஃப்-ல் போடுவதற்கான வாய்ப்பை உறுப்பினர்கள் பெறக்கூடும். இது உங்களின் ஓய்வூதியத்திற்கு மேலும் பலனளிக்கும். உங்கள் விருப்பப்படி எதிர்கால பாதுகாப்பை அதிகரிக்க இது ஒரு வாய்ப்பாக அமையும்.
நாமினிக்கான பரிந்துரை
கணக்கு வைத்திருப்பவர் அல்லது அவரது மனைவி இறந்துவிட்டால், அவர்களின் குழந்தைகளுக்கு பணம் கிடைக்கும் தற்போதைய செயல்முறை மிகவும் நீண்ட மற்றும் சிக்கலான செயல்முறையாக உள்ளது. இப்போது அரசாங்கம் அதை எளிதாக்குவது தொடர்பான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அதாவது இனி பிஎஃப் உறுப்பினரின் பிள்ளைகளுக்கு எந்த வித சிக்கலும் இல்லாமல் எளிய வழியில் விரைவாக பிஎஃப் தொகை கிடைக்கும்
இந்த மாற்றங்களை 2025 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் எத்ரிபார்க்கலாம்
இந்த மாற்றங்கள் ஏற்பட்டால் சம்பள வர்க்கத்தில் உள்ள ஏகப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் கிடைக்கும். ஆனால், இந்த மாற்றங்களும் மேம்பாடுகளும் எப்போது நடைமுறைக்கு வரும்? இந்த மாற்றங்களை 2025 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் செயல்படுத்த அரசாங்கம் தயாராகி வருவதாக கூறப்படுகின்றது. அதாவது அடுத்த ஆண்டு EPFO அமைப்பு உங்களுக்காக புதிய பாணியில் தயாராகிவிடும். இவை அனைத்தும் உண்மையாக நடைமுறைப்படுத்தப்பட்டால் அது ஊழியர்களுக்குக் கிடைக்கும் மிகப்பெரிய பரிசாக இருக்கும் என்பதில் சந்தெகமில்லை.
மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயது உயருமா...? வந்தது பெரிய அப்டேட்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ