Russian Invasion: உக்ரைன் ரஷ்யா மோதலின் எதிரொலியால் முடங்கும் நீலகிரி தேயிலை ஏற்றுமதி

ரஷ்ய, உக்ரைன் போர் எதிரொலி நீலகிரியிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் 18 முதல் 20 மில்லியன் கிலோ தேயிலை ஏற்றுமதி பாதிப்புக்குள்ளாகும்

Edited by - Malathi Tamilselvan | Last Updated : Mar 1, 2022, 09:45 PM IST
  • ரஷ்யாவின் ஆக்ரமிப்பால் இந்திய ஏற்றுமதி பாதிப்பு
  • தேயிலை ஏற்றுமதி முடக்கம்
  • அமெரிக்கத் தடைகளால் ரஷ்ய ரூபிளில் வர்த்தகம் நடைபெறும்
Russian Invasion: உக்ரைன் ரஷ்யா மோதலின் எதிரொலியால் முடங்கும் நீலகிரி தேயிலை ஏற்றுமதி title=

உதகமண்டலம்: ரஷ்ய, உக்ரைன் போர் எதிரொலி நீலகிரியிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் 18 முதல் 20 மில்லியன் கிலோ தேயிலை ஏற்றுமதி பாதிப்புக்குள்ளாகும்

ரஷ்ய, உக்ரைன் போர் நடைபெற்று வரும் நிலையில் இந்தியாவில் இருந்து 40 மில்லியன் கிலோ தேயிலை ஏற்றுமதி செய்யப்படுவது பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் 18 முதல் 20 மில்லியன் கிலோ தேயிலை தேங்கிக்கிடக்கிறது. ரஷ்யாவிற்கும், உக்ரைனிற்கும் ஏற்றுமதி செய்யப்படும் தேயிலை வர்த்தகம் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்தத் தகவலை சர்வதேச தேயிலை ஏலம் நிறுவனத்தின் தலைவரும்,தேயிலை விற்பனை ஆலோசகருமான என்.ஸ்ரீராம் தெரிவித்தார். 

மேலும் படிக்க | ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும் அவரது ரகசிய மகள்களும்

இந்தியாவிலிருந்து ஆண்டுதோறும் 40 மில்லியன் கிலோ தேயிலை ரஷ்யாவிற்கும், இதே போன்று 15 மில்லியன் கிலோ உக்ரைனிற்கும் ஆண்டுதோறும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது, 

இதில் 40 சதவீதம் வரை நீலகிரியில் உற்பத்தி செய்யப்படும் தேயிலைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க டாலரில் நடைபெற்று வந்த இந்த வர்த்தகம், தற்போது ரஷ்யாவிற்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் விதித்துள்ள பொருளாதார தடை மற்றும் உக்ரைன் போரினால் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் அரசியல் ஆதரவை கோரும் உக்ரைன் அதிபர்

இதன் காரணமாக ரஷ்யாவின் கரன்சியான ரூபல் மூலம் வர்த்தகத்தை தொடங்கும் நடவடிக்கையில் இந்திய அரசு ஈடுபட்டு வருகிறது, இந்தப் பணிகள் நிறைவடைந்தால் ரஷ்யாவிடம் இருந்து நாம் இறக்குமதி செய்யும் கச்சா எண்ணை மற்றும் உரம் உள்ளிட்ட பொருட்களை ரூபல் மூலம் பெறலாம்.

இறக்குமதிக்கு ஈடாக தேயிலையை அந் நாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் நடவடிக்கையில் இந்திய வர்தக அமைப்பு ஈடுபட்டுவருகிறது.

மேலும் படிக்க | ‘எங்கள் கண்ணீரைப் பாருங்கள்; ரஷ்யாவின் பொய்யை அல்ல’ : ஐநாவில் உக்ரைன் 

இப்பணிகள் விரைந்து முடிந்தால் ஏற்றுமதிக்கான சாதகமான சூழ்நிலைகள் உருவாகும் என்று தேயிலை வர்த்தக நிபுணர் தெரிவித்தார். 

தென்னிந்தியாவில் இருந்து அதிகபட்சமாக ஆர்த்தோடக்ஸ் தேயிலைகள் ரஷ்யாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.

நீலகிரியில் உற்பத்தி செய்யப்படும் சிடிசி ரக தேயிலையினை அதிகளவு ரஷ்ய மக்கள் விரும்புகின்றனர். இவை தற்போது ஏற்றுமதி செய்யப்படாமல் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தொடரும் பட்சத்தில் தேயிலை ஏற்றுமதி வெகுவாக பாதிக்கப்படும் என்றும், நீலகிரி மாவட்டத்தின் பொருளாதாரத்தில் அதன் பாதிப்பு இருக்கும் என்று தேயிலை வர்தகர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க | Russia Ukraine Crisis: ‘மிருகத்தனமான’ கிளஸ்டர் வெடிபொருட்களை பயன்படுத்துகிறது ரஷ்யா - உக்ரைன் புகார் 

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News