கல்யாணத்திற்கு PF கணக்கில் கை வைக்கப்போறீங்களா... அப்ப இதை கொஞ்சம் பாருங்க!

EPFO: வருங்கால வைப்பு நிதி திருமண காரணங்களுக்காக வருங்கால வைப்பு நிதி கணக்கில் இருந்து முன்பணத்தை திரும்பப் பெறுவது பற்றிய விரிவான தகவலை அளித்துள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Jun 16, 2023, 07:33 PM IST
  • EPFOஇல் அரசு நல்ல வட்டியை கொடுக்கிறது.
  • இதன் வட்டி விகிதம் 8.15 சதவீதமாக மார்ச் மாதத்தில் அதிகரிக்கப்பட்டுள்ளது.
  • 3 முறைக்கு மேல் வருங்கால வைப்பு நிதி கணக்கின் இருப்பை முன்கூட்டியே திரும்பப் பெற முடியாது.
கல்யாணத்திற்கு PF கணக்கில் கை வைக்கப்போறீங்களா... அப்ப இதை கொஞ்சம் பாருங்க! title=

EPFO Advance For Marriage: ஶோவருங்கால வைப்பு நிதி என்பது மாதச் சம்பளம் பெறும் வகுப்பினருக்கான மிகவும் பிரபலமான சேமிப்பு திட்டங்களில் ஒன்றாகும். பணியாளர் வருங்கால வைப்பு நிதியில் (EPF) முதலீடு செய்வது எந்த ஒரு பணியாளருக்கும் சிறந்த தேர்வாகக் கருதப்படுகிறது. ஊதியம் பெறும் வகுப்பினரின் சம்பளத்தில் ஒரு பகுதி அவர்களின் EPF கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது. 

அதற்கு அரசு நல்ல வட்டியை கொடுக்கிறது. வருங்கால வைப்பு நிதி கணக்கின் முதிர்வு காலம் 15 ஆண்டுகள். இந்த கணக்கில் டெபாசிட் செய்யப்படும் பணம், EPFO சந்தாதாரர்களுக்கு கடினமான காலங்களில் நிதி உதவி அளிக்கிறது.

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அதாவது EPFO, அதன் சந்தாதாரர்களை பல சந்தர்ப்பங்களில் வருங்கால வைப்பு நிதியில் டெபாசிட் செய்த பணத்தை முன்கூட்டியே திரும்பப் பெற அனுமதிக்கிறது. நீங்கள் உங்கள் வேலையை இழந்தாலோ அல்லது வீடு வாங்க விரும்பினாலோ அல்லது உங்களின் திருமணம் அல்லது பிள்ளைகள், குடும்ப உறுப்பினர்களின் திருமணம் போன்றவற்றின் போது வருங்கால வைப்பு நிதி கணக்கில் இருந்து பணத்தை எடுக்கலாம்.

மேலும் படிக்க | VPF Withdrawal Rules: இதற்கான வழிமுறை என்ன? முழு விவரம் இதோ

சமீபத்தில், ஒரு ட்வீட் மூலம், EPFO திருமண காரணங்களுக்காக வருங்கால வைப்பு நிதி கணக்கில் இருந்து முன்பணத்தை திரும்பப் பெறுவது பற்றிய விரிவான தகவலை அளித்துள்ளது.

EPFO திருமண முன்பண வசதி

EPFO அந்த ட்வீட்டில், EPFO திருமண அட்வான்ஸ் (EPFO Advance For Marriage) வசதியை சில நிபந்தனைகளுடன் பெறலாம் என்று கூறியுள்ளது. இதன்படி, EPFO சந்தாதாரர் தனது திருமணம் அல்லது அவரது சகோதரர்-சகோதரி அல்லது அவரது மகன்-மகளின் திருமணத்திற்கான செலவுகளை PF இருப்பு மூலம் நிர்வகிக்க விரும்பினால், EPFO இந்த சந்தர்ப்பங்களுக்கு அல்லது முதிர்ச்சியின் நேரத்தில் அதில் இருந்து முன்பணம் எடுக்க உங்களை அனுமதிக்கும். இது பணத்தை முன்கூட்டியே திரும்பப் பெறும் வசதியை வழங்குகிறது. EPFO திருமண முன்பண வசதியின் கீழ், உங்கள் பங்களிப்பில் 50 சதவீதத்தை வட்டியுடன் சேர்த்து திரும்பப் பெறலாம்.

இந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும்

இருப்பினும், EPFO திருமண முன்பண வசதியைப் பெற சில நிபந்தனைகள் உள்ளன. இந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்த பின்னரே, ஒரு EPFO சந்தாதாரர், வருங்கால வைப்பு நிதி கணக்கிலிருந்து முன்பணத்தை எடுக்க முடியும். EPFO இன் படி, நீங்கள் EPFO உடன் ஏழு வருடங்கள் இணைந்திருந்தால், இந்த வசதியை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும். இருப்பினும், படிப்பு அல்லது திருமணத்தின் போது மொத்தமாக 3 முறைக்கு மேல் வருங்கால வைப்பு நிதி கணக்கின் இருப்பை முன்கூட்டியே திரும்பப் பெற முடியாது.

வட்டி விகிதம்

மார்ச் மாதத்தில், 2022-23 ஆம் ஆண்டிற்கான பணியாளர் வருங்கால வைப்பு நிதியின் (EPF) வட்டி விகிதத்தை அதிகரிப்பதாக EPFO அறிவித்தது. தகவல்களின்படி, இப்போது ஊழியர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8.15 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த வட்டி ஆண்டு அடிப்படையில் வழங்கப்படுகிறது.

மேலும் படிக்க | Employee Pension Scheme: ஓய்வூதியம் தொடர்பான முக்கிய அறிவிப்பு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News